புதன், 18 டிசம்பர், 2013

கல்லீரல் (LIVER)

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. மனிதனின் உடல் சீராக இயங்க தேவையான ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்களை செய்வதோடு மட்டுமில்லாமல்,கெட்டுப் போனாலோ அல்லது அடிபட்டாலோ , மீண்டும் தன் பழைய நிலைக்கு வளர்ந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டுமே. மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலது பக்கம் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு .

கல்லீரல் மட்டும் தான் உணவை ஜீரணம் செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது என நம் உடலின் ரசாயனத் தொழிற்சாலையாக இயங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை கல்லீரல் தான் உருவாகுகிறது. கருவில் இருக்கும் குழந்தைகளின் சீரான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை உருவாகுகிறது.

இரத்த சிவப்பணுக்களைச் சீர்செய்து இரத்ததை தூய்மைப்படுத்தும். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரலின் பங்கு மிக முக்கியம் வாய்ந்தது. உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பதோடு நோய்த் தொற்றுக் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. உடல் இயக்கத்திற்கு தேவையான குளுகோஸ், கார்போஹைட்ரேட் , கொழுப்புச் சத்து போன்றவைகளை தேவைக்கேற்ப சேமித்து வைப்பதோடு , இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றையும் சேமித்து, உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரதச் சத்துகளையும் உருவாக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்பு கல்லீரல்.
Photo: கல்லீரல்  (LIVER)
* * * * * * * * * * * 

சிறுகுடலிலிருந்து உறிஞ்சப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அவையாவும்  உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றப்படுகிறது. மேலும் அதில் இருக்கும்  நஞ்சுகளைக் கழிவுப் பொருட்களாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றுகிறது.

முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், பசிக்கும் நேரத்தில் உண்ணாமல் இருப்பது, இரவு பத்துமணிக்கு மேல் அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, இரவு அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள்  சாப்பிடுபவர்கள்,  அடிக்கடி  காபி பழக்கமுள்ளவர்கள் , மது அருந்துவது, பான்பராக் போடுவது, புகை பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது, நீண்ட நாட்களாக வியாதிகளுக்கு மாத்திரைகளை உட்கொண்டு இருப்பது, மன அழுத்தம், மனக் கிளர்ச்சி போன்ற செயல்களால் கல்லீரல் வீக்கம் அடைகிறது. முக்கியமாக புகை, மது குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டுவதால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகிய நோய்  வர  வாய்ப்பு காரணமாக உள்ளது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கொழுப்பு படிந்த கல்லீரல் என  கல்லீரல் சுருங்கி புற்று நோய் உண்டாக வழி வகுக்கும்.
கல்லீரல் சரியாக இயங்காத பட்சத்தில் சருமத்தில் பாதிப்பு, உடலில் அதிகபடியான சோர்வும்  காணப்படும். கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களும்  காணப்படும். கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் பாதித்து இருக்கிறது என்பதன் அறிகுறியே ஆகும்.

கல்லீரல் பாதிகக்கபட்டவர்கள் அசைவ உணவுகள், எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், ஜங்க் புட்,  எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகள், மது, புகைப் பழக்கத்தை முற்றிலும்  தவிர்க்க வேண்டும்.  குறைந்தது ஆறு  மணி நேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உப்பு,  புளி குறைக்க வேண்டும், அதிக அளவு கீரைகள், பச்சை காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும்  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மண்ணீரல்  கோளாறுகள் ௭ல்லாம் வந்த சுவடு தெரியாமலும், பக்கவிளைவுகள் இல்லாமலும்  போகும். 

கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளை வராமல்  தடுக்க இனி  புகை ,மது, கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ளும் முறைகளை  தவிர்த்து  சீரான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு கல்லீரல் காப்போம்.  கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிப்பதால் ஆரோக்கியமாக வாழ கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமாகும்.

ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்)

ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்) பற்றிய சிந்திக்க வைக்கும் கட்டுரை ஒன்று நியூயார்க் டைம்ஸில் வந்துள்ளது.

1990ல் வெறும் 6 லட்சம் குழந்தைகளுக்கு இருந்த ஏ.டி.எச்.டி இன்று 35 லட்சம் குழந்தைகளுக்கு இருக்கிறது. 20 ஆண்டுகளில் எப்படி இத்தனை லட்சம் குழந்தைகளுக்கு இது வந்தது? மருந்து விற்பனையை அதிகரிக்க ஏ.டி.எச்.டி ஸ்டான்டர்டுகள் தளர்த்தபட்டன என்கிறது இக்கட்டுரை.

"ஏடிசிடி டிஸார்டர் என்பது மருந்துகம்பனிகள் திட்டமிட்டு ஆபத்தான, விலை உயர்ந்த மருந்துகளை விற்பனை செய்ய உருவாக்கிய சிண்ட்ரோம்"

Photo: ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்)
* * * * ** * * * * * * * * * * * * * * * * ** * *
ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்) பற்றிய சிந்திக்க வைக்கும் கட்டுரை ஒன்று நியூயார்க் டைம்ஸில் வந்துள்ளது.

1990ல் வெறும் 6 லட்சம் குழந்தைகளுக்கு இருந்த ஏ.டி.எச்.டி இன்று 35 லட்சம் குழந்தைகளுக்கு இருக்கிறது. 20 ஆண்டுகளில் எப்படி இத்தனை லட்சம் குழந்தைகளுக்கு இது வந்தது? மருந்து விற்பனையை அதிகரிக்க ஏ.டி.எச்.டி ஸ்டான்டர்டுகள் தளர்த்தபட்டன என்கிறது இக்கட்டுரை.

"ஏடிசிடி டிஸார்டர் என்பது மருந்துகம்பனிகள் திட்டமிட்டு ஆபத்தான, விலை உயர்ந்த மருந்துகளை விற்பனை செய்ய உருவாக்கிய சிண்ட்ரோம்"

நேரடியாக மக்களிடமே விளம்பரம் செய்து "உங்கள் குழந்தைகளுக்கு ஏ.டி.எச்.டி இருக்கலாம்" என மருத்துவர் மூலம் மக்களை அணுகாமல் நேரடியாக அணுகியதால் பீதியடைந்த பலரும் பள்ளியில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு எல்லாம் ஏ.டி.எச்.டி இருப்பதாக் சந்தேகப்பட்டு மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். ஏ.டி.ச்.டி விளம்பரங்கள் "நல்ல புத்திசாலிதனமாக இருக்கும் உங்கள் பிள்ளை குறைந்த மதிப்பெண்களை பரிட்சையில் பெறுகிறானா? அப்ப அவனுக்கு ஏ.டி.எச்.டி தான்" என விளம்பரம் செய்தன.

ஐன்ஸ்டீன் கூட பள்ளியில் குறைவான மதிப்பெண் பெற்றவர் தான். கணிதமேதை ராமானுஜம் ஆங்கிலத்தில் பெயில் ஆனவர்.

கேர்லஸ் ஆக இருப்பது, பொறுமையற்று இருப்பது எல்லாம் இன்று ஏ.டி.எ.ச்.டி ஆக கருதப்பட்டு அக்குழந்தைகளுக்கு மிக தீவிரமான ஏ.டி.எச்.டி இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் கொடுக்கபடுகின்றன. அதுபோக மருந்து கம்பனிகள் இப்போது நேரடியாக குழந்தைகளிடமே விளம்பரம் செய்கின்றன. பல காமிக் புத்தகங்களில் ஏச்.டி.எச்.டி மருந்துகள் விளம்பரங்கள் வெளிவருகின்றன.

இந்த மருந்துகளின் விளைவாக தூக்கமின்மை, பசி எடுக்காமை, ஹலூசினேஷன், மிக எக்ஸ்ட்ரீம் கேஸ்களில் தற்கொலை, மனநிலை பாதிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு நேர்கின்றன.

ஏ.டி.எச்.டி உண்மையான வியாதிதான். ஆனால் ஏ.டி.எச்.டி இல்லாத பலரும் இதற்கான சிகிச்சை எடுக்கும் வகையில் மருந்துகள் விற்பனை செய்யபட்டன என்கிறது இக்கட்டுரை.

ஆறு நிமிடம் ஒருவரிடம் பேசி, கேள்வி கேட்டு அவருக்கு ஏ.டி.எ.ச்.டி என "கண்டுபுடித்து" மருந்துகளை எழுதிகொடுக்கும் உதாரணம் ஒன்று கட்டுரையில் காட்டுகிறது. இவை எல்லாம் நிகழ ஆன நேரம் வெறும் 6 நிமிடங்கள்!!!!

ஒருவருக்கு ஏ.டி.எச்.டி இருக்கு என்பதை கண்டுபிடிக்க எந்த உறுதியான மெடிக்கல் சோதனையும் கிடையாது. மருந்து கம்பனிகளின் விளம்பர, ஸ்பான்சர் பணத்தில் இயங்கும் அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் ஏ.டி.எச்.டி வியாதி இருப்பதற்கான தரகட்டுப்பாட்டை தளர்த்திக் கொண்டே வருகிறது. இதன்படி

"கேர்லஸ் மிஸ்டேக் செய்வது"

"தன் முறை வரும்வரை காத்திருப்பதில் எரிச்சல் அடைவது"

இவை எல்லாம் ஏ.டி.எச்.டியின் அறிகுறியாக இன்று கருதப்படுகிறது.

ஏ.டி.எச்.டி மருந்து விற்பனை இன்று வெறும் 10 வருடங்களில் 2 பில்லியன் டாலரில் இருந்து 8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது!!!!!! @Neander Selvan ..நன்றி!

வரகு அரிசி சமையல்

Photo: வரகு அரிசி சமையல்
* * * * * * * * * * * * * * *
உணவே மருந்தாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எளிதாக ஜீரணிக்கும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்கி பலவித நோய்களை வர விடாமலும், வந்த நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவேதான் இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது.

நம் முன்னோர்கள் வரகு அரிசியில் அதிக சத்துக்கள் இருப்பதை உணர்ந்து அதிக அளவில் விரும்பி உட்கொண்டனர். பிற்காலங்களில் அரிசி உணவு பிரதானமாக புழங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் சமைப்பதற்கு எளிமையானது என்ற ஒன்றே தான் .சிறுதானியங்களின் (small millet's) பயன்பாடு மிகவும் குறைந்து காணாமல் போகும் சூழ்நிலையை மாற்றி இளைய தலை முறையினரும் சிறுதானியங்களின் அருமைகளை தெரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இது.

கோதுமை, அரிசியை விட வரகு  சிறந்த உணவு. ஏனெனில் இரும்பு, கால்சியம், பி வைட்டமின்கள்,புரதச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாகவும், பைட்டிக் அமிலமும், மாவுச்சத்தும் குறைவாகவும் காணப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். தாதுப்பொருட்களும் அதிகஅளவில் உள்ளன. அதிக சத்துக்கள் நிறைந்த வரகை உபயோகப்படுத்தி இட்லி,தோசை,ஆப்பம்,பனியாரம், பொங்கல்,
பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.

வரகு அரிசி கஞ்சி
---------------------------
தேவையான அளவு வரகு அரிசியை (இப்போது கடைகளில் உடைத்து குருணையாக கிடைக்கிறது) தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம், வெந்தயம், தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து குடிக்கலாம்.

விருப்பப்பட்டவர்கள் காய்கறிகள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிறிதளவு கொத்தமல்லி, புதினா இவற்றை சேர்த்து வதக்கி கொதிக்க வைத்த வரகு கஞ்சியில் மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வெஜிடபிள் வரகு கஞ்சியாகவும் குடிக்கலாம். மிகவும் அருமையாக இருக்கும்.

வரகு அரிசி உப்புமா
-----------------------------
வரகுஅரிசி,வெங்காயம்,கேரட்,குடமிளகாய்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி,பச்சை மிளகாய்,கடுகு,உளுத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய்,உப்பு தேவையான அளவு.
ரவை உப்புமா செய்வது போலவே இதையும் செய்யலாம். (ஒன்றுக்கு இரண்டு என்று கூடுதலாக தண்ணீர் விட வேண்டும்) .

வரகு புளியோதரை
----------------------------
வரகு ஒருகப், புளி தேவையான அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 6, தனியா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை கடுகு தாளிக்க, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

தனியா, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து புளிக் கரைசல், உப்பு, வறுத்த மிளகாய், தனியா பொடி,பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த வரகையும் சேர்த்து வேக வைத்து இறக்கவும்.

வரகு இட்லி
-------------------
வரகு 500 கிராம், வெள்ளை உளுந்து 200 கிராம், கொள்ளு, வெந்தயம் தலா 2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு.
வரகு, உளுந்து, கொள்ளு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து 5மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின் எப்போதும் போல இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்து சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

வரகு கார அப்பம்
-------------------------
வரகு 200 கிராம், உளுந்து 50 கிராம், தேங்காய் 1 கப் இஞ்சி 1துண்டு, புளித்த மோர் ,பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு, சின்ன வெங்காயம் 10.
வரகுடன் உளுந்து, இஞ்சி,பச்சை மிளகாய்,தேங்காய்,உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு,கடுகு.சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் சேர்த்து வதக்கி மாவில் கொட்ட வேண்டும். பின் குழிப்பணியார சட்டியில் ஊற்றி எடுத்தால் சுவையும், சத்தும் நிறைந்த வரகு கார அப்பம் ரெடி.

வரகு இனிப்பு பணியாரம்
-------------------------------------
வரகு 200 கிராம், உளுந்து 50 கிராம், தேங்காய் 1 கப் வாழைப்பழம் 1, வெல்லம் 100 கிராம், ஏலக்காய் 1, எண்ணெய் தேவையான அளவு

வரகையும் உளுந்தையும் அரைமணி நேரம் ஊறவைத்து வாழைப்பழம், தேங்காய், வெல்லம், ஏலக்காய், உப்பு என அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் உண்ண சூடான சுவையான வரகு இனிப்பு பணியாரம் ரெடி.

வரகு அரிசி பொங்கல்
--------------------------------
வரகு அரிசி 200 கிரம், பாசி பருப்பு 50 கிரம் மிளகு, சீரகம், இஞ்சி,நெய், எண்ணெய், முந்திரி பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, தண்ணீர் தேவையான அளவு.

மண்சட்டி (அ) குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் முந்திரி லேசாக தட்டி வைத்த மிளகு, சீரகம், பெருங்காயம், சிறுதுண்டுகளாக வெட்டிய இஞ்சி, கருவேப்பிலை தாளித்து வரகு அரிசி, பாசி பருப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இறக்கியதும் நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி வரகு அரிசி பொங்கல் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

வாயு கோளாறு (Flatulence)

Photo: வாயு கோளாறு  (Flatulence)
* * * * * * * * * * * * * * * * 
ஏப்பம், அடிவயிற்றில் வலி, குதத்தின்(Anus) வழியாக அதிக காற்று(gas) வெளியேறுவது போன்ற பிரச்சனை இருப்பர்வர்கள் தரையில் அமர்ந்து உணவை நன்கு மென்று சாப்பிட்ட பின் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். இதனால் மிக விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து மீளலாம்.

ப்பம், அடிவயிற்றில் வலி, குதத்தின்(Anus) வழியாக அதிக காற்று(gas) வெளியேறுவது போன்ற பிரச்சனை இருப்பர்வர்கள் தரையில் அமர்ந்து உணவை நன்கு மென்று சாப்பிட்ட பின் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். இதனால் மிக விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து மீளலாம்.

தினம் ஒரு மூலிகை

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் மூலிகைச்சாறு மற்றும் பழரசங்களில் (செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை) எந்த ஒரு சத்துக்களும் கிடைக்காது. நோய்கள் தான் பெருகும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

Photo: தினம் ஒரு மூலிகை
* * * * * * * * * * * * * * 
ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் மூலிகைச்சாறு மற்றும் பழரசங்களில் (செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை) எந்த ஒரு சத்துக்களும் கிடைக்காது. நோய்கள் தான் பெருகும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம். 

திங்கள் – அருகம்புல்
 ---------------------------------
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும். 
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும். 

செவ்வாய் – சீரகம்
--------------------------------
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம்,மந்தம் நீங்கும். 

புதன் – செம்பருத்தி 
---------------------------------
இரண்டு செம்பருத்தி பூ( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும். 
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்தவிருத்தி, இரத்தசுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 

வியாழன் – கொத்துமல்லி
-------------------------------------------
 ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். 
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மைஆகியவை நீங்கும். 

வெள்ளி – கேரட் 
------------------------------------
ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். 
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும்.இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

 சனி – கரும்பு சாறு
------------------------------------
 கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். 
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும்.உடல் பருமன், தொப்பை குறையும். 

ஞாயிறு – இளநீர் 
---------------------------
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும். 
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

மாட்டிறைச்சியை உண்டால் இளவயதில் மரணம்

ந்து மதத்தில் பசு கடவுளாக வணங்கப்பட்டாலும் சில சமூகத்தினர் மாட்டிறைச்சியை உண்பதில் சளைத்தவர்கள் இல்லை. பெளத்த மதத்தினர் மாட்டிறைச்சி உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை.

மாட்டிறைச்சி உலகளவில் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கிறார்கள். மேல் நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோக்ளோபின் (Myoglobin) என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Photo: மாட்டிறைச்சியை உண்டால் இளவயதில் மரணம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இந்து மதத்தில் பசு கடவுளாக வணங்கப்பட்டாலும் சில சமூகத்தினர் மாட்டிறைச்சியை உண்பதில் சளைத்தவர்கள் இல்லை. பெளத்த மதத்தினர் மாட்டிறைச்சி உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. 

மாட்டிறைச்சி உலகளவில் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கிறார்கள். மேல் நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோக்ளோபின் (Myoglobin) என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மையோக்ளோபின் எந்த அளவு கறியில் இருக்கிறதோ அந்த அளவே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவையும் நிர்ணயம் செய்யும். தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் இருபது சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்களில் அதிகமானவர்கள் இளமையிலேயே இதயபாதிப்பு பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை இதயநோய், புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகின்றன.

நிறைய பால் கொடுக்க வேண்டும், மாடுகள் சீக்கிரம் பெரிதாக வளர்ந்து மாமிசத்துக்கு தயாராக வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக துரித வளர்ச்சி ஹார்மோன் (Recombinant Bovine Growth Hormone -RBGH) ஊசி மாடுகளுக்கு போடப்படுகிறது. மாடுகளின் மாமிசத்தில் கலந்து இருக்கும் இந்த ஹார்மோன்களால் மாட்டிறைச்சி மனிதர்களுக்கு நிறைய பக்க விளைவுகளைத் தான் உண்டு பண்ணுகிறது.

மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணம் என ஆய்வுகள் கூறினாலும் அதை உண்பவர்கள் நிறுத்துவதாய் இல்லை. எனவே மாட்டிறைச்சியை குறைவாக உண்டு (அ) உண்பதைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பாரம்பரியமான கேழ்வரகு தானிய உணவு செய்யும் முறைகள்

ணவே மருந்தாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எளிதாக ஜீரணிக்கும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்கி பலவித நோய்களை வர விடாமலும், வந்த நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவேதான் இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது.

உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களில் மிக முக்கிய சத்தான தானியங்களுள் கம்புக்கு அடுத்து இருப்பது கேழ்வரகு மட்டுமே.சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு. பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.

இதில் பெருமளவில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைப்பதோடு மட்டுமில்லாமல் சேதமடைந்த திசுக்களை சரி செய்து உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் செய்யும்.

கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், தேவையில்லாமல் மற்ற உணவு வகைகள் உண்பது தடுக்கப்படும், அதனால் உடல் எடை கூடுவதும் தவிர்க்கப்படும். கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும். இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்தும். உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும். தேவை இல்லாத கொழுப்பை அகற்றி கல்லீரலை வலுப்படுத்தும். உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா ஆகிய நோய்களும் குணமாக்கும். குடல் வலுப்பெறும். தாய்ப்பால் சுரக்க பேருதவி புரியும்.

உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. அதனால் சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் அடிக்கடி உணவில் கேழ்வரகை சேர்த்துக் கொள்ள கூடாது.

கேழ்வரகு களி, கூழ்,கேழ்வரகு அடை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு சேமியா புட்டு, கேழ்வரகு சேமியா உப்புமா , கேழ்வரகு மாவு லட்டு என பல வகைகள் உண்டு. அதில் சில உணவு வகைகள் உங்களுக்காக.

கேழ்வரகு அடை
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: தேவைக்கு
முருங்கைகீரை : 1 கப்
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்: தேவைக்கேற்ப
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிய பின் கடைசியாக கீரையை வதக்கி வதங்கியதும் அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரத்துணி (அ) எண்ணெய் தடவி மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டி தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

கேழ்வரகு இட்லி
கேழ்வரகு மாவு : 2 கப்
உளுந்து : 1/2 கப்
வெந்தயம் : 1/4 ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
உளுந்தை வெந்தயம் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுப்போல அரைத்து, அத்துடன் கேழ்வரகுடன் உப்பு சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். மறுநாள் காலையில் சாதாரண தோசை, இட்லி செய்முறையில் செய்யலாம்.

கேழ்வரகு புட்டு
கேழ்வரகு மாவு - ஒரு கப்
உப்பு: 3 சிட்டிகை
பனங்கற்கண்டு : தேவையான அளவு
தேங்காய் துருவல் : தேவையான அளவு
கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். பிசைந்த மாவை கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் கையில் ஒட்டாமல் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசைந்த பிறகு ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், பனங்கற்கண்டு கலந்து உண்ணலாம்.

கேழ்வரகு களி
கேழ்வரகு மாவு: ஒரு கப்
உப்பு: தேவைக்கு
ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து இரண்டு கப் (மாவின் அளவை போல் இரு மடங்கு) தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வெந்து, வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும். இது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்.

கேழ்வரகு சேமியா புட்டு
எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட‌.
சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் ஊற வைத்து நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் அவித்து எடுக்க வேண்டும்.
வெந்ததும் எடுத்து அதனோடு இனிப்புக்கு பனங்கற்கண்டு உதிர்த்து வைக்கவும்.

கேழ்வரகு சேமியா உப்புமா
வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,இஞ்சி, பச்சைமிளகாய்,கேரட், பீன்ஸ் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும். சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் ஊற வைத்து நீரை வடிய வைக்கவும்.
காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறிவிடவும். எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

கேழ்வரகு மாவு லட்டு

கேழ்வரகு மாவு-ஒரு கப்
வெல்லம்:1/2 கப்
முந்திரி:5
ஏலக்காய்:1
நெய்:தேவைக்கு
முந்திரியைப் நெய் விட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக்கொண்டு, கேழ்வரகு மாவைப் போட்டு வாசனை வரும்வரை விடாமல் கிளற வேண்டும்.
மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொங்கிவரும் போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக்கொண்டே விடாமல் கிளறி முந்திரி, ஏலத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.

தூக்கமின்மை (Insomnia)

தூக்கமின்னமையும், மலச்சிக்கலுமே ஒரு மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். தூக்கமின்மையே வாழ்க்கையின் மிகப்பெரிய அவலமாக மாறி விடுகிறது. குழந்தைகள் குறைந்தது ஒன்பது மணிநேரம் இரவில் தூங்க வேண்டும். பெரியவர்கள் குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணி நேரம் அவசியம் தூங்க வேண்டும்.

பிறந்த குழந்தை எப்போதுமே தூங்கிக்கொண்டிருக்கும்.. வளர வளர அதன் தூக்கத்தின் அளவு குறைந்துகொண்டே வருவதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம்... எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் உடலும் மனமும் அமைதியாக இருக்கும்போது நன்கு தூக்கம் வரும்... கவலைகள் மனதில் குடிகொள்ள குடிகொள்ள தூக்கத்தின் அளவு குறையும்... தூக்கத்தின் அளவு குறைய குறைய உடல் ஆரோக்கியமும் குறையும்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான செயல் இயல்பான நிம்மதியான நல்ல தூக்கம் மட்டுமே. படுத்ததும் தூங்குவது என்பது வரம் போன்றது. ஆனால் நவீன வாழ்க்கை முறையில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வரம் வாய்க்கிறது. உடல் உழைப்பின்மை, ஸ்ட்ரெஸ் (மன உளைச்சல்) பொருளாதார நெருக்கடி என்ற பல காரணங்களால் பலர் தூக்கம் இழந்த நிலையில் பல வியாதிகளோடு போராடிக் கொண்டு தான் இன்றும் இருக்கிறார்கள். தூக்கம் இழந்த ஒரு மனிதனின் கடைசி நிலை மனநிலை பாதிப்பு தான்.

தூக்கம் இல்லாதவர்களின் மனம், உடல் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும். தூக்கம் மிகவும் உடலிற்கு மிக அத்தியாவசியமான ஒன்று என்று எத்தனை ஆய்வுகள் கூறினாலும் எல்லாம் தெரிந்தது போல, தாங்களும் தூங்காமல் அடுத்தவர்கள் தூங்குவதை கேலி செய்ய ஒரு கூட்டம் உண்டு.

தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்களால் கூறப்பட்டாலும் உடல் நலமின்மை, மன அழுத்தம், எரிச்சல், கோபம், இயலாமை, ஆத்திரம், என அடுக்கி கொண்டே போகலாம். தெளிவற்ற மனநிலை எப்போதும் தவறன முடிவுகளையே எடுக்க வைக்கும். நிம்மதியாய் தூங்கினாலே போதும்.. உடலில் பல நோய்கள் வராமலும், மன அமைதியுடன் நிதானமான - தெளிவான முடிவெடுத்தலின் மூலம் குடும்பத்தில் பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

பார்கின்ஸன், அல்சீமர், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களையே தாக்கும் மிக முக்கிய வியாதிகள். தற்கொலைக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று தூக்கமின்மை . ஆழ்ந்த தூக்கம் நிறைய வியாதிகளில் இருந்து நம்மை மீட்டு கொண்டு வரும்.

நிம்மதியான தூக்கத்திற்கு
- - - - - - - - - - - - - - - - - - - - -

1. பகல் தூக்கம் தூங்குபவர்களுக்கு இரவு தூக்கம் கண்டிப்பாக தாமதம் ஆகும். மதிய உணவிற்கு பின் உறங்கும் பழக்கம் நிறைய பேரின் வாழ்க்கையில் பல வியாதிகளை அவர்களுக்கு அன்பளிப்பாக தரும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.

2.தூங்கும் போது அறையை வெளிச்சம் இல்லாமல் இருட்டாக வைத்திருப்பது. (அ) கண்கள் மேல் வெளிச்சம் படாமல் பார்த்துகொள்வது மிக அவசியம். வெளிச்சம் நம் நரம்பு மண்டலம், மூளையை தூண்டி தூக்கத்தை தடை செய்யும். தூங்குவதற்கு முன்னால் டிவி, கம்ப்யூட்டர், மொபைல், என வெளிச்சம் அதிகம் உள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. மேலும், அதன் ஒளித்திரையை அணைக்காமல் படுத்தால் தீடீரென்று விழித்து பார்க்கும் போது அந்த வெளிச்ச திரைகள் கண்ணில் பட்டு மீண்டும் தூக்கம் வர சிரமமாகும்.

3. தூக்கத்தில் இருந்து விழித்தால் அதிக பசி இருந்தால் மட்டுமே உண்ண வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஏதாவது உணவு பொருட்களை உட்கொண்டால் திரும்பவும் தூக்கம் தொலைக்க வேண்டி இருக்கும்.

4. நல்ல தூக்கத்திலோ (அ) தூக்கம் வரமால் இருந்தாலோ நீங்கள் உங்கள் கவலை, துக்கம் எதுவாக இருந்தாலும் பக்கத்தில் ஒரு பேப்பர் வைத்துக் கொண்டு அதில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் அந்த கவலைகளை வெளியே சொல்லிவிட்ட ஒரு மன திருப்தி உங்களுக்குள்ளே உண்டாகும். நல்ல தூக்கமும் வரும்.

5. ஒவ்வொரு உறுப்பையும் மனம் உள்பட இறுக்கமாக வைக்காமல் லேசாக தளர்த்தி கண்மூடி இருக்க முயன்றாலே மனமும், உடலும் அமைதியாகி தூக்கம் கண்களை மூடிக்கொள்ளும்.

6. மிக முக்கியம் மாலை நேர அமைதியான நீண்ட நடைப் பயிற்சி. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதிக தூரம் நடப்பதால் உடல் அதற்கு தேவையான ஓய்வை தூக்கம் மூலம் அதுவே எடுத்துக் கொள்ளும்.

7. தூங்குவதற்கு முன் அதிக கொழுப்புள்ள உணவு வகைகள், மது, சிகரெட் போன்றவற்றை தவிர்க்கவும்.

தூக்கம் வராமல் வேதனைப்படுபவர்கள் மேல கூறி இருப்பதை பின்பற்றி வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம். மனதை லேசாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் தூக்கம் நம்மோடு இருக்கும்..அதை தொலைத்து விட்டு தேட வேண்டிய அவசியம் இல்லை.

எந்த மருந்துகளும் இல்லாமல் உடல் அதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் அதனுள்ளே இருந்து பெற்றுக் கொள்ளும் அற்புத ஆற்றல் பெற்றது. உடலின் மொழி புரிந்து கொண்டு அதை நாம் வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும். பஞ்சபூதங்கள், இயற்கை, உடல் எப்போதும் நம்மை ஒரு போதும் ஏமாற்றாது என்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.

பித்தப்பை கல் (Gallbladder Stone)

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு.
நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப் பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

Photo: பித்தப்பை கல் (Gallbladder Stone)
* * * * * * * * *  * * * * * * * * * * 

உடல்பருமன், அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் . மேலும் , இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள்,  செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள் ,குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன. 

தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்,வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.

அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.

பித்தப்பை கல் இருப்பது உறுதியானால் அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும். வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக்  கூடாது.பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் , பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும். மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது. உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.