சனி, 7 ஜூன், 2014

தூக்கமின்மை எளிய தீர்வு (அக்குபிரஷர்

தேவை இல்லாத சப்தங்கள், அதிர்வுகள், அசைவுகள் அற்ற இரவில், வெளிச்சக்கீற்றுகள் இல்லாத இருட்டில் உறங்கும் போது ஆழ்ந்த தூக்கம் வரும்.. அப்படியான ஆழ்ந்த தூக்கத்தில் உடல் உறுப்புகள் நன்கு ஓய்வெடுக்கும்... விழித்து எழுந்ததும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்...

ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் ஆழ்ந்த தூக்கம் என்பது அரிதான விஷயமாகி விட்டது... இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்பவர்கள் என்னதான் பகல் நேரத்தில் உறங்கினாலும் அவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்கு போக முடியாது... இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாததால் உடல் எப்போதும் சோர்வுடன் அசதியாக காணப்படும்...

இரவில் உறங்குபவர்கள் கூட ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றால் காலையில் எழும் போதே சோர்வுடன் காணப்படுவர்.. கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், தொடர் தும்மல்கள் போன்றவற்றால் அவதிப்படுவர்... இதற்கு ஒரே நிவாரணி.. ஆழ்ந்த தூக்கம் மட்டுமே... இதற்காக சிலர் தூக்க மாத்திரை போன்ற ஆபத்தான வழிமுறைகளை நாடுவார்கள்.... இதனால் பிரச்சினை தற்காலிகமாக தீர்ந்ததாய் நினைக்கலாம்.. ஆனால் அது மிக பயங்கரமான பின்விளைவுகளை கொடுக்கும்...

பொதுவாகவே அனைவரும் இரவில் குறைந்தது 7 மணிக்கு முன்பாக உணவு எடுத்துக்கொண்டு, 9.30 to 10 க்கு படுக்கைக்கு சென்றுவிட வேண்டும்...

ஆழ்ந்த உறக்கம் வர அக்குபிரஷர் முறையில் மிக எளிமையான வழி இருக்கிறது...படத்தில் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில், கையின் கட்டை விரலால் 30 வினாடிகள் வலதுபுறமாகவும், 30 வினாடிகள் இடதுபுறமாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.. தூக்கம் இல்லாதவர்கள், ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்கள் செய்து பாருங்கள்... பக்கவிளைவுகள் இல்லாமல் நல்ல பலன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக