சனி, 7 ஜூன், 2014

தலைவலி

திகபடியான வேலை பளு, இரவு நீண்ட நேரம் கண்விழித்தல், தூக்கமின்மை, குடிப்பழக்கம், புகைப்பழக்கம், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிகபடியான வெளிச்சம்....போன்றவற்றால் பெரும்பாலும் அனைவருக்குமே தலைவலி வந்துவிடுகிறது. 
நமது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் திறனும், சக்தியும் கொண்டது. சிறிதளவு ஒய்வு கொடுத்தால் உடலே அந்த தலைவலியை சரி செய்யும்... 



ஆனால் எங்கும் அவசரம்.. எதிலும் அவசரம் என்று அவசர யுகத்தில் அவசரமாய் வாழப் பழகிய நாம் இப்படியாக வரும் தலைவலியை கூட நமது உடல் தன்னை தானே சரி செய்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் உடனே ஒரு மாத்திரையை சாப்பிட்டு... அந்த தலைவலியை தற்காலிகமாய் மறைத்து வைக்கிறோம்.... கவனிக்கவும்... குணப்படுத்தவில்லை....மறைத்து வைக்கிறோம்...அந்த வலி போகிறதோ இல்லையோ அதோடு வேறு
ஒரு வலியையும் வர வைத்துக் கொள்கிறோம். சிலருக்கு மாத்திரை போட்டு குணமானது போன்று தோன்றும் தலைவலி கொஞ்ச நேரத்தில் உடனே திரும்ப வந்து விடும்...பலருக்கு சிலநாட்கள் விட்டு தலைவலி மீண்டும் புதிய வேகத்துடன் தொடரும். முதலில் ஒரு மாத்திரைக்கு கட்டுப்படும் தலைவலி நாளடைவில் மேலும் அதிகமாகும்.. அப்போதும் கூட அதற்கு நிரந்தர தீர்வை தேடாமல் மாத்திரையின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போவோம்.... ஒன்று இரண்டாகும்.. இரண்டு நான்காகும்.. ஆனால் தலை வலி மேலும் மேலும் வீரியமாய் வரும்.... ஒரு மாத்திரை உட்கொண்ட காலம் போய் அதிகப்படியான மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இரண்டு, மூன்று நாட்கள் தலைவலியால் அவதிப்படுவோரும் உண்டு....எனக்கு தெரிந்த ஒருவர் எட்டு மாத்திரைகள் போட்டும் தலைவலி நிற்கவில்லை என்று கூறினார்... இப்படி மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமானால் உடல் தன்னை தானே சரி செய்துகொள்ளும் சக்தியை இழந்து வீணாகி அதன் விளைவாக, மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் உடலின் பல உறுப்புகளும் பாதிக்கப்பட்டு பல தொல்லைகள் தலை தூக்க ஆரம்பித்து இருக்கும்.


ஏதேனும் ஒரு தலைவலித் தைலத்தை, நெற்றிப் பொட்டில் வைத்துத் தேய்ப்பது கூட ஒருவகை "அக்குபிரஷர்" வகை மருத்துவம் தான்.
படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்ததில் நம் நடுவிரலை வைத்து 2நிமிடம் அழுத்தம் கொடுத்து, தலையை லேசாக பின் பக்கம் சாய்த்து மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.
சிறிது இடைவெளி விட்டு ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம். இப்படி செய்வதால் உடலுக்கு பிராண சக்தி உடனடியாக கிடைக்கும். பிராண சக்தியால் உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு தலைவலியும் வந்த சுவடு தெரியாமல் எளிய வழியில் நம்மை விட்டு போகும்.

தலைவலி போவதோடு இல்லமால்..மனமும் அமைதி பெறும், மன உளைச்சல், தேவையே இல்லாத எண்ணங்கள், பயம் போன்றவையும் இதோடு நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக