சனி, 7 ஜூன், 2014

சாதிக்காய்

சாதிக்காய் அனைவரையும் மயக்கும் ஒரு விதமான நறுமணம் கொண்டது. அதோடு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த மணமூட்டி. 

சாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் எது என்று அறிய 6 வருடங்கழித்து அவை பூக்கும் போது தான் கண்டுபிடிக்கவே முடியும்.

முற்காலத்தில் நறுமண வியாபாரிகளாலும், மூலிகை வியாபாரிகளாலும் "எங்கிருந்து இந்த பொருள் கொண்டு வரப்படுகிறது" என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியமாய் வைத்து விற்பனை செய்யப்பட்ட வரலாறும் உண்டு...

ஆரம்ப காலக் கட்டத்தில் இது நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.. நாளடைவில் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் உணரப்பட்டது... ஆனால் இதன் குணத்தை மேலோட்டமாக ஓரளவு மட்டுமே அறிந்தவர்களால் இது காமம் தூண்டக்கூடிய பொருள் என்று மட்டுமே பார்க்கப்படுகிறது...
இதில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட இதில் அதை தாண்டிய பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி வழிகிறது...

சாதிக்காய் கனிக்கும் விதைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி தனியாக பிரிக்கப்பட்டு "சாதிபத்ரி" என்று தனியாகவும் பயன்படுத்தப்படுகிறது...

குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சித்த/ஆயுர்வேத மருந்துகளில் சாதிக்காயும், சாதிபத்ரியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.. ஆண்களுக்கு காம உணர்வை தூண்டும். விந்தணு குறைபாட்டை நீக்கி விந்தணு எண்ணிக்கையை பெருக்கும். இதன் காரணமாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும்.


நினைவாற்றல் அதிகமாகும்.. சுவாசம் சீராகும். பித்தம் நீக்கும். அதோடு மட்டுமல்லாமல் நரம்பு மண்டலத்தை முழுவதுமாக சீராக்கும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உண்டாகும் வயிற்றுப்போக்கை குணமாக்கும். காலரா போன்ற வாந்தி பேதி நோய்களுக்கு இது ஒரு அருமருந்து .

சாதிக்காய் "அரோமா தெரபி" என்று சொல்லக்கூடிய வாசனை சிகிச்சை முறையிலும் கூட பயன் படுத்தப்படுகிறது. இதன் வாசனை நிலையில்லாமல் அலைபாயும் மனதை அமைதிப்படுத்தும் . மன அழுத்தத்தை போக்கி நல்ல உறக்கம் வர வைக்கும். மனதில் உற்சாகம் உண்டாக்கும்..

சாதிக்காயில் உள்ள Myristicin என்ற சத்து அதிகம் இருப்பதால் தோல் சுருக்கத்தை (anti ageing) தடுக்கும். இதனை நம் முன்னோர்கள் அறிந்து தங்களது தோற்றப் பொலிவை காத்திருக்கிறார்கள்... மேலும் இது வாசனை திரவியங்கள், முகப்பூச்சுக்கள், பற்பசை மற்றும் வாய் கொப்புளிக்கும் தைலங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எல்லாவற்றிலும் நம் முன்னோர்களை புறக்கணித்த நாம் இந்த விஷயத்திலும் கூட அதையே செய்து இரசாயன கலவையாக வரும் அழகுசாதன கிரீம்களை விளம்பரங்களைப் பார்த்து, மயங்கி வாங்கி உபயோகித்து... இயற்கையாகவே இருக்கும் சரும அழகையும் கெடுத்துக்கொள்கிறோம்.


"சாதிக்காய்"
* * * * * * * * * * *
இரண்டு நாட்களுக்கு முன் உட்கொள்ளும் மருந்தாகவும், வாசனை மருந்தாகவும் விளங்க கூடிய "சாதிக்காய்" பற்றிய பதிவில் அதை எப்படி சாப்பிடுவது என்று நிறைய நண்பர்கள் சந்தேகம் கேட்கவே .. அதற்கான விளக்கம்...

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”
- அகத்தியர் குணபாடம்

1. ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு, விக்கல், தூக்கமின்மை, மறதியால் பாதிக்கப்பட்டோர் தினமும் 10 கிராம் சாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய்ச் சாறு ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் பூரண குணமாகும்.

2.சாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு உடனே தீர்ந்து விடும்.

3.சாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதை ஒரு நாள் முழுதும் சிறிது சிறிதாக குடித்து வர காலரா, வாந்தி பேதி நோய்களுக்குச் மிகச் சிறந்த மருந்தாகும்.

4.சாதிக்காய் பொடியை அரை கிராம் அளவு பசும்பாலில் கலந்து மூன்று வேளை குடித்து வர உணவு உண்டவுடன் உண்டாகும் வயிற்றுப் போக்கு தீரும் . நடுக்கம், பக்கவாதம் குணமாகும். மனத் தெளிவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் சூடு தணியும். எப்போதும் வாந்தி வரும் என்ற உணர்வைப் போக்கும். இரைப்பை, கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும்.

5.நல்லெண்ணெயில் இப்பொடியை சிறிது கலந்து காய்ச்சி காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும்.

6.விந்தணு எண்ணிக்கை குறைந்தவர்களுக்கு அதன் எண்ணிக்கை கூடும். விந்தணு நீர்த்துப்போனவர்களுக்கு அது இறுகி கெட்டியாகும்..

அனைவருமே தினமும் சிறிய அளவு உண்டு வந்தால் செரிமானத்திறன் கூடும். உடல் சுறுசுறுப்படையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக