வீட்டிலேயே காற்றோட்டமும் , வெளிச்சமும் இருக்கும் இடமாக தேர்வு செய்து ஐந்து அல்லது ஆறு அடி விட்டமுள்ள இரு வட்டங்களை ஒன்றை ஒன்று தொட்டிருக்கும் படியாக எட்டு வடிவில் (8) தரையில் வரைந்து கொள்ள வேண்டும் .... வாய்ப்பு இருந்தால் அந்த பாதையில் கூழங்கற்களை பதிக்கலாம்...
பாதையில் செய்யும் நடைப்பயிற்சியில் கவன சிதறல் இருக்கும் ...மற்றவர்கள் மீதும் ..வாகனங்கள் மீதும் கவனம் போகும் ...நம்மோடு பாதையில் நடைப்பயிற்சி செய்பவர்கள் இருந்தால் அவர்களோடு பேசுவது ..டீ காபி குடிப்பது என்று பல இடையூறுகள் வரும் .... ஆனால் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியில் அவ்வாறான கவன சிதறல்கள் இடையூறுகள் இருக்காது...
எட்டு நடைப்பயிற்சி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வதால் முதலில் நல்ல தூக்கம் கிடைக்கும் ... ...ஒவ்வொரு முறையும் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் கொஞ்சம் திருப்பம் அடைகிறது.. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன....
சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும் ....மனமும், சுவாசமும் சீரடைவதால் ரத்த ஓட்டமும் சீராக நடைபெறும்... பாதங்களும், கால்களும் பலம் பெறும்....சர்க்கரை நோயாளிக்கு இது சிறந்த நிவாரணி ... தினசரி இந்த பயிற்சி செய்வதால் அதிக தொல்லை தரும் வியாதிகள் நம் உடலை விட்டு வெளியேறும்.
#1 This should be done with bare foot..i.e With out footwear...
பதிலளிநீக்குநம் விருப்பம் தான்.
நீக்கு