தைராய்டு கிளான்டின் குறைவான செயல்பாட்டை ஹைப்போ தைராய்டு என்கிறோம் .
ஹைப்போ தைராய்டு பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடல் குளிர்ந்திருப்பதாகவே கருதுவர். ஃபேன் காற்றை விரும்ப மாட்டார்கள் . வளர்சிதை மாற்ற வேகம் குறையும் . அவர்களின் செயல்பாடுகளில் அதாவது சிந்தனை மற்றும் பேச்சு ஆகியவற்றில் மந்த நிலை ஏற்படும். உடல் எடை கூடும் .
நாக்கு தடித்து விடும், மேல் உதடு கீழ் உதட்டை விட நீண்டு இருக்கும் ..... தோல் தடித்தும் உலர்ந்தும் காணப்படும் . நாள்பட்ட மலசிக்கல், முடி உதிருதல் பொடுகு போன்றவை காணப்படும் .
மாதவிடாயின் போது அதிக இரத்த போக்கு ஏற்படும் . கருவுற்ற பெண்களுக்கு ஹைப்போ தைராய்டிஸம் இருந்தால் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியதாக இருக்கலாம் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக