செவ்வாய், 23 ஜூலை, 2013

பயம் அறவே கூடாது



சில மனிதர்கள் எப்போதும் பயமின்றி இருப்பார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குவார்கள் . விவேகானந்தர் எப்போதும் பயமின்றி இருந்தார். தன்னை துரத்திய குரங்குகளையும் அவர் எதிர்த்து நிற்க அக்குரங்குகள் அவருக்கு பயந்து ஓடின. நிமிர்ந்து நில் துணிந்து செல் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. வள்ளலாரும் தனது திருவருட்பாவில் மனித உடலுக்கு தேவையான உணவு, உறக்கம், போன்றவைகளின் அளவை குறிப்பிடும் போது பயம் என்பது மட்டும் துளியும் கூடாது என்று வசன பாகத்தில் கூறியுள்ளார்.

ஆகாரம்..1/2 பங்கு..
உறக்கம் - 8ல் 1பங்கு
உறவு (மைதுனம்) - 16ல் 1பங்கு
பயம் - பூஜ்யம்

என்று குறிப்பிடும் வள்ளலார் வயிற்றில் அரைபங்கு அளவு மட்டுமே சாப்பிட்டு கால் பங்கு நீரும் கால் பங்கு காலியாகவும் இருக்கும்படி கூறுகிறார் .தூக்கம் ஒரு நாளின் மூன்று மணி நேரம் மட்டுமே போதும் என்றும் தாம்பத்தியம் மாதத்தில் இரண்டு நாட்கள் போதும் என்று குறிப்பிடும் அவர் பயம் என்பது மட்டும் மனிதனுக்கு அறவே கூடாது என்கிறார்.

பயம் மனதில் குடி கொண்டால் உடலின் ஆரோக்கியம் மட்டுமல்ல நம் வாழ்கையின் மொத்த ஆதாரமும் கெட்டுவிடும். பயம் பற்றிய சிந்தனை இரண்டு துறவிகளுக்கும் இல்லாத காரணத்தால்தான் அவர்கள் இறந்தும் இன்னும் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக