மலச்சிக்கலே மந்தம் என் சொல்லபடுகிறது. “மந்தத்தால் வாயுவாம். மிகுந்த நல்வாயுவால் விளைந்திடும் நோயெல்லாம்”. திருமூலர் மந்தத்தின் காரணம் கூறுவது என்னவென்றால்
“காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்
காணுமே மந்தம் கடுமா மிசம்மீறில்
காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால்
காணுமே மந்தம் கடுமேதிப் பாலுக்கே”
மெல்லாது வேகமாக விழுங்கும் உணவினாலும், மாமிச உணவினாலும், மாவினால் செய்த உணவினாலும், எருமைப்பாலினாலும் மந்தம் உண்டாகும் என் கூறுகிறார் ...
1. பசித்தால் சாப்பிட வேண்டும். பசிக்காமல் சாப்பிடவே கூடாது.
2. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.
3. தூக்கம் வந்தால் உடனே தூங்க வேண்டும்.
4. சிறுநீர், மலம் (Urine, Motion) அடக்குதல் கூடாது.
அக்குபஞ்சர் முறைப்படி ஒரு உறுப்பு எதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்து....... அந்த உறுப்பின் தடைப்பட்ட இயக்கத்தை தூண்டி .... உடலின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தினாலும்... மேற்சொன்ன நான்கு முறைகைகளை சரிவர பின்பற்றா விட்டால் எந்த மருத்துவ முறையும் உடலை சீர் செய்யாது......வியாதியில் இருந்து மீள முடியாமல் மேலும் பலவியாதிகளை நோக்கி தான் போக வேண்டி வரும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக