புகைப்பது தற்கொலைக்குச் சமம். புகைப்பது நாமே மரணத்தை விரைந்து அழைப்பது போலாகும்....புகை பிடிப்பதால் நம் வாயிலிருந்து மூச்சு குழாய் வழியாக நுரையீரலுக்குச் செல்லும் நச்சுப் பொருள் ' நிக்கோடின் ' அங்குள்ள திசுக்களைப் பாதிக்கிறது...நுரையீரல் மட்டுமே இதனால் பாதிப்பு அடைவதில்லை ....
பாதிப்புகளை படிக்கச் செல்லும் முன் மனத்தை முதலில் திடப்படுத்திக்கொள்ள வேண்டும்...
இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், காச நோய், மாரடைப்பு, ஸ்ட்ரோக்(பக்கவாதம்), உயர்ந்த இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளும் வர வாய்ப்புகள் மிக அதிகம்....
இரத்தப்புற்று (Blood Cancer), நுரையீரல் (Lung Cancer), கழுத்து (Neck Cancer), சிறுநீரக மற்றும் சிறு நீர்ப்பை (Kidney & Urinary Bladder), போன்ற புற்று நோய் சிகரெட் பிடிப்பதால் வருகிறது.
நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்வில் சிக்கல் உருவாகலாம்...... இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படுதல் (விந்தணுக்களின் வீரியம் குறைதல்), ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் மனோரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தி மிம்மதி இழப்பு மன உளைச்சல் முதல் தற்கொலை வரை இழுத்து செல்லும்....
உடல் ரீதியாக பல்வேறு நோய்களையும் மனோ ரீதியான பாதிப்புகளையும் விலைகொடுத்து வாங்கத்தான் வேண்டுமா.???
நீங்கள் இன்றே புகைப்பதை விட்டொழித்தால் கூட அது ஏற்படுத்தி வைத்திருக்கும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர , அதனால் உங்கள் உடம்பில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மை நீங்க சில வாரங்களில் இருந்து பல மாதங்கள் கூட ஆகலாம்....
இங்கிலாந்தில் உள்ள ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தின் புகையிலை கட்டுப்பாடு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிகரெட் பாக்கெட்டை திறந்தவுடன், ‘ஆண்மை குறைந்து விடும், புகை பிடிக்காதீர்கள்’ என்றும், சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அறிவதற்கான தொலைபேசி எண்ணையும் குறிப்பிடும் வகையில் சிகரெட் பாக்கெட்டை தயாரித்துள்ளனர்....
இத்தனையும் படித்துக்கொண்டே சிகரெட்டை புகையவைத்து கையை சுட்டுக்கொள்ளும் முன் தூக்கி எறியுங்கள். உயிரை மாய்த்துக்கொள்ளும் முன் விட்டொழியுங்கள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக