ஒற்றை தலைவலி என்பது மறுபடி மறுபடி வரக்கூடிய துடிப்பான கடுமையான வலியாகும். சில மணி நேரங்கள் முதல் இரண்டு நாட்கள் வரை கூட இருக்கும்....
ஒற்றை தலைவலி வருவதற்கு 10லிருந்து 30 நிமிடத்திற்குள் மனசோர்வு, எரிச்சல், அமைதியற்ற நிலை, வாந்தி, குமட்டல், பசியின்மை, தலை மிருதுவாவது போல்(வெகு சிலருக்கே)இருத்தல், கழுத்து வலி என காணப்படும்...
பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் ஏற்பட்டாலும் பெரும்பாலும் தலையின் ஒரு பக்கமாகவும்....சில நேரம் இரண்டு பக்கமும் வலி இருக்கும் ... வலி திடீரென்று ஏற்பட்டு, பிறகு பார்வை, நரம்பு சம்பந்தமான (அ) வயிறு.... குடல் பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்றும்.....சிலர் சில நேரத்தில் தற்காலிகமாக பார்வை இழப்பர்.. மேலும் அதிகமான மன அழுத்தமும்...இந்த வலி வர ஒரு காரணம். பெரும்பாலும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வரும் வாய்ப்பு அதிகமுண்டு.....
அதிக இரத்த அழுத்தம், அதிகபடியான வேலை பளு, தூக்கமின்மை, குடிப்பழக்கம், புகைப்பழக்கம், நீரிழிவு நோய்....அதிகபடியான வெளிச்சம்....என்று மட்டுமில்லாமல் மருத்தவரின் ஆலோசனை இல்லாமல் தாங்களாகவே மருத்துவராக மாறி மருந்துகளை உண்பது மட்டுமில்லாமல், அனைவருக்கும் அனைத்து வியாதிகளுக்கும் இவர்களே ஆலோசகராக மாறி மருந்துகளை பரிந்துரைப்பதும் .... ஒற்றை தலைவலி வர மிக முக்கியமான காரணம்..
அமெரிக்கர்கள் தான் இந்த நோயால் அதிகமாக
பாதிக்கப்பட்டாலும் குறிப்பாக பெண்களுக்கு தான் இதிலும் முதலிடம்....
சீஸ், பீர், வைன் (Wine), ஈரல்(கோழி), ஈஸ்ட், காபி, பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளாலும் ஒற்றை தலைவலி வரும்....
உணவு பழக்கத்தையும், வாழ்க்கை முறையும் சிறிது மாற்றி அமைத்தால் ... மிகக்குறுகிய காலத்தில் எளிதில் பூரணமாக குணமாகலாம் ....
ஒற்றை தலைவலி வந்தால் முதலில் இருட்டான இடத்தில் அமைதியாக ஓய்வோ (அ) தூங்கவோ செய்ய வேண்டும் ...
அக்குபஞ்சர் முறைப்படி ஒற்றை தலைவலியின் மூல காரணம் என்னவென்று ஆராய்ந்து அந்த உறுப்பின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்துவதின் மூலமும், தடைபட்ட இயக்கத்தை சீர்செய்து வலியற்ற வாழ்வு வாழலாம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக