நமது உடலில் உள்ள மிக முக்கிய 12 உறுப்புகளும் கைவிரல் நுனிகளில் அல்லது கால் விரல் நுனிகளில் ஆரம்பம் ஆகின்றன அல்லது முடிவடைகின்றன. சுஜோக் எனப்படும் பிரதிபலிப்பு முறையின்படி கையின் கட்டை விரல் தலைப் பகுதியாகவும், ஆட்காட்டிவிரல், சுண்டுவிரல் இவைகள் கைகளையும், நடுவிரல், மோதிரவிரல் கால்களையும் குறிப்பிடப்படுகிறது. இவைகளில் தான் ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது. விரல் நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால் நம்மிடம் உள்ள பல நோய்கள் காணாமல் போகும்.
உடலில் உண்டாகும் நோய்களுக்கு காரணம் பிராணசக்தியின் குறைபாடே ஆகும். நம் உடல் உறுப்புகள் இயங்குவது பிராணசக்தியால் தான். விரல் நுனிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் உடலுக்கு தேவையான பிராண சக்தியை அதிகரிக்கச் செய்யும். அதனால் நுரையீரல் வலுப்படும். மூச்சு விடுதலில் சிரமம் முதலில் நீங்கும். விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் முழு உடலுமே ஆரோக்கியம் பெறும்.
சில நேரங்களில் கைகளுக்கு அதிக வேலை கொடுத்து செய்ய வேண்டி இருக்கும். அப்படி அந்த வேலைகளை செய்து முடித்தவுடன் நாம் நம்மை அறியாமலே விரல்களில் சொடுக்கு எடுப்போம். மிகச்சாதாரணமாய் எடுக்கும் சொடுக்கு நொடிகளில் சோர்வை போக்கி உற்சாகத்தை தருவதை உணர்ந்திருப்போம்.. ஆனால் அது ஏனென்று கவனித்திருக்க மாட்டோம்....
யாரையோ அல்லது எதையோ எதிர்பார்க்கும் போதும், எதிர்பாராத அதிர்ச்சியான விஷயங்களை கேட்கும் போதும், பார்க்கும் போதும் நம்மையறியாமல் கைகளை பிசைந்து கொள்வோம்... அதே போல தலையில் லேசாக அடித்துக்கொள்வோம்.... இவைகள் எதுவும் நாம் திட்டமிட்டு செய்வதில்லை.. அதுவே அனிச்சையாக நடக்கும். அந்தச் செயலின் மூலம் 'எண்டோமார் ஃபின்' என்ற பொருளைச் சுரக்கச் செய்து, யாருடைய துணையுமின்றி நம் உடல் தம்மைத்தாமே ஒருநிலைக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறது
மற்றவர்களை செயல்களில் வியந்து பாராட்டவோ அல்லது அதிகப்படியான மகிழ்ச்சியின் காரணமாகவோ கை தட்டுவது என்பது நம்மை அறியாமல் செய்யும் அனிச்சை செயலாகும். இப்படி பட்ட சூழ்நிலையில் நம் உள்ளுறுப்புகளில் உண்டாகும் மாற்றங்களின் விளைவாக, 'அசிட்டைல் கொலைன்' என்கிற சுரப்பு சுரந்து, உடலையும் மனதையும் ஒருசேர மேலும் உற்சாகப்படுத்துகிறது.
டெல்லியில் ஒரு சாது தனது பக்தர்களை கை தட்ட சொல்லியே கவலைகளைப் போக்குவதாக கேள்வியும் பட்டு இருக்கிறோம். கவலைகள் போகிறதோ இல்லையோ அவர்கள் உடல் ஆரோக்கியம் அடைவார்கள் என்பதை அந்த சாது உணர்ந்து தான் இதை அவர்களுக்கு சிகிச்சையாகவே அளிக்கிறார்.
இப்படி ...முத்ரா, பாவனைகள், கை, கால் அசைத்தல் ஆகியவற்றில் நிறைந்திருக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை முறையை நம்மையறியாமலேயே நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.
இதை மையமாகக் கொண்டே அன்று உரல், அம்மி, ஆட்டுக்கல்லு, / அன்று, உரலில் நெல் குத்துதல், அம்மியில் மிளகாய் அரைத்தல், ஆட்டுக்கல்லில் மாவரைத்தல் கிணற்றில் நீர் இறைத்தல், கோலம் போடுதல் போன்ற வேலைகளும், பல்லாங்குழி, கல்லாங்காயாட்டம் போன்ற விளையாட்டுகளும் பெண்களுக்கெனவே ஒதுக்கப்பட்டது. மேற்கூறிய அனைத்திலும் பெரும் பங்கு கைகளுக்கு மட்டுமே இருந்து வந்துது. வேலைகளை செய்வதையும் விளையாட்டையும் கூட பொழுதுபோக்குக்காகவோ, பணம் சம்பாதிக்கவோ மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் மையப்படுத்தியே அமைத்த நமது முன்னோர்களை வியக்காமல் இருக்க முடியாது...
இன்று பெருமளவில் நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான வியாதி சைனஸ். இதே போல கண், காது மூக்கு, வாய், பல், மற்றும் நாக்கு இவைகளில் உண்டாகும் குறைபாடுகள் நீண்டு கொண்டே போகும். இப்படியான எல்லா வியாதிகளுக்குமே விரல் நுனிகளில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். தூக்கமே இல்லை என்று பலரும் மிகுந்த மனக்கவலயுடன் இருப்பார்கள். சிலர் தூங்குவதே தொழிலாக இருப்பார்கள். விரல் நுனி அழுத்தம் கொடுப்பதால் தூக்கம் இல்லாதவர்கள் நன்கு தூங்குவார்கள். தூங்கி கொண்டு இருப்பவர்கள் சுறுசுறுப்படைவார்கள்.
முகவாதம், தலைவலி, தலைமுடி கொட்டுதல், கண்ணெரிச்சல், மூக்கடைப்பு, சைனஸ், ஒற்றை தலைவலி, முகநரம்பு வாதம், வாய்கோணல், தொண்டைகரகரப்பு, காது வலி, காதுகேளாமை, பல்வலி, அடைப்பு, மயக்கம், அதிர்ச்சி, மூக்கில் இரத்தம் வடிதல், இருமல், தொண்டைப்புண், வலிப்பு, இதய வலி மற்றும் இதய கோளாறுகள், நாக்கில் தடிப்பு, உயர் இரத்த அழுத்தம், அதிக வியர்வை, படபடப்பு, சோம்பல், மனத்தடுமாற்றம், மனக்கோளாறுகள், நரம்பு சம்பந்தமான கோளாறுகள், உள்ளங்காலில் உண்டாகும் எரிச்சல், கால்கள் மற்றும் கைகள் சில்லிட்டு போதல், செரிமாண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, சிறுகுடல் பிரச்சனைகள், மரத்துப்போதல், தசைகளில் இறுக்கம், தொப்பை, அல்சர், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை கோளாறுகள், வலிப்பு, தூக்கமின்மை, கனவுகோளாறுகள், உடல்வலி என மொத்த வியாதிகளுக்கும் மருந்து வேறு எங்கும் இல்லை..நம் கை மற்றும் கால் விரல் நுனிகளிலேயே அமைந்துள்ளது.
உடலின் எந்த பாகத்தில் வலியோ, குறைபாடோ இருந்தாலும் இந்த விரல் நுனிகளில் கொடுக்கும் அழுத்தம் மிகுந்த பலன் கொடுக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை விரல் நுனிகளில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் சரியான பலன் கிடைக்கும் என்பதில் ஐயப்பட வேண்டியதே இல்லை.
சரியான நேரத்தில் தூக்கமும், மலச்சிக்கல் இல்லாத உணவு பழக்கவழக்கங்களும், விரல் நுனி அழுத்தமும் கொடுத்து வாழ்ந்து வந்தால் வியாதியே என்பதே இல்லாத உலகை படைக்க முடியும்.
பணமும், பொருளும் இழந்து, உறுப்புகளையும் தொலைத்து, நிம்மதியையும் இழப்பது மட்டுமில்லாமல் இன்னும் பல வேறு வியாதிகளுடன் வாழ்நாள் முழுவதும் புலம்புவதை விட்டுவிட்டு விரல் நுனியில் ஆரோக்கியம் என்ற இந்த முறையைப் பயன் படுத்தி அனைவரும் வாழும் காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக