சனி, 7 ஜூன், 2014

மருந்தில்லா மருத்துவம் – புத்துணர்ச்சி பெற எளிய வழி

ன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 90% நோய்கள் மன அழுத்தத்தால் வருபவையே. எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போகும். இன்று நம்மில் யாரும் எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் இல்லாமில்லை. செய்த தவறை யாரும் ஒப்புக் கொள்வதுமில்லை, தவறு செய்தவரை மன்னிப்பதுமில்லை.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக கவனம், குழப்பம், பிறப்பு, இறப்பு, திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வுகள், போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான நிகழ்வுகளும் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும்., காரணங்கள் ஆகும். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்திற்குள் கொண்டுச் செல்லும்.


புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள்.
புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை மற்றும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் மன அழுத்தம் அதிகமாய் இருக்கும். சில நேரங்களில் காரணமேயின்றி உடல், மனம் இரண்டும் தளர்ந்தும், சோர்ந்தும் போகும். காரணம் என்னவென்று பார்த்தால் எதுவுமே புலப்படாது.

இப்படிப்பட்ட நேரங்களில் உடனே உடலையும், மனத்தையும் புத்துணர்ச்சி பெற வைக்க எளிமையான ஒரு வழி இருக்கிறது. உடல் மற்றும் உயிர் இரண்டிற்கும் தேவையான சக்திகள் அனைத்தும் பிரபஞ்சம், இயற்கை இவற்றிலிருந்து தான் பெறப்படுகின்றன.

இரண்டு கால்களையும் ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு, இரண்டு கைகளின் உள்பக்கம் வானத்தை நோக்கி இருக்கும்படி அகலமாக விரித்து (இயேசு பிரான் கைகளை மேல்நோக்கி விரித்து இருப்பது போல) வெறுமனே 5நிமிடங்கள் வெட்ட வெளியில் நின்று பாருங்கள். உங்கள் உடல் உடனே சக்தி பெறுவதை உணர முடியும். விரல் நுனி மூலம் ஆகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியானது கைகள், உடல் என பரவி கால் விரல்களின் நுனி வழியாக வெளியேறும். இதுவே அக்குபஞ்சரில் “யாங்” சக்தி எனக் அழைக்கப்படுகிறது. அதே போல பூமியிலிருந்து விரல் நுனி வழியாக சக்தி பெறப்பட்டு கால்கள், உடல் வழியாக மேல்நோக்கி பரவி விரல்களின் நுனி வழியாக வெளியேற்றப்படுகிறது. இது “யின்” சக்தி எனவும் அழைக்கப்படுகிறது. ஆகாயம், பூமியிலிருந்து கிடைக்கும் சக்தியால் உடல் உடனே புத்துணர்ச்சி பெறும். 


நிரந்தரமான தீர்வுக்கு தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும், மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்வதும் மன அழுத்தத்தைபோக்க எளிய வழிகளாகும்.

விலை கூடுதலாக கொடுத்து வாங்கப்பட்ட எனர்ஜி டிரிங், காபி, டீ போன்றவற்றால் உடலையையும், மனத்தையும் கெடுத்து நோய்களுடன் வாழ்வதை விட, செலவே இல்லாமல் நமக்கு சக்தியை இலவசமாகக் வாரிக் கொடுக்கக் காத்துக் கொண்டு இருக்கும் இப்பிரபஞ்சத்திடம் இருந்து சக்தியைப் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் வாருங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக