துரித உணவில் MSG (Mono sodium Glutamate)
-------------------------------------------------------
Fast Food மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது . எந்த வகை ஹோட்டலாக இருந்தாலும் துரித வகை உணவு என்றால் ருசிக்காக MSG சேர்க்கப்படுகிறது. பிட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் வகை போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகிறது.
MSG ன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது . ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும் . இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது மட்டும் இல்லாமல் MSG சேர்க்கப்படும் துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சினைகள் ஏற்படும். மேலும் , தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு , உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும்.
விபரீதங்கள், உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். தவறான நடத்தைகளுக்கு மிக முக்கிய காரணமே MSG தான்.
வரும்காலம் ஆரோக்கியத்திற்கு இந்த MSG கலக்கப்பட்ட துரித வகை உணவு பெரும் ஆபத்து என்பது மறுப்பதற்கு இல்லை.
திருமூலர் வாக்குப்படி உடல்வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று உணவே மருந்தாக இருக்க வேண்டுமே ஒழிய உணவே விஷமாக மாறக்கூடாது. பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பது தான் மருந்தில்லா மருத்துவம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக