ஞாயிறு, 21 ஜூன், 2015

வேர்க்கடலை பர்பியில் வெள்ளை விஷம்!!

வேர்க்கடலை பர்பியில் வெள்ளை விஷம்!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இராணுவத்தினர் காடு-மலைகளில் நீண்டகாலம், தூரம் பயணம் செய்யும் போதும், மலைச்சிகர பயணம் மேற்கொள்வோருக்கும் மிக முக்கியமாக கொடுக்கப்படும் உணவு என்ன தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள்!! நம்மூர் வேர்க்கடலை பர்பிதான் அது.
வேர்க்கடலையை ஒரு புரத வங்கி என்று சொன்னால் மிகையாகாது. வெல்லமும் வேர்க்கடலையும் சேர்ந்த பர்பி தமக்குள்ளே ஒரு புரதக்கடலையே வைத்திருக்கிறது. மிகக்குறைந்த எடையில் பெரிய சக்தியை கொடுப்பதால் தான் ராணுவத்தினரும், மலையேற்ற பயணிகளும் அதை கொண்டுச் செல்கிறார்கள்.
வெறும் புரதம் மட்டுமல்ல, முப்பது விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு. வேர்கடலையில் வைட்டமின் A, நீரில் கரையக்கூடிய வைட்டமின் B3, புரதம், லைசின் எனும் அமினோ அமிலம் உள்ளது. வேர்க்கடலை உடல் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அதிக அளவில் பாதுகாக்கும். இரத்தம் ஓட்டம் சீராக்கும். நரம்புகள் நன்றாகச் செயல்பட உதவும். வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும். புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழிக்க உதவும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் B3 அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவுப் பொருள் இந்த வேர்க்கடலை.
இப்படிப்பட்ட வேர்க்கடலையை வெல்லத்தோடு சேர்த்து நம் வீடுகளில் கடலை உருண்டை, பர்பி செய்வார்கள். இதே முறையில் தான் தேங்காய், எள்ளுருண்டையும் செய்வார்கள்.
ஆனால் கடைகளில் கிடைக்கும் இந்த உருண்டை, பர்பிகளில் க்ளுகோஸ் சேர்க்கப்படுகிறது. (glucose- its chemical formula is C6,H12,O6 and this empirical formula is shared by other sugars.) உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள் என்ற அடிப்படையில் கடைகளில் எளிதாக கிடைப்பதால் அனைவரும் வாங்குகிறோம். ஆனால் அவர்கள் சர்க்கரையை கூட்டி, வெல்லத்தை குறைத்து வெள்ளை விஷத்தை நமக்கு விற்பனை செய்கிறார்கள்.
வழக்கம் போல வாழை இலையை தொலைத்துவிட்டு, வாழை இலை மாதிரியே இருக்கும் பாலித்தீனினாலான கம்ப்யூட்டர் வாழை இலை என்றும், பருத்தித் துணியிலானான இயற்கைக்கு தீங்கு செய்யாத மஞ்சள் பைகளை தொலைத்துவிட்டு பைபர் இழைகளினாலான மஞ்சள் நிறப் பைகளையும் கொண்டு வந்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் வியாபாரிகள் கடைசியில் இந்த வேர்க்கடலை பர்பியையும் விட்டு வைக்கவில்லை.
கரும்பில் சாறு எடுத்து அதை காய்ச்சி வரும் கரும் பழுப்பு நிற வெல்லத்தின் வண்ணத்தை, செயற்கையான பொருட்களாலும், நிறமிகளாலும் வெளிர் மஞ்சள் கலராக்கி மக்களைக் கவர்ந்து ஏமாற்றி சந்தைப்படுத்துகிறார்கள். நாமும் அந்த வண்ணத்தை கண்டு ஏமாந்து விஷம் என்று தெரியாமல் உட்கொள்கிறோம்.
வெல்லப்பாகு காய்ச்சி அதில் வறுத்த வேர்க்கடலையை கொட்டி உருண்டை பிடித்தால் அதுவே வேர்க்கடலை உருண்டை. தட்டில் போட்டு வெட்டி எடுத்தால் அதுவே பர்பி. இத்தனை எளிய சத்துக்கள் நிறைந்த இது போன்ற உணவு வகைகளை வீட்டிலேயே செய்து கொண்டால், ஏமாற்று வியாபாரிகள் இனி வரும் காலங்களில் மாறுவார்கள் அல்லது காணமல் போவார்கள்.
கவனிக்கவும்....
இந்த வேர்க்கடலை பர்பியை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துபவர்கள் கார்ப்ரேட் கம்பெனிகள் அல்ல. நமது ஊரில், நமது தெருவில் இருக்கும் நம்மில் ஒருவர் தான் அந்த வியாபாரிகள். மக்களின் நலனை அடகு வைத்து சம்பாதிக்க நினைப்பதில் கார்ப்ரேட்-உள்ளூர் களவாணிகள் எல்லாமே ஒன்றுதான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக