மூலிகைகள்- சிறு தேடல்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
சித்தர்கள் இயற்கையில் விளைந்த மூலிகைகள் மூலம் மனித இனத்தை நோயில்லாமல் பாதுகாக்கவும், மனிதர்களைத் தாக்கும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தவும், பல அரிய நூல்கள் மூலம் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

சிறு வயதில் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் மூலிகைகளை கண்டும், உண்டும் இருக்கலாம். இப்போது மூலிகைகளின் பெயர்களை கேட்கத்தான் முடிகிறது. பார்ப்பது, உண்பது எல்லாம் அரிதாகி விட்டது. நம்மில் பலர் அதை கண்ணால் கூட கண்டதில்லை.
சித்தர்கள், முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்திச் சென்ற பல அதிசய மருத்துவ மூலிகைகளின் பலன்களை நம்மில் உணர்ந்தவர்கள் எத்தனை பேர்???
குழந்தைப் பருவத்திலிருந்தே இனம் புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் இன்று மனித இனம் சிக்கித் தவிப்பது மறுக்க முடியாத உண்மை. நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்ததைப் போல் நாமும் வாழ்கிறோமா என்ற கேள்வி நம்முள் வராமல் இல்லை.
இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம். நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை, அதன் அருமை, பெருமை புரியாமல் தவிர்த்து விட்டு, இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது, மூலிகைகள் எதுவுமே நம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இல்லை.
இதற்கு தீர்வு தான் என்ன?
இனி வரும் காலங்களில் நம் வீடுகளில் பத்து மூலிகை செடிகளையாவது வளர்த்து, நோயில்லா உலகைப் படைப்போம்.
இனி வரும் காலங்களில் நம் வீடுகளில் பத்து மூலிகை செடிகளையாவது வளர்த்து, நோயில்லா உலகைப் படைப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக