புதன், 21 ஆகஸ்ட், 2013

உடல் ஆரோக்கியத்திற்கு எளிய சில வழிகள்


மனதில் நிறுத்த வேண்டிய நான்கு விஷயங்கள்
------------------------------------------------------------------
1. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசித்து சாப்பிடா விட்டாலும் நோய் ..பசிக்காமல் சாப்பிட்டாலும் நோய் தான் ...
2. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் ..
3. சிறுநீர், மலம் அடக்க கூடாது ...
4. தூக்கம் வரும்போது உடனே தூங்க போக வேண்டும்.

தினமும் காலை மற்றும் இரவு ஆயில் புல்லிங் பண்ணவேண்டும்... காலை எழுந்ததும் வாய் கழுவாமல் இரண்டு ஸ்பூன் (அ) 10 மிலி எண்ணெய் எண்ணெய் (நல்லெண்ணெய் (அ) சமையல் செய்யும் எந்த எண்ணையாகவும்) வாயில் ஊற்றி கொப்பளித்து அந்த எண்ணெய் தண்ணீர் போல நீர்த்து போகும் அளவுக்கு செய்தால் முழு பலனையும் பெறலாம்.. அவ்வளவு நேரம் செய்ய இயலாதவர்கள் 15 நிமிடம் செய்தால் கூட போதுமானது. (ஆயில் புல்லிங் பற்றி எமது இன்னொரு பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்...) பின் பல் தேய்த்து விட்டு கிரீன் டீ, (அ) சுக்கு காபி குடிக்கலாம். .. புகை, மது இரண்டும் அறவே கூடாது... குறைந்தது அரைமணி நேரமாவது தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பசித்தால் உடனே சாப்பிட வேண்டும்...பசித்து சாப்பிடாமல் இருப்பதும், நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பசிக்காமல் சாப்பிடுவதும் என இரண்டுமே தவறு தான்.

தாகமே இல்லாமல் இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தேவையே இல்லாமல் தண்ணீர் குடிக்கவே கூடாது. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்தால் போதுமானது.

வெளி இடங்களுக்கு சென்றால் சிறுநீர், மலம் போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கழிவறை நன்றாக இருக்காது என்று அடக்கி கொண்டு இருந்தாலும் மிக பெரிய வியாதியை நாமே வரவழைத்துக் கொள்கிறோம் என்பது தான் உண்மையே.....

தினமும் நேரத்திற்கு தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்...பகல் தூக்கம் அறவே கூடாது...

மேலும் காலை நன்றாக உணவு உண்ணலாம்...ஓட்ஸ், கோதுமை ரவை, மக்காச்சோள ரவை, இட்லி, சிவப்பு அவல் என தினமும் ஒரு உணவை சேர்த்துக்கொள்ளலாம்....

மதியம் முக்கால் வயிறு உணவாக கொஞ்சம் சாதமும், பச்சை காய்கறிகள், கீரை வகைகள் ,ரசம், மோர் என உண்ணலாம்.....

இரவு 7.3௦0 லிருந்து 8 மணிக்குள் இரண்டு வாழைப்பழம் (அ) ஒரு ஆப்பிள் (அ) ஒரு மாதுளை (அ) ஒரு மாம்பழம் (அ) ரெண்டு கொய்யாபழம் (அ) கொஞ்சம் பப்பாளி (அ) ரெண்டு இட்லி (அ) ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி என மிக குறைவான அளவு உணவே உண்ண வேண்டும் .....

ஏதோ ஒரு வேலை இருந்து அதை முடித்து விட்டு தூங்க போகலாம் என்று இருந்தால் அந்த வேலை முடியும் போது நமக்கு தூக்கம் போய் வெகுநேரம் ஆகி இருக்கும். என்றாவது சில நாட்கள் கொஞ்ச நேரம் தவறி படுக்கலாம்....ஆனால் தினமும் நேரத்திற்கு தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்...பகல் தூக்கம் அறவே கூடாது... தூங்க செல்லும் நேரம் அதிக பட்சமாக இரவு 1௦ மணி (அ) அதற்கு முன்னும் இருக்கலாமே ஒழிய அதற்கு பின் இருக்கவே கூடாது...

இதற்கு நடுவில் காலை அல்லது மாலை நேரங்களில் பசித்தால் பழச்சாறு அருந்தலாம்...பழங்களை பிழிந்து சாறு எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குடிப்பது நல்லதில்லை. கூடுமானவரை பழங்களின் தன்மை மாறாமல் முழு பலன் கிடைக்க அவற்றை கழுவி அப்படியே (அ) தோலுரித்து சாப்பிட்டால் மிக்க பலன் கிடைக்கும்....

இதோடு முளை கட்டிய தானியங்கள் (கருப்பு சுண்டல், பச்சை பயிறு, கொள்ளு வேக்கடலை, கோதுமை) கொஞ்சமாக எடுத்து கொள்ளலாம்...பல் இல்லாதவர்கள் முளை கட்டிய தானியங்களை ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம்..

நம் உணவு மற்றும் தூங்கும் முறையிலே தான் நம் உடல் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது......உடலின் தேவைகளையும், இயற்கை முறைகளையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப முறை இல்லாமல் மாற்றிக் கொள்வதே எல்லா வியாதிகளும் வர காரணம்...

கிரீன் டீ


இந்த டீ குடிப்பதால் என்ன பலன்?
கிரீன் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும். மற்ற டீ போல கொதிக்க வைக்கவோ.... பால் சேர்க்காவோ தேவையில்லை. தேவைக்கு தேனோ அல்லது பனங்கற்கண்டு சேர்த்தோ அருந்தலாம் ...
கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பை (அ) இலையை சில நிமிடங்கள்(மூன்று நிமிடங்கள்) வைத்து வடிகட்டி அருந்தலாம்...
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல்..... மார்பகம், கல்லீரல், நுரையீரல், தொண்டை வயிறு, குடல் மற்றும் ரத்தப்புற்று நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.... சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் கிரீன் டீ உபயோகிப்பதால் உலகளவில் மற்ற நாட்டினரை விட புற்றுநோய்க்கு ஆளாவது இவ்விரு நாட்டிலும் மிகவும் குறைவே.
இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் பற்களை பாதுகாப்பதோடு இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையாகவும் ஆரோக்கியமாவாகவும் வாழவைக்கிறது.....
தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையைச் சீராக்குவதுடன், மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.........
இரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சர், முகப்பரு, வறண்ட சருமம்(dryskin), தோலில் ஏற்படும் அலர்ஜிகள், மனஅழுத்தம், சர்க்கரை நோய், போன்ற வியாதிகளில் இருந்து நம்மை காக்கிறது...
எலும்புகளுக்கு உறுதியையும் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்கிறது.
கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.....
Photo: கிரீன் டீ 
*******
இந்த டீ குடிப்பதால் என்ன பலன்?
கிரீன் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும். மற்ற டீ போல கொதிக்க வைக்கவோ.... பால் சேர்க்காவோ  தேவையில்லை. தேவைக்கு தேனோ அல்லது பனங்கற்கண்டு சேர்த்தோ அருந்தலாம் ... 
கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பை (அ) இலையை சில நிமிடங்கள்(மூன்று நிமிடங்கள்) வைத்து வடிகட்டி அருந்தலாம்... 
    கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல்..... மார்பகம், கல்லீரல்,  நுரையீரல், தொண்டை வயிறு, குடல் மற்றும் ரத்தப்புற்று நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக  திகழ்கிறது.... சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் கிரீன் டீ உபயோகிப்பதால் உலகளவில் மற்ற நாட்டினரை விட புற்றுநோய்க்கு ஆளாவது இவ்விரு நாட்டிலும்  மிகவும் குறைவே.
இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் பற்களை  பாதுகாப்பதோடு இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையாகவும் ஆரோக்கியமாவாகவும்  வாழவைக்கிறது.....
தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையைச் சீராக்குவதுடன், மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.........
இரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சர், முகப்பரு, வறண்ட சருமம்(dryskin), தோலில் ஏற்படும் அலர்ஜிகள், மனஅழுத்தம், சர்க்கரை நோய், போன்ற வியாதிகளில் இருந்து நம்மை காக்கிறது... 
எலும்புகளுக்கு உறுதியையும் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்கிறது.
கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.....

தண்ணீர்!!!!

ஒருவரின் உடல் ஆரோக்கியதிற்கு குடிநீருக்கே முதற்பங்கு இருக்கிறது. 5௦% நோய்கள் உண்டாக காரணமே குறைந்த அளவு (தாகம் எடுத்தால் கூட குடிக்காமல்) தண்ணீர் குடிப்பதே ஆகும்.

எப்போதும் தண்ணீரை அமர்ந்தே குடிக்க வேண்டும்..நின்று குடித்தால் கணுக்கால் வலி உண்டாகும். இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் தண்ணீர் நேரே குடற்பாதையில் இழுக்கப்பட்டு தசைப்பிடிப்பு ஏற்படும்
தண்ணீர் எந்த கலப்படமும் இல்லாமல் இருந்தால் தான் மட்டுமே அது அனைத்து செல்களுக்கும் “ஆஸ்மோஸிஸ்” (Osmosis) என்ற முறையில் சென்றடையும்.

உணவு உண்பதற்கு முன்பும் , உண்ட பின்னும் ½ மணிநேரம் இடைவெளி விட்டு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணும் போதும் இடையில் தண்ணீர் குடிக்க கூடாது. அப்போது தான் உணவு சரியான முறையில் ஜீரணமாகும். ஏனெனில் தண்ணீர் ஜீரணத்திற்கு தேவையான அமிலங்களை நீர்த்து போக செய்து விடும் .

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கால் மேல் கால் ஏன் போட கூடாது?


பொதுவாக பெண்கள் அதுவும் திருமணமாகாத பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரவோ (அ) தூங்கவோ கூடாது .
இதனால் வெள்ளை படுதல் மற்றும் முறையில்லா மாதவிடாயும் உண்டாகும்.

ஆண்களுக்கு விதைப்பை (Testes) அழுத்தம் ஏற்பட்டு விந்தணுக்கள் உற்பத்தி தடைபடும்......

சிறுநீரகங்கள் (Kidney)


நம் உடலில் மிக முக்கிய உறுப்புகளாக இதயம் , கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கருதப்படுகின்றன . மனித உடலில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகம் என்ற கிட்னி. நம் உயிர் சக்தியான ஜீவாதார மூலச்சக்தி இருப்பதே சிறுநீரகங்களில் தான்....

அதிக இருமல், நெஞ்சுவலி, இடுப்புவலி, விலாஎலும்பு வலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கைநடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல்வறண்டு அரிப்பு, இரத்தசோகை ஏற்படுதல் இதன் அறிகுறிகள்..............

அடிக்கடி சுவாசிப்பில் கஷ்டம், முகவீக்கம், மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம், அதிக இரத்த அழுத்தம் இவை அனைத்தும் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று கொள்ளலாம்.....

அதே போல் ஒருவருக்கு ஹைபர் பாரா தைராய்டு இருந்தால் தான் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் கற்கள் தோன்றும்....

சிலருக்கு சிறுநீர் நுரையோடு போகும் ...அப்படி போனால் அவர்களுக்கு உடலில் அதிக அளவு புரோட்டீன் சேர்ந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்...

உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், ஆஸ்துமா, வீக்கம்


உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், ஆஸ்துமா, வீக்கம் போன்ற உடல் உபாதை உள்ளவர்கள் உணவில் புளிப்பைச் சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் புளிப்பு உடலில் அமிலத்தை அதிகரித்து இன்னும் இந்த நோய்களின் தன்மையை அதிகரிக்கும்.....
10-15 நாட்களுக்கு புளிப்பான உணவை தவிர்க்க வேண்டும்.
தக்காளி, எலுமிச்சை, தயிர், மோர், புளி, ஆரஞ்சு, சாத்துகுடி, மாம்பழம், திராட்சை ஆகியவை புளிப்புத் தன்மை உள்ளவை.
நோயாளிகள் குளிர்பானங்களையும், ஐஸ்கிரீம் வகைகளையும் தவிர்க்க வேண்டும்....
காயிலே புளிப்புதன்மையகவும், பழுத்த பின் இனிக்கும் பழவகைகளை தவிர்க்க வேண்டும். பப்பாளி, சீதாபழம், கொய்யா, வாழைபழம், சப்போட்டா, அத்திபழம், கரும்பு, எலுமிச்சை சேர்க்காத கரும்புச்சாறு, இளநீர் மற்றும் தர்பூசணி சேர்த்துக்கொள்ளலாம்...
மைதா சேர்க்கப்பட்ட எந்த உணவையும் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. மைதா உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதால் பிரட், பிஸ்கட், நூடுல்ஸ், சமோசா போன்ற மைதாவால் ஆன பொருட்களை எப்போதுமே அறவே தவிர்க்க வேண்டும்.
மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போடுவதை தவிர்க்க வேண்டும்.

தூக்கம்

இரவு உணவு அருந்துவதற்கும் தூங்குவதற்கும் இடையே
குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் இருக்க வேண்டும்..... இந்த நேரத்தில் உடல் உழைப்பு செய்வது அஜீரணம் மற்றும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கும்

பற்பொடி..


அந்த காலத்தில் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கருவேலங்குச்சி, உப்பு, சாம்பல் போன்ற பக்க விளைவு இல்லாத இயற்கையான பொருட்களை உபோயோகித்து பல் தேய்த்து வந்தார்கள்.... இதனால் பல் சொத்தை, வலி, சிறிய வயதிலே பற்களை இழத்தல்,வாய்துர்நாற்றம், போன்ற எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் இயற்கையான பற்களுடன்....

ஆனால் இப்போது நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட்களில் நிகோடின் அதிக அளவில் உள்ளது என்று வெளிட்டு நம்மை பீதியடைய வைத்தார்கள்....

இதிலிருந்து விடுபட ரொம்பவும் எளிமையான வழி ஒன்று உள்ளது ...முயற்சி செய்து பாருங்கள்...
வேப்பிலை – நாலு பிடி
கல் உப்பு - ஒரு பிடி

இரண்டையும் மண்சட்டியில் இட்டு வறுத்து பொடி செய்து பல் தேய்த்து வந்தால்..... வேப்பிலையும், கல் உப்பும் பல்லுக்கு வரும் பல நோய்களைத் தடுக்கும்....இருக்கும் வியாதிகளையும் போக்கும் ......