மனதில் நிறுத்த வேண்டிய நான்கு விஷயங்கள்
------------------------------------------------------------------
1. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசித்து சாப்பிடா விட்டாலும் நோய் ..பசிக்காமல் சாப்பிட்டாலும் நோய் தான் ...
2. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் ..
3. சிறுநீர், மலம் அடக்க கூடாது ...
4. தூக்கம் வரும்போது உடனே தூங்க போக வேண்டும்.
தினமும் காலை மற்றும் இரவு ஆயில் புல்லிங் பண்ணவேண்டும்... காலை எழுந்ததும் வாய் கழுவாமல் இரண்டு ஸ்பூன் (அ) 10 மிலி எண்ணெய் எண்ணெய் (நல்லெண்ணெய் (அ) சமையல் செய்யும் எந்த எண்ணையாகவும்) வாயில் ஊற்றி கொப்பளித்து அந்த எண்ணெய் தண்ணீர் போல நீர்த்து போகும் அளவுக்கு செய்தால் முழு பலனையும் பெறலாம்.. அவ்வளவு நேரம் செய்ய இயலாதவர்கள் 15 நிமிடம் செய்தால் கூட போதுமானது. (ஆயில் புல்லிங் பற்றி எமது இன்னொரு பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்...) பின் பல் தேய்த்து விட்டு கிரீன் டீ, (அ) சுக்கு காபி குடிக்கலாம். .. புகை, மது இரண்டும் அறவே கூடாது... குறைந்தது அரைமணி நேரமாவது தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பசித்தால் உடனே சாப்பிட வேண்டும்...பசித்து சாப்பிடாமல் இருப்பதும், நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பசிக்காமல் சாப்பிடுவதும் என இரண்டுமே தவறு தான்.
தாகமே இல்லாமல் இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தேவையே இல்லாமல் தண்ணீர் குடிக்கவே கூடாது. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்தால் போதுமானது.
வெளி இடங்களுக்கு சென்றால் சிறுநீர், மலம் போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கழிவறை நன்றாக இருக்காது என்று அடக்கி கொண்டு இருந்தாலும் மிக பெரிய வியாதியை நாமே வரவழைத்துக் கொள்கிறோம் என்பது தான் உண்மையே.....
தினமும் நேரத்திற்கு தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்...பகல் தூக்கம் அறவே கூடாது...
மேலும் காலை நன்றாக உணவு உண்ணலாம்...ஓட்ஸ், கோதுமை ரவை, மக்காச்சோள ரவை, இட்லி, சிவப்பு அவல் என தினமும் ஒரு உணவை சேர்த்துக்கொள்ளலாம்....
மதியம் முக்கால் வயிறு உணவாக கொஞ்சம் சாதமும், பச்சை காய்கறிகள், கீரை வகைகள் ,ரசம், மோர் என உண்ணலாம்.....
இரவு 7.3௦0 லிருந்து 8 மணிக்குள் இரண்டு வாழைப்பழம் (அ) ஒரு ஆப்பிள் (அ) ஒரு மாதுளை (அ) ஒரு மாம்பழம் (அ) ரெண்டு கொய்யாபழம் (அ) கொஞ்சம் பப்பாளி (அ) ரெண்டு இட்லி (அ) ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி என மிக குறைவான அளவு உணவே உண்ண வேண்டும் .....
ஏதோ ஒரு வேலை இருந்து அதை முடித்து விட்டு தூங்க போகலாம் என்று இருந்தால் அந்த வேலை முடியும் போது நமக்கு தூக்கம் போய் வெகுநேரம் ஆகி இருக்கும். என்றாவது சில நாட்கள் கொஞ்ச நேரம் தவறி படுக்கலாம்....ஆனால் தினமும் நேரத்திற்கு தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்...பகல் தூக்கம் அறவே கூடாது... தூங்க செல்லும் நேரம் அதிக பட்சமாக இரவு 1௦ மணி (அ) அதற்கு முன்னும் இருக்கலாமே ஒழிய அதற்கு பின் இருக்கவே கூடாது...
இதற்கு நடுவில் காலை அல்லது மாலை நேரங்களில் பசித்தால் பழச்சாறு அருந்தலாம்...பழங்களை பிழிந்து சாறு எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குடிப்பது நல்லதில்லை. கூடுமானவரை பழங்களின் தன்மை மாறாமல் முழு பலன் கிடைக்க அவற்றை கழுவி அப்படியே (அ) தோலுரித்து சாப்பிட்டால் மிக்க பலன் கிடைக்கும்....
இதோடு முளை கட்டிய தானியங்கள் (கருப்பு சுண்டல், பச்சை பயிறு, கொள்ளு வேக்கடலை, கோதுமை) கொஞ்சமாக எடுத்து கொள்ளலாம்...பல் இல்லாதவர்கள் முளை கட்டிய தானியங்களை ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம்..
நம் உணவு மற்றும் தூங்கும் முறையிலே தான் நம் உடல் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது......உடலின் தேவைகளையும், இயற்கை முறைகளையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப முறை இல்லாமல் மாற்றிக் கொள்வதே எல்லா வியாதிகளும் வர காரணம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக