இரண்டு வெவ்வேறு குணாதிசயங்களை ஒரு சேரக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சில வேளைகளில் ஆத்திரம், கோபம், மன அழுத்தம், அதிக சந்தேகம் ஆகிய குணாதிசயங்களுடனும் , சில வேளைகளில் அளவுக்கு அதிகமான சந்தோஷத்துடன், அதிபுத்திசாலித்தனத்துடனும் காணப்படுவார்கள்.
இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையும் செய்யாமல் யாருடனும் சேராமல் ஒரு மூலையில் அமைதியாக இருப்பார்கள். அதிக அளவு உணர்ச்சி வசப்படுவார்கள். எப்போதும் தூக்கமே இல்லாமல் படுக்கையிலேயே மணிக்கணக்காக விழித்திருப்பார்கள். இல்லையென்றால் நாள் முழுவதும் உறங்கிக்கொண்டே இருப்பார்கள்.
மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும், களைப்படையாமலும், சுறுசுறுப்புடனும், வேகமாவும் பேசிக்கொண்டு வேலை செய்வார்கள். திடீரென்று அமைதியாக, சோகமாக மிகுந்த கவலையுடன் காட்சியளிப்பார்கள்.
அதிக அளவில் பாதிப்பு உள்ளவர்கள் தன்னையோ (அ) அடுத்தவரையோ தாக்குவார்கள். தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் என மோசமான நிலைக்கு தன்னையுமறியாமல் தள்ளப்படுவர்.
மனநிலையை ஒழுங்குபடுத்துதல், தியானம், யோகா போன்றவற்றால் பைபோலர் டிஸ்ஆர்டரை வேகமாக குணபடுத்த முடியும்.
தன்னிலை மறந்து இருப்பவர்களை நாம் பேசி புரிய வைப்பது என்பது முடியாத காரியம். அவர்கள் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே அவர்களால் உணர முடியாது.. அவர்களை மிகவும் கவனத்துடனும், அன்புடனும் கரிசனத்தோடு கவனித்து சீர்படுத்தி கொண்டு வரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக