புதன், 14 ஜனவரி, 2015

தீராத தலைவலியா- விரல் நுனியில் ஆரோக்கியம்

தீராத தலைவலியா- விரல் நுனியில் ஆரோக்கியம் 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
தலைவலி வந்துவிட்டால் உடனே கைவசம் இருக்கும் உடலுக்கு கேடான "பெய்ன்கில்லர்' போடும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு உண்டு. இந்த மாத்திரைகள் ஐம்பது வயதைத் தாண்டியதும், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பதை யாருமே உணருவதில்லை. உணரும்போது காலங்கள் கடந்து இருக்கும்.

உடலுக்கு தேவையான ஓய்வு, தூக்கம் இல்லாதது, சட்டென்று உண்டாகும் மனஅழுத்தம், எரிச்சல், சோர்வு போன்றவையே தலைவலிக்கு முக்கிய காரணங்கள்.

தலைவலி வந்துவிட்டால் உடனே எந்த வேலை இருந்தாலும் நிறுத்திவிட்டு, சிறிது நேரம் திறந்த வெளியில் இயற்கை காற்றை சுவாசித்தால் தலைவலிக்கு உடனே நிவராணம் கிடைக்கும். யோகா பயிற்சியும் நல்ல பலனை தரும்.

அக்குபஞ்சரில் தலைவலி தீர எளிய வழி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தலையின் முன்பக்கம், பின்பக்கம் விடாத (அ) அடிக்கடி தலைவலி, ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) அவதிப்படுபவர்களா? கவலையே வேண்டாம். உங்கள் விரல் நுனியிலையே ஆரோக்கியம் இருக்கிறது. கை கட்டை விரலின் மேல்பகுதியின் முன்பக்கம், பின்பக்கம் என கட்டைவிரலை சுற்றி (படத்தில் காட்டியுள்ளபடி) ஒரு சில நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வந்தால் நாட்பட்ட தீராத தலைவலிகள் எல்லாம் தீர்ந்து போகும். அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தவிதமான பாதிப்பும், பக்கவிளைவுகளும் இல்லாத எளிய முறை. முயற்சி செய்து தான் பாருங்களேன். அக்குபஞ்சர் அறிவோம்Aaranyam

மூங்கில் அரிசி மற்றும் மூங்கில் தளிர்

மூங்கில் அரிசி மற்றும் மூங்கில் தளிர்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மூங்கில் அரிசி - பதிவின் தொடர்ச்சி 
https://www.facebook.com/photo.php?fbid=902332106466535&set=a.177058772327209.38706.100000692633521&type=1&theater
உலகத்திலேயே அதிவேகமாக வளரும் தாவரங்களில் மூங்கிலும் ஒன்று. நீண்ட காலம் வளரக்கூடிய, புல் இனத்தைச்சேர்ந்த தாவரம் மூங்கில். மூங்கில் மரம் ஏறக்குறைய 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் மொத்த உயரமான 60 மீட்டரை, 59 நாட்களிலேயே மூங்கில்கள் அடைந்து விடுகின்றன. இந்தியாவில் 175 வகை மூங்கில்கள் வளர்கின்றன. இதை பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம் என்றும் அழைப்பது உண்டு. ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மூங்கில்கள் லேசானவை. அதே வேளையில் இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. பெரும்பாலானவர்களால் கூரை வேய்ந்த வீடுகள் கட்டவும், வேலி - தடுப்புகள் அமைக்கவும், கைவினைப்பொருட்கள் செய்ய பயன்பட்டாலும், குறிஞ்சி நில மக்களுக்கு மிக முக்கிய உணவாக இருந்தது. மூங்கிலில் தயாரிக்கப்பட்ட இருக்கைகளில், எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தாலும் உடலில் வெப்பம் ஏறாது. வியர்வையோ, எரிச்சலோ ஏற்படாது.
காடும்-காடு சார்ந்த நிலப்பரப்பான குறிஞ்சி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இந்த மூங்கில் குருத்துக்களையும், மூங்கில் அரிசியையும் ஆரம்ப காலங்களில் அதன் சுவைக்காக உணவாக உட்கொண்டார்கள். நாளடைவில் அவர்களால் அதில் இருந்த சத்துக்களையும்- மருத்துவ குணங்களையும் உணர முடிந்தது. காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கில் மரங்கள் அவ்வளவு எளிதில் பூப்பதில்லை. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். 40 ஆண்டுகள் கழித்து பூத்தாலும் அதில் அதிசயங்கள் நிரப்பி அரிசியாய் விளையும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. எளிய உணவாக இருந்தாலும் வலிமையைத் தரும் சத்துணவு. 100 கிராம் மூங்கிலரிசியில் 60.36 கிராம் கார்போஹைட்ரேட்டும், 265.6மிகி கலோரிகளும் குவிந்து கிடக்கும் என்றால் அது அதிசயம் தானே.
மூங்கில் மரம் மொத்தமுமே மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது. மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசி, மூங்கில் தளிர் ஆகியவற்றை முறையே உணவாக உட்கொண்டு வந்தால் எப்படிப்பட்ட கொடுமையான வியாதியாக இருந்தாலும் விலகி ஓடும். உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.
மூங்கில் அரிசி- குருத்து உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு யானை பலம் கொடுத்து, இரும்பை போல வலுவாக்கி, வஜ்ஜிரம் போல் இறுக்கி, தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைக்கும். எவ்வளவு கட்டுமஸ்த்தான உடலமைப்பை பெற்றவர்கள் கூட சர்க்கரை நோய் பிடித்தால் உருக்குலைந்து போவார்கள். ஆனால் அப்படி சர்க்கரை வியாதியால் உருக்குலைந்தவர்கள் கூட இந்த மூங்கில் உணவுகளை உட்கொண்டு வந்தால் மீண்டும் பழைய உடலமைப்பை பெறுவார்கள் என்றால் இது அதிசய உணவா?? இல்லையா???
மேலும் மூங்கிலரிசி பாலுணர்ச்சியின் உந்துதலை சீர் செய்து, கருப்பை கோளாறுகளையும் முறையாக்கி கருவுற பேருதவியாக இருக்கிறது.
மூங்கில் தளிர்கள்
இதற்குள் இருக்கும் சத்துக்குள் கணக்கில் அடங்காதவை. நார்ச்சத்துக்கள் நிரம்பியது . பிராணசக்தியை தன்னுள் அதிகம் கொண்டுள்ளதால் நீரிழிவு நோய், கான்சர், இதய நோய்களுடன் மலசிக்கலும் வராமல் தடுக்கும். பொட்டாசியம், ப்ரோடீன், ரைபோபிலேவின்(riboflavin), மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் B6 போன்ற உடலுக்கு தேவையான மிக முக்கிய சத்துக்கள் நிறைந்தது மூங்கில் துளிர்கள். பொட்டாசியம் பொதுவாக உடல் நலத்திற்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தாது பொருள். எலும்பு மண்டலத்திற்கு மக்னீசியமும், இரத்த சிவப்பு அணுக்கள் உருவாக தாமிரச்சத்தும் , நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு B6ம் என உடலுக்கு மிகவும் அவசியமான தாதுக்களை உள்ளடக்கியது. நரம்புத்தளர்ச்சியை சீர் செய்யும். தோலை நல்ல முறையில் பாதுகாக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, மூங்கில் தளிர்களை முறையாக உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். மேலும் பிரசவ காலங்களில் வலி இல்லாத பிரசவம் உண்டாக்க உதவும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். கொழுப்புக் குறை உணவு இது. புண்களை ஆற்றும். அல்சருக்கு சிறந்த நிவாரணி. இந்த தளிர்கள் செரிமானத்திற்கும், வயிற்றுப்போக்கிற்கும் உடனடி தீர்வு கொடுக்கும். வாசனை பொருட்களிலும், அழகுசாதன பொருட்களிலும், தலைமுடி தைலங்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
இப்போது சொல்லுங்கள் அதிசயத்தின் அடையாளம் தானே இந்த மூங்கில்...??அக்குபஞ்சர் அறிவோம் Aaranyamhttps://www.facebook.com/photo.php?fbid=889052224461190&set=a.177058772327209.38706.100000692633521&type=1&theater

மூங்கில் அரிசி

மூங்கில் அரிசி
* * * * * * * * * * * *
குழந்தை பேறு இல்லையா? கருவுறுதல் பிரச்சினையா? இது வரை நீங்கள் பார்த்த வைத்திய முறைகள் எதுவுமே பலனளிக்கவில்லையா? கவலையே வேண்டாம். 

மிக எளிய முறையில் இதற்கு தீர்வு காண முடியும். மூங்கில் அரிசியை உணவாக்கி தினமும் உண்டு வந்தால் ஓரிரண்டு மாதங்களிலேயே குழந்தைப் பேறு உண்டாகும். முயற்சித்துப் பார்க்கலாமே...

மூங்கில் அரிசி மற்றும் மூங்கில் தளிர் இவற்றில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக அடுத்த பதிவில். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

நீரிழிவு, இரத்த அழுத்தம் - சிறுநீரகச் செயல் இழப்பு

நீரிழிவு, இரத்த அழுத்தம் - சிறுநீரகச் செயல் இழப்பு
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இரண்டும் சிறுநீரகச் செயல் இழப்பு உண்டாக காரணங்கள். மேலும் புகை பிடிப்பதால் சிறுநீரகங்கள் செயலிழப்பதோடு, சிறுநீரக புற்று உண்டாகும் என்பதும் உறுதி. ஆண்மைக்குறைவு மற்றும் குழந்தையின்மை போன்ற மிக மோசமான குறைபாடுகளும், புகைப்பதால் கிடைக்கும் கூடுதல் பரிசு. frown emoticonஅக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

ஆப்பிள் - PLU code (price lookup number)

ஆப்பிள் - PLU code (price lookup number) 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

நன்றி: Maalaimalar தமிழ் Aaranyam அக்குபஞ்சர் அறிவோம்

பிராண சக்தி தொழிற்சாலை - மூங்கில் மற்றும் புங்கை

பிராண சக்தி தொழிற்சாலை - மூங்கில் மற்றும் புங்கை 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
"அட நீங்க வேறங்க...நாங்க இருக்கிறது வாடகை வீடு... அங்க மரம் எல்லாம் வளர்க்க முடியாது!...நாங்க அபார்ட்மெண்ட்ல போர்த் புளோர்ல இருக்கோம்.. நாங்க எப்படி மரம் வளர்க்க முடியும்? வறட்சி, தண்ணி கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு.. இதுல எங்க மரம் வச்சு தண்ணி ஊத்துறது?"

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்று சூழல் மாசு படாமல் காக்கவும், மழை வரவேண்டியும் மரம் நடுங்கள்.. என்று சொன்னால் நம்மவர்கள் சொல்லும் பதில்தான் மேற்கூறியவைகள்...

சரி விடுங்க.... அதெல்லாம் யாராவது "சமூக ஆர்வலர்" பட்டம் வாங்கினவங்க .பார்த்துக்கட்டும்... நம்ம வீட்டுக்குள்ள இருக்கவங்க ஆரோக்கியம் மேம்படவும் , கேன்சர் மற்றும் பல வியாதிகள் வராம தடுக்கவும் ஒரு மரம் நடலாமே...

என்ன இது ஆரோக்கியத்திற்கும் கேன்சர் வராம தடுக்கிறதுக்கும் , மரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

நாம சின்ன வயசுல ஸ்கூல்ல படிச்சிருப்போம்....தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது.( படிச்சோமா? இருக்கும் இருக்கும்.... மார்க்குக்காக படிச்சதால இதெல்லாம் எங்க ஞாபகத்துல இருக்கு) பொதுவாக எல்லா தாவரங்களும் ஆக்சிஜனை வெளியிட்டாலும் குறிப்பாக மூங்கிலும்- புங்கை மரமும் வெளியிடும் ஆக்சிஜனின் அளவு அதிகம். ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் மரங்கள் இரண்டும் நம் ஆரோக்கியத்தை காப்பாற்ற இயற்கை அளித்த வரங்கள் என்றே சொல்லலாம்.

மூங்கிலும், புங்கையும் புவி வெப்பமயமாதலை தடுக்கும், வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும், தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி இரண்டையும் தாங்கி நன்கு வளரும். மூங்கில் மற்றும் புங்கை தனது வாழ்நாளில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுகிறது.

இந்த மர நிழலில் ஒரு இளைப்பாறினால் உடல் உடனே புத்துணர்ச்சி அடைவதை நாமே உணரலாம். சரி.. இதற்கும் கேன்சருக்கும் என்ன சம்பந்தம்??
இருக்கே...சம்பந்தம் இருக்கே....

நம்ம ஒவ்வொருத்தர் உடம்புலயும் கேன்சர் செல் இருக்கு.. ஆனா அது எல்லாமே ஸ்லீப்பர் செல்லா இருக்கு....உடம்புல எப்போ பிராண சக்தி குறையுதோ..அப்போதான் அடங்கி இருக்க கேன்சர் செல்கள் வேகமாக வளர்ச்சி அடையவும், பரவவும் ஆரம்பிக்கும்... இந்த புங்கை மற்றும் மூங்கில் மரம் காற்று நம் மீது வீசும் போது நாம சுவாசிக்கிற ஆக்சிஜன் அளவு அதிகமாகி அந்த கேன்சர் செல்களை வளரவே விடாம ஸ்லீப்பர் செல்லாகவே முடக்கி வைக்கும்....அது மட்டுமில்லாம சின்ன சின்ன சில்லறை நோய்களையும் அண்டவே விடாது.

நம்ம வீட்டுல நடணும்னா நாலாவது புளோர்ல தான் நடணும்னு அவசியம் இல்லையே....அந்த அபார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளேயோ- வெளிலையோ கூட நடலாமே.... நாமளும் இலவசமாக பிராண சக்தியை பெறலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மூங்கில் மற்றும் புங்கை மரம் வீட்டிற்கு ஒன்று இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும். ஒவ்வொரு வீடுகளிலும் இவ்விரண்டு மரங்களை வளர்த்தால் போதுமாம் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்று உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவை இரண்டும் இயற்கை கொடுத்த வரம்ன்னே சொல்லலாம்.

இம் மரக்கன்றுகளின் விலையோ ஹோட்டல்களில் ஒரு பில்டர் காபி குடிக்க ஆகும் செலவு தான். நம்ம ஆரோக்கியத்துக்கும், மத்தவங்க ஆரோக்கியத்துக்கும் இந்த மரங்களை நடக்கூடாதா?

இன்னொரு டிப்ஸ்...மூங்கில் பல அரிய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. கை, கால் முட்டிவலியால் (joint pain) அவதிப்படுபவர்கள் மூங்கிலின் கணுக்கள் உள்ள பகுதியை அரைத்து, லேசாக உடல் தாங்கும் அளவிற்கு சூடாக்கி வலியுள்ள இடத்தில் வைத்து மெல்லிய துணியால் கட்டினால் போதும். வலி காணமல் போகும்.

என்னங்க.. எங்க கிளம்பிட்டீங்க.... மூங்கில், புங்கை மரம் நடத் தானே....??

அதானே.. எவ்வளவோ பண்றோம்.... இத பண்ண மாட்டோமா....!!! அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

தலைமுடி நன்கு வளர, வழுக்கை தலையில் முடி வர எளிய வழி


தலைமுடி நன்கு வளர, வழுக்கை தலையில் முடி வர எளிய வழி
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேங்காய் எண்ணையில் மல்லிகை பூவை போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மூங்கிலின் வேரை எரித்து அதன் சாம்பலை எண்ணெயுடன் கலந்து தலைக்கு பூசி வர வழுக்கை மறையும். (எர்வாமாட்டின்க்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது)

இதோடு மிகவும் எளிய பயிற்சியாக காதில் படத்தில் காட்டியுள்ளபடி அக்குபஞ்சர் புள்ளியில் நேரம் கிடைக்கும் போது இரண்டு நிமிடங்கள் அழுத்தம் கொடுப்பது மேலும் நல்ல பலனை கொடுக்கும். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

உணவு - உடல் - உயிர்

உணவு - உடல் - உயிர் 
* * * * * * * * * * * * * * * * * * *
உலகில் பட்டினிச்சாவு எந்த அளவிற்கு நிகழ்கிறதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதிக உணவாலும் மரணம் ஏற்படுகிறது. "இறப்பதற்கென்றே உண்ணுகிறார்கள்" என்ற ஆங்கிலேயப் பழமொழிக்கேற்ப பல பேர் விருப்பம் போல் உண்டு இறந்தும் விடுகிறார்கள்.

ஒரு வியாதி வர மூல காரணம் எதுவாக இருந்தாலும், மிக முக்கிய காரணம் முறையற்ற, கேடான உணவுப் பழக்கமே அனைத்து வியாதிகளுக்கும், வியாதியை வளர்க்கும் காரணிகளாக அமைந்துவிடும்.

உடல் அழிவதற்கான காரணங்களை ஐந்து பங்காக பிரித்தால், அதில் ஒரு பங்கு காரணம் பயம், தூக்கமின்மை, தீய பழக்கங்கள்- எண்ணங்கள். மீதமுள்ள நான்கு பங்கு காரணம் உணவு மட்டுமே என்கிறார் வள்ளலார்.

அவரவர் உடல்நிலைக்கு ஏற்பவும், தேவைக்கேற்பவும் உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும், குறைந்தாலும் உடலில் நோய் ஏற்படும்.

ருசிக்காகச் சாப்பிடக் கூடாத பொருள்களை அளவில்லாமல் உண்பதும், பசிக்காக அளவுக்கு மீறிச் உண்பதும் தான் பிணிகளுக்கு காரணம். "நொறுங்கத் தின்றால் நூறுவயது" என்ற நம் முன்னோர்கள் கூற்றுக்கு ஏற்ப, உணவை வாயிலையே நன்றாக மென்று கூழாக்கி தான் விழுங்க வேண்டும். நாம் உண்ட உணவு செரிமானமாவதற்கு நான்கு மணி நேரம் ஆகிறது.

சில நேரங்களின் பரிமாறுபவரின் அன்பின் காரணமாகவோ- சாப்பிடுபவரின் ஆசையின் காரணமாகவோ அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இப்படி அளவுக்கதிகமாகச் சாப்பிடும் உணவு செரிக்க குறைந்தது ஏழு முதல் எட்டுமணி நேரம் ஆகும் என வாஷிங்டன் சானிடோரியத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கூறப்பட்டுள்ளது.. இதனால் கல்லீரல், பித்தப்பை போன்ற ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப்புண் போன்றவற்றால் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளனர்

பலர் காலையில் ஒன்பது மணிக்கு காலை சிற்றுண்டியை சாப்பிட்டாலும், மதியம் ஒரு மணி ஆகிவிட்டால் மதிய சாப்பாட்டிற்கு தயாராகி விடுவார்கள். இவர்கள் பசிக்காக சாப்பிடுவது இல்லை. நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற மனநிலையில் பசிக்காமலே சாப்பிடுபவர்கள். இப்படி செரிமானமாவதற்கு முன்பே சாப்பிடும் உணவால் எளிதில் ஜீரணமாகாமலும், செரிமான மண்டலம் தொடர்ந்து உழைக்க வேண்டிய கட்டாயமும் உண்டாகிறது. மேலும் செரிமான மண்டலம் வெகுவிரைவில் தன்னிலை இழப்பதோடு, கட்டாய ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவதால் மற்ற உறுப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழக்க ஆரம்பிக்கும்.

மேலும் நம்மவர்கள் உடல் உழைப்புமின்றி, அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்தத்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்தக் குழாயில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. கொழுப்பு உணவு, போர்வாளைக் காட்டிலும் அதிகம் பேர்களை கொன்று விடும் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.

உலக மக்கள் அனைவருமே தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு பல்வேறு வகையான மருந்துகளோ, பஸ்பங்களோ, காயகல்பங்களோ உட்கொள்கின்றனர். இதையெல்லாம் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழும் காலம் ஆரோக்கியத்துக்கு. முறையான உணவு பழக்கங்கள், பசி அறிந்து அளவோடு உண்ணுதல், எளிய உடற்பயிற்சி,, தியானம் என்று வாழ்ந்தாலே போதும். வேறு ஒன்றுமே தேவையில்லை.

நமது அன்றாட உணவு என்பது நம் அனைவரின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், பாதுகாக்கவும் இயற்கை உணவை பழக்கப்படுத்திக் கொண்டால் நீண்ட ஆயுளையும், வளமான வாழ்க்கையையும் பெறலாம். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

சளி, அடுக்கு தும்மல், தலைபாரம் குணமாக - உணவே மருந்து

சளி, அடுக்கு தும்மல், தலைபாரம் குணமாக - உணவே மருந்து
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இன்றைய சூழலில் காற்று மாசுபட்டு தூசுக்களும், வாகன புகைகளில் வெளிவரும் கரித் துகள்களும் காற்றோடு கலந்து நுரையீரலுக்குள் புகுந்துவிடுவதாலும், புகை பிடிப்போரே நேரடியாக தார்- கார்பன் மோனாக்சைடு போன்றவற்றை நுரையீரலுக்கு அனுப்புவதாலும் நுரையீரல்தேவைக்கதிகமாகவே சளியை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. அதிகமாக உற்பத்தி செய்யப்படும் சளி நமக்கு நஞ்சாகி விடுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும்போது சளி மட்டும் என்ன செய்யும்?

சிலர் தூங்கி எழுந்த உடன் அடுக்கடுக்காய் தும்முவார்கள். கண்களில் நீர் வழிய வழிய தொடர்ந்து தும்முவார்கள். இதை தொடர்ந்து தலைவலி, தலை கனம்(இது அந்த தலைக்கனம் அல்ல) எல்லாம் வரும்!
இப்படியாக மனம்- மற்றும் உடல் நலத்தை கெடுக்கும் தும்மல், மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தலைபாரம் போன்ற பிரச்சினைகள் வந்த உடன் வழக்கம் போல நம்மூர் தொலைகாட்சி விளம்பரங்களில் நான் கற்று வளர்த்துக்கொண்ட அறிவை பயன் படுத்தி அருகில் உள்ள மெடிக்கல் போன்றவற்றிற்கு சென்று கோல்ட் ஆக்ட், கோல்ட்டாரின், டொலப்பர், சிட்ரசின் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி அந்த பிரச்சினையை தற்காலிகமாக பூசி மறைத்துக்கொள்வோம். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் நாம் அதை தற்காலிகமாக மூடி, மறைத்து நமக்குள்ளே வைத்திருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருப்பது தான். மூடி வைக்கப்பட்ட அந்த பிரச்சினை உள்ளுக்குள்ளேயே வளர்ந்து ஒருநாள் நாம் சாப்பிட்ட இரசாயன மருந்துகளின் பக்கவிளைவுகளுடன் வெடித்துக் கிளம்பும்.

பக்க விளைவுகள் நிறைந்த இந்த மருந்துகளினால் நம்முடைய ஒவ்வொரு உறுப்பும் பாழாகிக் கொண்டே போகும். எதனால் நம் உறுப்புகள் பாதிப்புகுள்ளாகிறது என்று நாம் உணரும் போது நாம் இழந்தது பணம் மட்டுமில்லாமல் நம்முடைய உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டையும் தான்.

நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளை சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய மருத்துவ வழி வகைகளை எண்ணற்ற வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பதிய வைத்துள்ளனர். ஆனால் அதை நாம் முறையாக கடைப்பிடிக்கவும், புரிந்து கொண்டு செயல்படுத்தவும் தவறியுள்ளோம். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிற்கு மருத்துவ குணம் உண்டு. அவற்றை முறையாக நாம் எடுத்துக்கொள்ளும் போது நம் உடலை பேணி காத்திட முடியும்.

சளி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர தீர்வு காண நம் வீட்டில் இருக்கும் மஞ்சள்பொடி, மிளகு, சீரகம், நெல்லிக்காய், எலுமிச்சை, வெங்காயம், தேன் இவையே போதுமானது. தொற்றுகள், அலர்ஜி மற்றும் புகைப்பதால் நம்முடைய நுரையீரல் பலவிதமான நோய்களை எதிர்கொள்ளும். நுரையீரலை ஆஸ்துமா, பிராங்கடிஸ் போன்ற வியாதிகளில் இருந்து நம்முடைய பழமையான, பெருமை மிக்க, சக்தி வாய்ந்த நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்து சென்ற அரிய வகை வைத்திய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

இந்த எளிய உணவு வகையால் நம்முடைய நுரையீரல் முழுவதும் புத்துணர்ச்சி பெற்று முழுவேகத்துடன் செயல்படும் என்பது உறுதி.

தேவையான பொருட்கள்:
--------------------------------------
1.சிவப்பு நிற வெங்காயம் - அரை கிலோ
2.நாட்டு சர்க்கரை (பிரவுன் சுகர்) – அரை கிலோ
3.எலுமிச்சை – 2
4.தேன் – ஏழு டீஸ்பூன்
5.ஒண்ணரை லிட்டர் தண்ணீர்

அடி கனமான, அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மிதமாக சூடேறியவுடன் அதில் நாட்டுச்சர்க்கரையை கொட்டி கிளற வேண்டும். தொடர்ந்து மிதமான சூட்டில் நாட்டுச் சர்க்கரை பிரவுன் கலர் மாறும் வரை கிளறி, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு பின் தண்ணீரையும் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டிலேயே மூன்றில் ஒரு பாகம் வரும் வரை கலவையை சூடாக்க வேண்டும்.

பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து அதில் எலுமிச்சை சாறையும், தேனையும் சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

இந்த ஜூஸை தினமும் சாப்பாட்டிற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கு சாப்பாட்டுக்கு முன் ஒரு டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். சளியின் தாக்கம் உடலில் குறைவதை ஒரே வாரத்தில் நாம் உணரலாம்.
நமது நுரையீரலில் சளியின் தாக்கம் குறைந்து மூச்சு சீராகும் வரை தொடர்ந்து உட்கொள்ளலாம்.

மேற்சொன்ன பொருட்கள் அனைத்தும் உணவே மருந்தாக நம் உடலில் செயல்படுவதால் நவீன மருத்துவரோ- மருந்தோ இன்றி, பக்க விளைவுகள் இன்றி நம்மை முழுவதும் சளியின் பிடியில் இருந்து மீட்கும். இந்த எளிய முறையை அனைவரும் வீட்டில் செய்து பயன் பெறுவோம்...!!!!அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

இரத்த அழுத்தமும், பக்கவாதமும் - தொடர்ச்சி

இரத்த அழுத்தமும், பக்கவாதமும் - தொடர்ச்சி 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
நமது முந்தைய பதிவில் பக்கவாதம் பற்றி விரிவாகவும், அதன் காரணங்களையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

மனிதனுக்கு பாதிப்புகள் அதிகம் தரும் வியாதிகளில் மிக முக்கியமானது அதிக இரத்த அழுத்தம் (அ) ஹைப்பர் டென்ஷன். அறிகுறிகளே இல்லாமல் மரணத்தை கொடுப்பதால் இந்த வியாதிக்கு "சைலென்ட் கில்லெர்" என்றும் பெயருண்டு.

தவறான உணவு முறையால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றால் இரததக்குழாய்களின் உட்புற அளவு (டயா) குறைந்து விடும். இதனால் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும் இரத்தம் அதிக அழுத்தத்துடன் செல்லும். இதை எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாயின் வாய் பகுதியை அடைத்து லேசாக திறந்தால் தண்ணீர் மிகுந்த அழுத்தத்துடன் வேகமாக வெளியேறும். அதே போலத்தான் இதுவும். இந்த அழுத்தம் அதிகமாகும் போது மூளைப்பகுதிக்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் மிக மெல்லிய இரத்தக்குழாய்கள் அழுத்தம் தாங்காமல் வெடிக்கும். இதனால் மூளைப்பகுதியுள் இரத்தம் உறைதல், பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது.

கொழுப்பு நிறைந்த துரித உணவு முறையின் காரணமாகவும், உடல் உழைப்பே இல்லாததாலும், ஓடி ஆடி விளையாடாமல் கணிப்பொறி விளையாட்டுகளில் கவனம் செலுத்தி ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலும் சிறு வயதிலேயே இரத்த அழுத்தப் பிரச்சினை தோன்றுகிறது. இரத்த அழுத்தம் உருவாக மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும், நீண்ட நாள் சர்க்கரை வியாதியும் காரணமாக அமைந்து விடுகிறது. இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அதிபயங்கர உயிர் பறிக்கும் வியாதிகளுடன், பற்பல இதய நோய்கள், சிறுநீரக வியாதிகள் போன்றவையும் சேர்ந்து விடுகிறது.

பொதுவாக பக்கவாதம் உடலை தாக்கும் முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, வாந்தி, சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும்போதே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இது போன்ற பிரச்சினைகள் வருமுன்னே தடுக்க, அதிக உடல் எடையை குறைக்க, உணவில் கவனம் செலுத்துவதுடன் உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
.
வியாதி வந்த பின் சரி செய்வது என்பது நீண்ட காலம் எடுக்கும். அதனால் இந்த வியாதி எதனால் வரும் என்று ஆராய்ந்து அதற்கு முறையான உணவு முறைகளை மேற்கொண்டாலே வியாதி வராமலும், வந்த வியாதியிலிருந்தும் மீளலாம். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் எளிய உடற்பயிற்சிகள், மற்றும் சரிவிகித சத்துணவும் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும்.

பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ள உணவு வகைகளையும், குறைந்த புரதச்சத்துக்கள் உள்ள உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டால் இந்த வியாதி வராமலே தடுக்கலாம். பழங்களில் திராட்சை, புற்றுப்பழம், ஈச்சம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி அதிகளவு பிராண சக்தி நிறைந்த, நோயெதிர்ப்பு தன்மை நிறைந்த பழங்களாகும்.

நார்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறிகள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். புதினா, சின்ன வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி இலை, கோதுமை, சிறு கீரை இதில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் உள்ளது.

இந்த வியாதியை போக்க, வராமல் தடுக்க அதிக பொட்டசியம் நிறைந்த பச்சை நிற காய்கறிகள், இலைக்கோசு, புரோக்கோலி, முள்ளங்கிகீரை, சீமை பரட்டைக்கீரை மற்றும் கீரை வகைகளில் தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கில் அதிக அளவு பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் சிறந்த உணவாகும்.

மிக எளிதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்க கூடிய வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உண்டு. சீரகம், எலுமிச்சை, கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய், கல்யாண முருங்கைக் கீரை, நெல்லிகாய், வாழைப்பழம், பீட்ரூட், உருளைக்கிழங்கு மற்றும் கீரை வகைகள், பச்சை நிற காய்கறிகள் போன்ற உணவுகளே மருந்தாக செயல்படுகிறது. கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பக்க விளைவுகள் இல்லாமலும் உடல் நலத்துடன் செயல்பட மருந்து மாத்திரைகளை புறம்தள்ளி உணவே மருந்தாக பயன்படுத்தி பலன் பெறலாம்.

உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.

கம்பு, வரகு, சாமை, திணை, சோளம் கேழ்வரகு, பார்லி, கோதுமை, சோளம் போன்ற சிறுதானியங்களை உணவில் தினமும் ஒரு வேளையும், பழங்கள், காய்கறி சாலட் மற்றும் சூப் வகைகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகை, மது, போதைப்பொருள்கள், மைதா உணவு வகைகள், நெய், எண்ணெய் மிகுந்த பலகாரங்கள், பீசா, பர்கர் பாஸ்ட் புட், ஜங்க் புட், சாக்லெட், ஐஸ்கிரீம் வகைகள் தவிர்க்க வேண்டும். உணவில் சேர்க்கும் எண்ணெயின் அளவை குறைப்பதுடன், உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம், அசைவ உணவு எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது அவசியம்.

தினமும் ஒரு கைப்பிடி அளவு முளைகட்டிய தானிய வகைகளை காலை உணவோடு எடுத்துக் கொண்டால் உடல் இளைப்பதோடு மட்டுமில்லாமல், இரத்த ஓட்டத்தை சீராக்கி, கைகால் மரத்து போதல், வாதத்தினால் உண்டாகும் கை கால் தளர்ச்சி, முக வாதம் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் நற்பலன்களை தரும்.
இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
பீட்ரூட் ஜூஸ் (சர்க்கரை, பால் சேர்க்க கூடாது) குடிப்பதால் இரத்த அழுத்தம் ஒரே நாளில் சீராகும். பீட்ரூட்டை சமைத்தும் உண்ணலாம்.

தினமும் நடைப்யிற்சி, மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம், யோகா என மன அழுத்தமில்லாமல் இருந்தால் எந்த வியாதியும் நம்மை அண்டாது.

உணவோடு கூடிய அக்குபஞ்சர் முறையில் இந்த வியாதியை முற்றிலும் குணமாக்கலாம். எளிமையான முறையில் நோயிலிருந்து விடுபட, இங்கு குறிப்பிட்டிருக்கும் இடங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று முறை 3-5 நிமிடங்கள் வரை அழுத்தம் கொடுத்து வர கல்லீரல், செரிமான உறுப்புகள், இதயம் போன்றவை பலப்படும். கண்களும் வலுவைடையும். இரத்த அழுத்தத்தால் உண்டாகும் பல உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வரலாம். மேலும் படத்தில் காட்டியுள்ளபடி கைகளை பின்பக்கம் வைத்துக் தலையைத் தாங்கிப் பிடிப்பதால் தோள்பட்டை வலி, அதிக நேரம் கம்யூட்டர் பார்ப்பதால் வரும் கழுத்து வலிகள் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

நம்முடைய அனைத்து பதிவுகளிலும் சொல்வதை போல நம் பாரம்பரிய உணவு வகைகளையும், பச்சை காய்கறிகளையும் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமும், நம் உடல் உள்ளுக்குள் இருக்கும் நோய்களை அறிகுறிகளாய் வெளிப்படுத்துவதை நன்கு கவனிப்பதன் மூலமும் மட்டுமே நம்மை நோய் அண்டாமலும், வந்த நோய் நம் உடம்பிலேயே நிரந்த விருந்தாளியாய் தங்கி விடாமலும் தடுக்க முடியும்.

நமக்கு நாமே மருத்துவராகி கடைகளில் மருந்துகள் வாங்கி உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் நம் உடலின் மொழியான நோய்க்கான அறிகுறிகளை தற்காலிகமாய் மறைத்து உள்ளுக்குள் நோயை வளரச்செய்யும். மேலும் பக்க விளைவுகளின் மூலம் கூடுதல் வியாதிகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.
உடலின் மொழி அறிவோம்.
உணவை முறைபடுத்துவோம்.
ஆரோக்கியத்தை கையகப்படுத்துவோம்.அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

இரத்த அழுத்தமும், பக்கவாதமும்!

இரத்த அழுத்தமும், பக்கவாதமும்!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அறியாமை காரணமாகவோ- அலட்சியம் காரணமாகவோ- அதீத நம்பிக்கை காரணமாகவோ நம் உடலில் உண்டாகும் சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுக் கொள்ளாமல் விடுவதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய ஆபத்தாய் மாறி உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இந்தியாவில் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் சாதரணமாக காணப்படுகிறது. இந்த வகையில் மிகவும் ஆபத்தானது உயர் இரத்த அழுத்தம். இரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே சிக்கல் தான். இந்த இரத்த அழுத்தமானது ஒரே நாளில் திடீரென உயர்ந்து விடுவது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.

பொதுவாக பக்கவாதத்துக்கு முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, வாந்தி, சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும்போதே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இது தொடங்கும் வேளையில் லேசான நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி, தலை வலி என சிற்சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஆனால் நெஞ்செரிச்சல் - அசிடிட்டி இருப்பதை உணர்ந்தால் ஈனோ - (அ) ஜெலூசில் குடி என்றும், தலை வலியா ஒரே ஒரு சாரிடான். நாமே இன்ஸ்டன்ட் மருத்துவர்களாய் மாறி பக்கத்து மெடிக்கல் ஷாப்பில் மருந்து- மாத்திரைகளை வாங்கி நமது அந்த பெரிய நோயை (???) தீர்த்துக்கொள்வோம். நமக்கு முன்னெச்சரிக்கையாக உடல் அறிவுறித்திய அந்த அறிகுறியை பூசி மறைத்து, உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்.
இன்ஸ்டன்ட் மருத்துவரான நம் உடலில் இரத்த அழுத்தம் இன்ஸ்டால்மென்ட் முறையில் வளர்ந்து பிறகு பெரிய பிரச்சினையாய் உருவெடுக்கும்.

எப்போதும் பரபரப்பாக மன அமைதியின்றி இருத்தல், சரியான நேரத்துக்கு தூங்காமல் இருத்தல், தொடர் மன அழுத்தம், எதற்கெடுத்தாலும் கோபப்படுதல், எரிச்சலடைதல்... நமது பொறுப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று உடலையும்- மனதையும் அலட்டிக்கொள்ளுதல் போன்றவை தான் இரத்த அழுத்தம் வர காரணம். இதோடு, நாம் எப்போதும் சொல்வது போல நவீன உணவு முறைகள், இவைகளும் முக்கிய காரணம். இரத்த அழுத்தத்தின் அடுத்த கட்டம் மரணம் (அ) பக்க வாதம். உணவில் அதிகளவு கெட்ட கொழுப்பை அதிகம் எடுத்துக் கொள்ளுதல், எப்போதும் டென்ஷனாக இருத்தல், நீண்டகால ரத்த சோகை போன்ற பிரச்னை உள்ளவர்களை பக்கவாதம் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது.

முன்பெல்லாம் பெரும்பாலும் நடுத்தர வயதினரைத் தான் பக்க வாதம் தாக்கும். இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் பக்க வாதம் தாக்குகிறது. உலகம் முழுவதும் ஆறு வினாடிக்கு ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் நாற்பது வயதுக்கு மேல்தான் வரும் என்று நம்பி இருந்த காலம் போய் இப்போது பதினெட்டு வயதிலேயே தாக்க ஆரம்பித்து விட்டது. நடுத்தர வயதினரின் உடலில் ஏற்படும் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இந்த இரண்டும் தான் வாதம் உண்டாக மிக முக்கிய காரணம். மேலும் நாள்பட்ட நோய்களான இதய நோய், சிறுநீரகப் பழுது, அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்கள், இரத்தக் குழாய் அடைப்பு மற்றும் இரத்தக் கட்டிகள் ஆகியவற்றாலும் வாத நோய் வரலாம்.

உடல் பருமன், அதிகக் கொழுப்பு, போன்ற பிரச்னை உள்ளவர்களையும் வாதம் எளிதில் தாக்கும். சாதாரண விஷயம் போல நாம் நினைத்துக் கொண்டாலும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகளும் பாதிக்கப்படும்.

சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கும், சிறுநீரங்ககளில் பிரச்சினை உள்ளவர்களுக்கும் இரத்தக்குழாய் தடிமனாக இருக்கும். இவர்களது உடலில் இரத்த ஓட்டம் குறையும். இதனால் வலியை உணரவும் முடியாமல், பக்கவாதத்துக்கான அறிகுறிகள் இருந்தாலும் தெரியமால் பக்க வாதம் திடீரென தாக்க வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. கொழுப்பு கட்டிகள், இரத்த ஓட்டத்தை தடுப்பதாலும் வாதநோய் தாக்கும். வாதத்தின் அடுத்த கட்டமாக உடல் செயலிழத்தல், நினைவிழத்தல் போன்ற பிரச்னைகளை தடுக்கலாம்.

மூளையிலும், தண்டு வடத்திலும் நரம்புகள் ஆரம்பித்து தசைகளை இயக்குகின்றன. மூளைக்கு செல்லும் இரத்தக்குழாயில் இரத்தம் உறைந்தாலோ இரத்தக் குழாய் வெடித்தாலோ மூளையில் பாதிப்பு ஏற்படும். மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் வெடித்தால் மரணம் உண்டாகும். மேலும் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய் சுருங்கினால், மூளைக்கு செல்லும் இரத்தம் அளவு குறைவதால் பக்கவாதத்தில் தான் போய் முடியும். மேலும் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளைக்கு செல்லும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதால், மூளைப் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்புகளில் பாதிப்பும், மூளையில் இரத்தக் கசிவும் ஏற்பட்டு வாத நோய் உண்டாகும். மூளையில் உண்டாகும் பாதிப்புக்கு ஏற்ப அப்போது மூளையின் எந்த பகுதிக்கு இரத்த ஓட்டம் செல்வது குறைகிறதோ அதன்படி முகம், கை, கால் அல்லது முழு பக்கவாத பாதிப்பு உண்டாகும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி செயல் இழந்து போகும். இத்துடன் தலையில் அடிபடும் போது மூளை பாதிப்பின் காரணமாக வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்த நோய் உண்டாவதோடு, சிறுநீரகங்கள் கெட்டுப் போகும் வாய்ப்பும் அதிகம். தவறான உணவு முறைகள், உடல் உழைப்பு இல்லாமல் அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, அடிக்கடி குளிர்பானங்களை குடிப்பதால் இரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, புகை, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை என இது போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் உண்டாகி விடுகின்றன.

புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது இரத்தக் குழாயை சுருங்க செய்வதால் சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டமும் தடை படும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும், புகைபிடிக்கும் பழக்கத்தையும் விட வேண்டும். சரியான நேரத்துக்கு தூங்குவது, முறையான உணவு முறைகள், கொழுப்பு உணவுகளை தவிர்த்தல் போன்றவை அவசியம்.

உணவு முறை, வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை தடுக்க முடியும். நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அமைதியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். பக்கவாதம் வந்த பின் பழைய நிலைக்கு திரும்புவது சாதாரண விஷயம் இல்லை. இதிலிருந்து காத்துக் கொள்வது எப்படி என இனி காணலாம். உணவு முறைகள், எளிய உடற்பயிற்சிகள், அக்குபஞ்சர் இவற்றின் மூலம் உடலில் உண்டான இந்த கோளாறுகளை குணமாக்குவது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam