புதன், 14 ஜனவரி, 2015

பிராண சக்தி தொழிற்சாலை - மூங்கில் மற்றும் புங்கை

பிராண சக்தி தொழிற்சாலை - மூங்கில் மற்றும் புங்கை 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
"அட நீங்க வேறங்க...நாங்க இருக்கிறது வாடகை வீடு... அங்க மரம் எல்லாம் வளர்க்க முடியாது!...நாங்க அபார்ட்மெண்ட்ல போர்த் புளோர்ல இருக்கோம்.. நாங்க எப்படி மரம் வளர்க்க முடியும்? வறட்சி, தண்ணி கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு.. இதுல எங்க மரம் வச்சு தண்ணி ஊத்துறது?"

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்று சூழல் மாசு படாமல் காக்கவும், மழை வரவேண்டியும் மரம் நடுங்கள்.. என்று சொன்னால் நம்மவர்கள் சொல்லும் பதில்தான் மேற்கூறியவைகள்...

சரி விடுங்க.... அதெல்லாம் யாராவது "சமூக ஆர்வலர்" பட்டம் வாங்கினவங்க .பார்த்துக்கட்டும்... நம்ம வீட்டுக்குள்ள இருக்கவங்க ஆரோக்கியம் மேம்படவும் , கேன்சர் மற்றும் பல வியாதிகள் வராம தடுக்கவும் ஒரு மரம் நடலாமே...

என்ன இது ஆரோக்கியத்திற்கும் கேன்சர் வராம தடுக்கிறதுக்கும் , மரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

நாம சின்ன வயசுல ஸ்கூல்ல படிச்சிருப்போம்....தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது.( படிச்சோமா? இருக்கும் இருக்கும்.... மார்க்குக்காக படிச்சதால இதெல்லாம் எங்க ஞாபகத்துல இருக்கு) பொதுவாக எல்லா தாவரங்களும் ஆக்சிஜனை வெளியிட்டாலும் குறிப்பாக மூங்கிலும்- புங்கை மரமும் வெளியிடும் ஆக்சிஜனின் அளவு அதிகம். ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் மரங்கள் இரண்டும் நம் ஆரோக்கியத்தை காப்பாற்ற இயற்கை அளித்த வரங்கள் என்றே சொல்லலாம்.

மூங்கிலும், புங்கையும் புவி வெப்பமயமாதலை தடுக்கும், வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும், தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி இரண்டையும் தாங்கி நன்கு வளரும். மூங்கில் மற்றும் புங்கை தனது வாழ்நாளில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுகிறது.

இந்த மர நிழலில் ஒரு இளைப்பாறினால் உடல் உடனே புத்துணர்ச்சி அடைவதை நாமே உணரலாம். சரி.. இதற்கும் கேன்சருக்கும் என்ன சம்பந்தம்??
இருக்கே...சம்பந்தம் இருக்கே....

நம்ம ஒவ்வொருத்தர் உடம்புலயும் கேன்சர் செல் இருக்கு.. ஆனா அது எல்லாமே ஸ்லீப்பர் செல்லா இருக்கு....உடம்புல எப்போ பிராண சக்தி குறையுதோ..அப்போதான் அடங்கி இருக்க கேன்சர் செல்கள் வேகமாக வளர்ச்சி அடையவும், பரவவும் ஆரம்பிக்கும்... இந்த புங்கை மற்றும் மூங்கில் மரம் காற்று நம் மீது வீசும் போது நாம சுவாசிக்கிற ஆக்சிஜன் அளவு அதிகமாகி அந்த கேன்சர் செல்களை வளரவே விடாம ஸ்லீப்பர் செல்லாகவே முடக்கி வைக்கும்....அது மட்டுமில்லாம சின்ன சின்ன சில்லறை நோய்களையும் அண்டவே விடாது.

நம்ம வீட்டுல நடணும்னா நாலாவது புளோர்ல தான் நடணும்னு அவசியம் இல்லையே....அந்த அபார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளேயோ- வெளிலையோ கூட நடலாமே.... நாமளும் இலவசமாக பிராண சக்தியை பெறலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மூங்கில் மற்றும் புங்கை மரம் வீட்டிற்கு ஒன்று இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும். ஒவ்வொரு வீடுகளிலும் இவ்விரண்டு மரங்களை வளர்த்தால் போதுமாம் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்று உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவை இரண்டும் இயற்கை கொடுத்த வரம்ன்னே சொல்லலாம்.

இம் மரக்கன்றுகளின் விலையோ ஹோட்டல்களில் ஒரு பில்டர் காபி குடிக்க ஆகும் செலவு தான். நம்ம ஆரோக்கியத்துக்கும், மத்தவங்க ஆரோக்கியத்துக்கும் இந்த மரங்களை நடக்கூடாதா?

இன்னொரு டிப்ஸ்...மூங்கில் பல அரிய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. கை, கால் முட்டிவலியால் (joint pain) அவதிப்படுபவர்கள் மூங்கிலின் கணுக்கள் உள்ள பகுதியை அரைத்து, லேசாக உடல் தாங்கும் அளவிற்கு சூடாக்கி வலியுள்ள இடத்தில் வைத்து மெல்லிய துணியால் கட்டினால் போதும். வலி காணமல் போகும்.

என்னங்க.. எங்க கிளம்பிட்டீங்க.... மூங்கில், புங்கை மரம் நடத் தானே....??

அதானே.. எவ்வளவோ பண்றோம்.... இத பண்ண மாட்டோமா....!!! அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக