சனி, 19 அக்டோபர், 2013

Allergy - அலர்ஜி (ஒவ்வாமை)

அலர்ஜி என்பது நோய் அல்ல. பாக்டீரியா, வைரஸ், தட்பவெப்பம், உணவு, சுற்றுச்சூழல், மாசு, வாசனை திரவியங்கள், பூக்களின் மகரந்தம், உடலின் எதிர்ப்பு சக்தி குறைபாடு, செல்லப் பிராணிகளின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி என் பல காரணங்களினால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையே அலர்ஜி ஆகும்.

மேலை நாடுகளில் மட்டுமே அலர்ஜியின் தாக்கம் அதிகம் எனும் நிலை மாறி இப்போது நம் நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

அலர்ஜி எந்த வயதிலும் வரலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அலர்ஜி இருக்கும். காரணம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். சிலருக்கு சிறிய மாற்றங்கள் கூட , அதாவது உணவு, வாசனை பொருட்கள் கூட ஒவ்வாமையை உண்டு பண்ணும்.
காலை எழுந்தவுடன் அடுக்குத் தும்மல், கண்களில் தொடர்ந்து நீர் வடிதல், கண்களில் எரிச்சல் (அ) நமைச்சல், தோல் அரிப்பு, தோலில் சிவந்த தடிப்பு, மூக்கடைப்பு, இவைகள் எல்லாம் சமகாலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகள். இவற்றிற்கு காரணம் அலர்ஜியே..

சரியான காரணத்தை கண்டுபிடித்து அலர்ஜியை குணப்படுத்த முடியும். ஆனால் அலர்ஜியை ஆரம்பத்தில் பலரும் ஒரு பொருட்டாகவே கருதாமல் விட்டு விடுவதால் பின்னாளில் பல வியாதிகளை எதிர் கொள்கிறார்கள்.

நாய், பூனை, கிளி மற்றும் புறா போன்ற செல்ல பிராணிகளுடன் ஒட்டி உறவாடுவதன் மூலமும், தோலிற்கு ஒவ்வாமல் அரிப்பு ஏற்படுத்தும் துணி வகைகளை அணிவதனாலும், துணிகளில் உள்ள சாயம் போன்ற வேதி பொருட்களாலும், பூச்சிக்கடி , பிளாஸ்டிக்பொருட்கள், பால் மற்றும் சில உணவு வகைகளாலும், மருந்து வகைகளாலும் அலர்ஜி உண்டாகலாம்.

புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்கு அலர்ஜியை உண்டு பண்ணும். நாம் உண்ணும் உணவில் உள்ள தக்காளி, கத்தரிக்காய், முட்டை, இறைச்சி, ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா, சிக்கன், சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி உண்டாகும். பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. சிலருக்கு மாத்திரைகளால் கூட அலர்ஜி உண்டாகும். அலர்ஜியால் உடம்பில் கொப்புளம், தடிப்பு, அரிப்பு, திட்டு திட்டாக சிவந்து போதல், தோல் வெடித்து புண்ணாதல் , காய்ச்சல் என பல நோய்கள் தோன்றும். பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் சுத்தமாக பராமரிப்பது மிக முக்கியம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவு மற்றும் மருந்து வகைகளை கண்டறிந்து தவிர்ப்பதன் மூலம் தொல்லைகளிருந்து மீளலாம். சுற்று புறத்தை தூசுகளின்றி தூய்மையாக வைப்பதன் மூலமும், தூசு அதிகமுள்ள இடங்களில் இருப்பதை தவிர்ப்பதன் மூலமும், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் அலர்ஜியில் இருந்து விடுபடலாம்.

இதற்கு நிரந்த தீர்வு கண்டிப்பாக உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக