சனி, 7 ஜூன், 2014

"தோப்புக்கரணம்" - இது தண்டனை அல்ல... சிகிச்சை..!!!

"வீட்டுப்பாடம் செய்யாதவங்க எல்லாம் தோப்புக்கரணம் போடு.." என்று பள்ளியில் ஆசிரியர் சொல்வதை கேட்டிருக்கிறோம்... பிள்ளையார் கோயில்களில் வழிபாட்டிற்காக தோப்புக்கரணம் போடுபவர்களை பார்த்திருக்கிறோம்.. இவைகள் எல்லாம் சில பல வருடங்களுக்கு முன்பு மிகச் சாதாரணமாய் நடக்கும் நிகழ்வுகள்... ஆனால் இப்போது தோப்புக்கரணம் போடுவதை அதிகமாகக் காணமுடிவதில்லை. அந்தப்பழக்கம் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.

ஆனால் தண்டனையாகவோ, பிரார்த்தனையாகவோ நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த "தோப்புக்கரணம்" போடும் பழக்கம் ஒரு மிகப்பெரிய "அக்குபஞ்சர்" சிகிச்சை முறை என்பதும்.. அது உடலின் பல உறுப்புகளை தூண்டும் முறை என்பதும் நமக்குத் தெரியாதது. தோப்புக்கரணம் போடும்போது காதுகளைப் பிடித்துக் கொள்வதால். முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.

இரு கால்களுக்கும் சற்று இடைவெளி விட்டு நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்கா
ர்ந்து எழுவதே தோப்புக்கரணம் ஆகும். இடது கையால் வலது காதுமடலையும், வலது கையால் இடது காதுமடலையும் பிடிக்க வேண்டும். கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்குமாறு இருவிரலால் பிடிக்க வேண்டும். (வலது கை இடது கையின் மேல் இருக்க வேண்டும்.) முதுகுதண்டு நேராக இருக்கும்படியும், தலையை நேராய் பார்த்த படியே முச்சுக் காற்றை மெதுவாகவும் சீராகவும் விட்ட படியே உட்கார்ந்து எழ வேண்டும். அதிக சிரமப்படாமல் முடிந்த அளவு உட்கார்ந்து முச்சை இழுத்துக்கொண்டே பொறுமையாக எழவேண்டும். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது. மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.இதனால் மூளையின் நரம்பு மண்டலங்களின் வழியாக சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. 



தோப்புக்கரணத்தின் மகிமையை ஆராய்ந்த அமெரிக்கர்கள் நிபுணர்கள், இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும், மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெற்று நியூரான்களும் புத்துணர்ச்சி அடைந்து, மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளைப் பெற்று மூளையின் நியூரான்களின் செயல்பாடுகள் அதிகரிப்பதை நிரூபித்துள்ளனர்..

விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது முழு உடல்நலத்திற்கும் உகந்தது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. (அமெரிக்காகாரன் சொன்னாதான் நம்ம ஊருக்காரங்க நம்புவாங்க)



"ஆட்டிசம்"போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை தினமும் பயிற்சி செய்து வந்தால் வியக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம் என்று அமெரிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

மூட்டுவலிக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக உடலில் உப்புச் சத்து குறைந்தாலும், அதிகமானாலும் சவ்வு பாதிக்கப்பட்டு மூட்டுவலி ஏற்படும். மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் பாதிப்பால் மூட்டுவலி உண்டாகிறது. சிறுநீரகம் செயல்பாடு குறைவும் ஒரு காரணம். தேவைக்கதிகமான கொழுப்புச்சத்
து மற்றும் அதிகபடியான நீர் சேர்வதாலும், உடல் எடை அதிகரிக்கும். பால்வினை நோயாலும் மூட்டுவலி ஏற்படும். கருப்பை அகற்றிய பெண்களுக்கும் எலும்பு தேய்ந்து மூட்டுவலி வர வாய்ப்புள்ளது.

தரையில் சமமாக கால் பதிக்கக் கூட சிலரால் முடியாது. அப்படியே காலை வைத்தாலும் அதில் ஒரு பிடிமானம் இல்லாமல் ஆடுவது போன்ற உணர்வு இருக்கும். வலி அதிகமானப் பிறகு யோகா, தியானம் என சில பயற்சிகளை செய்யத்தொடங்குவார்கள்... ஆனால் அப்படியும் கூட வலி குறையாமல் அதிகமானதாக சிலர் கூறுவார்கள். 

பெரியவர்கள் மூட்டுவலி என்று கூறும் காலம் போய் இப்போது இளவயதினர் கூட கூறும் வார்த்தை இது தான். அதிக எடை மற்றும் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்தல், உடல் உழைப்பும், உடற்பயிற்சியுமின்மையும் இதற்கு காரணம்.
ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகளும் தைலம் தேய்ப்பது, ஒத்தடம் போடுவது தற்காலிகத் தீர்வையே தரும்.

எளிய தோப்புக்கரணத்தின் பலன்களோ மிகவும் அற்புதமானவை. தரையில் அமர்ந்து எழுந்திருப்பதால், நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடும். தரையில் உட்கார்ந்து எழும்போது இரத்த ஓட்டம் இதயத்தில் சீராக இருப்பதால், இதயம்ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலின் ஒவ்வொரு பாகமும் பலனடைகிறது. குறிப்பாக, தரையில் அமர்வதால், முழங்கால் மூட்டுக்களும், இடுப்பெலும்புகளும் வலுவடைகின்றன. அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால், இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது. முழு ஆரோக்கியம் நம் உடலுக்கு வேகமாக கிடைக்க இதை விட்டால் வேற வழியே இல்லை எனலாம். இதை உங்கள் வாழ்நாள் முழுதும் பூரண ஆரோக்கியத்துடன் வாழலாம்.

இதனால் காலில் உள்ள தசைகள் வலுப்பெறுவதுடன் உடலில் உள்ள தசைகளும் சேர்ந்தே வலுவடையும். உடலின் மொத்த உறுப்புகளும் மிகுந்த பயன் அடையும். இந்த எளிய பயிற்சி மூலம் நம் உடல் மேற்புறமும், கீழ்புறமும் சமமாக வலுவடையும். இயல்பாக எந்த வேலை செய்தாலும் தசைகளை சமநிலைப் படுத்தி வலுவுடனும் மிகவும் இலகுவாக வலியற்று நகரும் தன்மையுடன் செயல்பட வைக்கிறது. உடல் எடையை குறைந்து மூட்டுவலி இருந்த இடம் தெரியாமல் போகும். வயிற்றுத் தசைகளை வலிமைப்படுத்தும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், சியாட்டிகா என்றழைக்கப்படும் இடுப்புச் சந்து வாதம் உள்ளவர்களுக்கும் இந்த தோப்புக்கரணம் நல்ல பயனளிக்கும். இடுப்பு மற்றும் மூட்டுகளுக்கு வலுவடைந்து தசைப்பிடிப்பு, மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவை நம்மை விட்டொழியும். முக்கியமாக உடலில் தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக வெளியற்றப்படுகிறது , உடலில் உள்ள சக்தி சீராக தசை, உள்ளுறுப்புகள், மற்றும் சுரப்பிகளுக்கு அனுப்பபடுகிறது. இதனால் பெருங்குடல் வலுவடைந்து, சீரான அசைவுகளின் மூலம் மலத்தை வெளியேற்றுகிறது. மலச்சிக்கல் தீர்வதற்கு இது மிகச் சிறந்த வழியாகும். 

இந்த பயிற்சியை நாம் எங்கு வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம். ஜிம்மிற்கு போகவும் வேண்டாம். வேறு எந்த உபகரணமும் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆரம்ப காலகட்டங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை 15-20 முறை தோப்புக்கரணம் போடலாம் (அ) படத்தில் கூறியுள்ளது போல உட்கார்ந்தும் எழலாம். வயதானவர்கள் தன்னிச்சையாக நின்ற நிலையில் தோப்புகரணம் போட முடியாது ஆகவே அவர்கள் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டோ, நட்டுவைக்கப்பட்ட இரும்பு, மரத்தூண்களை பிடித்துக்கொண்டோ உட்கார்ந்து எழுந்திருக்கலாம்.

தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதும், மலத்தை அடக்குவதும் அறவே கூடாது. காபி, டீ குடிப்பதை நிறுத்த வேண்டும். சீரணமாக அதிக நேரம் எடுக்கும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை முறையிலும், உணவு பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்


சளி, சைனஸ், ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் - எளிய தீர்வு (அக்குபிரஷர்)

வ்வாமை எனப்படும் அலர்ஜிகளில் அதிகமாக நமக்கு மன உளைச்சல் தரக் கூடியது கண் மற்றும் மூக்கு சம்பந்தமான அலர்ஜிகளால் தான். கோடை காலத்திலும் சளி, அடுக்குத் தும்மல் தொல்லைகளால் ஏராளமானோர் அவதிப்படுப்படுகிறார்கள். 

சைனஸ்களின் சிற்றறைகளில் இருந்து வெளியே வர வேண்டிய நீர், சளியாக மாறி, கட்டியாக அடைத்துக் கொள்வதால், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சுவாச மண்டலம் பாதிக்கப்படுகிறது.

நமது தவறான உணவுப் பழக்கம், சுற்றுப்புற சூழ்நிலையுள்ள மாசு, பூக்களின் மகரந்தம், மின் விசிறி, ஏசியின் பில்டரில்களில் படியும் தூசி, நாய், பூனை உள்ளிட்ட வீட்டு செல்லப் பிராணிகள் எச்சம் மற்றும் முடி, தரமற்ற ஐஸ்கிரீம் போன்றவற்றால் அலர்ஜி, சைனஸ் பாதிப்பு வர முக்கிய காரணங்களாக அமைகின்றன.

காது, மூக்கு, தொண்டைக்கும் தொடர்புண்டு. இதனால் ஒன்றில் ஏதாவது பாதிப்பு வந்தாலும், அடுத்தடுத்த பகுதிகளையும் பாதிக்கும். மூக்குத் தண்டு வளைவு இருந்தாலும், மூக்கு, தொண்டைக்கு மேல் உள்ள, 'அடினாய்டு' அடைப்பு, வீக்கத்தினாலும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) சைனஸ் பிரச்னை ஏற்படும்.

பல் சொத்தையும் சைனஸ் தொல்லைகளை உண்டாக்கலாம். பற்களின் வேர்களின் அருகில் தான் மாக்ஸீலரி சைனஸ் அறைகள் உள்ளன. தீவிரமான, ஆழமான பல் சொத்தை வேர் வரை பரவும் போது, பக்கத்தில் இருக்கும் சைனஸ் அறைகளையும் தாக்கும்.

தூக்கமின்மை, தலைபாரம், தலைவலி, கண்களை சுற்றியும் வீக்கம் வலி, கண்களின் பின்பக்கம், தலையின் முன்புறம், பின்புறம் வலி, பல்வலி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், அடுக்குத் தும்மல், தொண்டை வலி, ருசி உணரமுடியத நிலை, தலைக்கு குளிக்கும் அன்று கட்டாயம் தலைவலி, குனிந்தாலும், நிமிர்ந்தாலும் தலை விண் விண் என்று தெறிக்கிற வலி, இரண்டு மூன்றுமுறை பல்துலக்கினாலும் வாயில் தொடர்ந்து துர்நாற்றம் வருதல் ஆகியவை நோயின் பாதிப்புகளாக அமைகின்றன.

இப்படியான பலவித தொல்லைகளை தரும் அலர்ஜிகள் வராமல் தடுக்கவும், வந்திருந்தால் குணமாக்கவும் நம் உணவில் பழங்கள், முருங்கைக்காய், முள்ளங்கி, பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், மைதாவால் ஆன உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மது, புகை இரண்டும் அறவே கூடாது. அலர்ஜி உண்டாக்கும் தூசி, கொசுவை விரட்ட பயன்படும் வத்திகள் கூடாது. பகலில் தூங்கக்கூடாது.

இவ்விதமான அலர்ஜிகளில் இருந்து விடுபட அக்குபிரஷர் முறையில் மிக எளிமையான வழி இருக்கிறது... கைகளில் இருக்கும் பத்து விரல்களையும் சீராக அழுத்தம் கொடுக்க வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் பத்து நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வர சளி, சைனஸ், ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் தொல்லைகளில் இருந்து வெளி வரலாம். இதை இன்னும் எளிமையாக செய்ய படத்தில் காட்டி இருப்பது போல வளையங்கள் சந்தையில் கிடைக்கும்.. அதனை வாங்கி, அனைத்து விரல்களில் நன்கு பதியும் படியாக நிதானமாக முன்னும் பின்னும் உருட்டுவதன் மூலம் சீரான அழுத்தம் கிடைக்கும். கூடுதல் நலமும் தொல்லைகளில் இருந்தும் நிரந்தர தீர்வும் காணலாம்.

கோபம், பரபரப்பு, கவலைகளை தவிர்த்து ‘கபாலபாதி’ மட்டும் சரியான முறையில் செய்து வந்தால் சைனஸ் காணாமல் போவது மட்டுமல்லாமல், எல்லா விதமான சளி தொந்தரவுகளில் இருந்தும் விடுபட முடியும்

தூக்கமின்மை எளிய தீர்வு (அக்குபிரஷர்

தேவை இல்லாத சப்தங்கள், அதிர்வுகள், அசைவுகள் அற்ற இரவில், வெளிச்சக்கீற்றுகள் இல்லாத இருட்டில் உறங்கும் போது ஆழ்ந்த தூக்கம் வரும்.. அப்படியான ஆழ்ந்த தூக்கத்தில் உடல் உறுப்புகள் நன்கு ஓய்வெடுக்கும்... விழித்து எழுந்ததும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்...

ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் ஆழ்ந்த தூக்கம் என்பது அரிதான விஷயமாகி விட்டது... இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்பவர்கள் என்னதான் பகல் நேரத்தில் உறங்கினாலும் அவர்களால் ஆழ்ந்த தூக்கத்திற்கு போக முடியாது... இப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லாததால் உடல் எப்போதும் சோர்வுடன் அசதியாக காணப்படும்...

இரவில் உறங்குபவர்கள் கூட ஆழ்ந்த உறக்கம் இல்லை என்றால் காலையில் எழும் போதே சோர்வுடன் காணப்படுவர்.. கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், தொடர் தும்மல்கள் போன்றவற்றால் அவதிப்படுவர்... இதற்கு ஒரே நிவாரணி.. ஆழ்ந்த தூக்கம் மட்டுமே... இதற்காக சிலர் தூக்க மாத்திரை போன்ற ஆபத்தான வழிமுறைகளை நாடுவார்கள்.... இதனால் பிரச்சினை தற்காலிகமாக தீர்ந்ததாய் நினைக்கலாம்.. ஆனால் அது மிக பயங்கரமான பின்விளைவுகளை கொடுக்கும்...

பொதுவாகவே அனைவரும் இரவில் குறைந்தது 7 மணிக்கு முன்பாக உணவு எடுத்துக்கொண்டு, 9.30 to 10 க்கு படுக்கைக்கு சென்றுவிட வேண்டும்...

ஆழ்ந்த உறக்கம் வர அக்குபிரஷர் முறையில் மிக எளிமையான வழி இருக்கிறது...படத்தில் குறிப்பிட்டு இருக்கும் இடத்தில், கையின் கட்டை விரலால் 30 வினாடிகள் வலதுபுறமாகவும், 30 வினாடிகள் இடதுபுறமாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.. தூக்கம் இல்லாதவர்கள், ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்கள் செய்து பாருங்கள்... பக்கவிளைவுகள் இல்லாமல் நல்ல பலன் கிடைக்கும்.

குடல் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு (அக்குபிரஷர்)

மலச்சிக்கலும், அஜீரணமும் மனித ஆரோக்கியத்தின் எதிரிகள். உணவை எப்போதும் நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிட வேண்டும். நாம் உண்ட உணவு முறையாக இரைப்பையில் ஜீரணிக்க 4 மணி நேரமாகும். அங்கு செரிமானம் ஆக நேரமே கொடுக்காமல் காபி, டீ, நொறுக்கு தீனிகள் என்று மேலும் திணிப்போம். அளவிற்கதிகமாக இடைவேளையின்றி அடிக்கடி உள்ளே போகும் உணவால் இரைப்பை சுருங்கி விரிய வழியின்றி செயல்படாது ஸ்தம்பித்து விடும்.

குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் உணவு இரைப்பையில் ஜீரணிக்க முடியாத நிலையில் தங்கியிருந்தால் அது புளித்துக் கெட்டுப் போய்விடும். கோபம், பயம், கவலை அவசர மனோநிலையில் உணவை உண்ணக் கூடாது. இரவில் தூங்குவதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பாக, உணவை மிக கொஞ்சமாகவோ (அ) பழங்களையோ உண்டால், உணவு வயிற்றில் தங்கி கெட்டுப் போகாமல் நன்கு செரிமானம் ஆகும்.

பசியின்மை, செரிமானமின்மை, ஏப்பம், புளியேப்பம், வாய் நாற்றம், நெஞ்செரிச்சல், வயிறு உப்பசம், மலச்சிக்கல் அஜிரண வாயுக்கோளாறு, நீடித்த ஓரு பக்கத்தலைவலி, தலைச்சுற்றல், கண்பார்வையில் மங்கல், நரம்புத்தளர்ச்சி, தூக்கக்குறைவு, பிடரி கழுத்து, முதுகு, இடுப்பு, தோள்பட்டைகளில் வலி, மூட்டுக்களில் வலியோடு சேர்ந்த வீக்கம், வறட்டு இருமல் என இத்தனையும் செரிமான உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் உண்டான இடையூறுகளே.

இந்த தொல்லை உள்ளவர்கள் முதலில் தொடர்ந்து மூன்று தினங்கள் பழச்சாறு (சர்க்கரை, பால் சேர்க்க கூடாது) மற்றும் பழங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். பழ உணவுகளால் அஜிரணம், மலச்சிக்கல் உண்டாகாது. உணவில் கீரைகள், நார்ப்பொருள் அடங்கிய காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

"முறையாக ஒன்றை ஆரம்பித்தால் கிடைக்கும் வெற்றியில் பாதி, முதலிலேயே கிடைத்துவிடும்" என்பது ஒரு சீனப் பழமொழி.

மேற்கூறிய அத்தனை வியாதிகளுக்கும் அக்குபிரஷர் மூலம் எளிய வழியில் தீர்வு காணலாம். படித்தில் காட்டியுள்ளது போல இரண்டு கைகளிலும் மிகவும் அழுத்தமான ஒரு பந்தை (Ball) வைத்து ஒரு நிமிடத்திற்கு உருட்ட வேண்டும்.. இதே போல ஒரு நாளைக்கு நான்கைந்து முறை செய்து பாருங்கள்...முதல் நாளே உடலில் உண்டாகும் மாற்றங்களை நன்கு உணர முடியும்.

ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism)

மனித உடலின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் தான். இந்த தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை "தைராய்டிசம்" என்கிறோம்...

தைராய்டில் மூன்று வகைகள் உள்ளன. அவை ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் மற்றும் கோயிட்டர் என்பன. தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டிசம், குறைவான அளவில் இருந்தால் ஹைப்போ தைராய்டு, கோயிட்டர் என்பது குரல் வளை சுரப்பியில் ஏற்படும் வீக்கம்.

உடலில் அயோடின் அளவில் உண்டாகும் ஏற்ற இறக்கம் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை பாதித்து, உடல் உறுப்புகளின் இயக்கத்தில் பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்நோய் ஆண்களை விடப் பெண்களை ஏழு மடங்கு அதிகமாய் தாக்குகிறது. பெண் குழந்தைகள் குறைந்த வயதில் பருவமடைவது (அ) அதிக வயது ஆகியும் பருவமடையாமல் இருப்பது போன்றவற்றிற்கு காரணம் இந்த தைராய்டு குறைபாடே ஆகும்... மேலும் பெண்கள் கருத்தரிப்பது கூட முடியாமல் போகும். இந்த பிரச்சனையுடன் குழந்தையை பெற்றெடுக்க முயன்றால், அது குழந்தையின் மனநிலையை பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுவான அறிகுறிகள்
- - - - - - - - - - - - - - - - - - - - -
எப்போதும் உடல் குளிர்ச்சி, மூச்சு வாங்குதல், மாதவிடாய் கோளாறுகள், சக்தியின்மை, எடை குறைதல் (அ) கூடுதல், தோல்வியாதிகள், இதயத்துடிப்பு அதிகமாக இருத்தல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, மூட்டு வலிகள், அளவுக்கு அதிகமான முடி உதிர்தல், ஒருவித பயம் மற்றும் எரிச்சலுடன் கூடிய உளவியல் ரீதியான பிரச்சனைகள் போன்றவைகளுக்கு காரணம் இந்த தைராய்டு பிரச்சினைதான். தைராய்டு சுரப்புக் குறை உள்ளவர்களுக்கு எப்போதும் ஒருவித அசதி, படபடப்பு, மனஅழுத்தம் இருப்பதால் உடல் அசதியாகவே இருக்கும்.
பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற் பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகள்.

இதற்கு அக்குபிரஷர் முறையில் எளிய வழியில் தீர்வு காணலாம். படத்தில் இருப்பதுபோல இரண்டு கைகளையும் குறிப்பிட்ட இடத்தில் 3 நிமிடங்களுக்கு லேசாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே, நன்கு மூச்சை இழுத்து சிறிது நேரம் மூச்சை உள்வைத்து பின் மெதுவாக மூச்சை விடவும்.. ஒரு நாளைக்கு நான்கைந்து முறை மூச்சுப் பயிற்சியுடன் அழுத்தமும் கொடுக்கலாம்...இந்த எளிய முறையால் தைராய்டு சுரப்பி நன்கு இயங்க ஆரம்பிக்கும். தைராய்டு பிரச்சனையிலிருந்து எளிதில் வெளிவரலாம்.

இடுப்பு-கை-கால்-தலை வலிகளைப் போக்க எளிய வழி (அக்குபிரஷர்)



ல்லீரல், பித்தப்பை போன்ற உறுப்புக்களில் உண்டாகும் பாதிப்பு, சிறுநீரகத்தின்( Kidney) செயல்பாட்டில் பிரதிபலிக்கும். 
இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகவோ (அ) குறைந்தோ காணப்பட்டு, எலும்புகள்(bones), எலும்பு மஜ்ஜை (bone marrow), எலும்புகளைப் இணைக்கும் தசைநார்கள் (ligaments), தசை நாண்கள் (tendons), தசைகள் (muscles) இவ்வுறுப்புகளில் சில பாதிப்புகளை உண்டாக்கும்.

இந்த உறுப்புகளில் உண்டாகும் பாதிப்பை நமது உடல், இடுப்புவலி, நரம்புகள் பிடிப்பு, சுளுக்கு, கழுத்து சுளுக்கு, தலைவலி, மயக்க உணர்வு, கை, கால் மரத்துப் போதல், காதிரைச்சல் (tinnitus) போன்ற வலிகள் மூலம் வெளிப்படுத்தும்.

கல்லீரல் - பித்தப்பை, சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் உண்டான தடைப்பட்ட இயக்கத்தை சீராக்கவும், அந்த உறுப்புகள் வெளிப்படுத்திய நோயின் அறிகுறிகளைப் போக்க அக்குபிரஷர் முறையில் எளிய வழி உள்ளது..

கணுக்கால் முட்டியின் மேற்புறம் (படத்தில் காட்டியுள்ளது போல) ஒரு நிமிடம் நன்கு அழுத்திப் பிடித்துக் கொண்டு நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். பின் மெதுவாக அழுத்தம் கொடுப்பதை நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் அந்த இடத்தில் கட்டை விரலால் தடவி விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் நமது உடல் வெளிப்படுத்திய அறிகுறிகள் (வலிகள்) கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நமது உடல் புத்துணர்ச்சி பெறுவதை நன்கு உணரலாம்...ஒரு நாளில் வலியைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.

முடி உதிர்தலை தடுக்க எளிய வழி (அக்குபிரஷர்)




இன்றைய அனைவரின் மிக முக்கிய பிரச்சினையாகவே ஆகிவிட்ட ஒன்று இந்த முடி கொட்டுதல். 

உடலில் பிராணசக்தி குறைந்து வியாதிகள் தலை தூக்க ஆரம்பிப்பதன் அறிகுறியே முடி உதிர்தல்.

உடலில் ஜிங்க், ஹீமோகுளோபின், காப்பர், இரும்பு, வைட்டமின் சி, பி, மற்றும் புரதச் சத்துகளின் குறைபாடுகள் முடி உதிர காரணமாக இருந்தாலும் மிக முக்கிய காரணம் தூக்கமின்மையே ஆகும்.

படத்தில் இருப்பதுபோல இரண்டு காதுகளிலும், கை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலால் பத்து நிமிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வர வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது நிற்பதோடு இல்லாமல் நன்கும் வளரும். எந்தவிதமான செலவும், பக்கவிளைவுகளும் இல்லாமல் எளிய வழியில் தீர்வு காணலாம்.

ரோஜா குல்கந்து மருத்துவப் பலன்களும், செய்முறையும்

ரோஜா குல்கந்து உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், கல்லீரல், மண்ணீரல் மூன்றையும் நல்ல முறையில் இயங்க வைக்கக் கூடிய இயற்கை உணவு.
உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதயத்தை பலப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த விருத்தியாக்கும். இரத்த சோகை வராமல் பாதுகாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். பித்த அளவை சமன்படுத்தும். ஜீரண சக்தியை தூண்டும். மலமிளக்கியாக செயல்பட்டு , மலச்சிக்கலைப் போக்கும். அதிக அமில சுரப்பை குறைத்து, அல்சருக்கு சிறந்த மருந்தாக செயல்படும் . பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கோளாறுகளைகளை கட்டுப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும். சரும நோய்கள், முகப்பருவைப் போக்கி, உடலுக்கு நல்ல பளபளப்பையும் அழகையும் தரும். மன அழுத்தத்தை போக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். உடலுக்கு வலிமை கொடுக்கும். இதய நோயுள்ளவர்களுக்கு இந்த ரோஜா குல்கந்து ஒரு அருமருந்தாகும்.



ரோஜா குல்கந்து செய்முறை
-------------------------------------------
நல்ல, தரமான பன்னீர் ரோஜாவை வாங்கி அதன் இதழ்களைப் பிரித்து எடுத்து உப்புத் தண்ணீரில் முதலில் கழுவி எடுக்க வேண்டும். (உப்பு இரசாயனத் தன்மையைப் போக்கும்) பின் இரண்டு (அ) மூன்று முறை நல்ல தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து ஈரம் போக துடைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.ரோஜா இதழ்களையும், ரோஜா இதழ்களின் எடையைப் போல இரண்டு மடங்கு சீனாக் கற்கண்டையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மத்தால் இடித்து ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதை மூன்று நாட்கள் வெயிலில் கண்ணாடி ஜாடியுடன் வைத்து எடுத்த பின்,தேவைக்கு சிறிதளவு தேனை விட்டு நன்றாக கிளற வேண்டும். இப்போது ரோஜா குல்கந்து ரெடி.
கடையில் கிடைக்கும் ரோஜா குல்கந்துவில் இதழ்கள் நல்ல முறையில் கழுவி எடுக்கப் பட்டதா என்று நமக்கு தெரியாது. அதோடு மட்டுமில்லாமல் அதில் இனிப்புக்கு வெள்ளைச் சர்க்கரை சேர்ப்பார்கள். நம் வீட்டிலையே இதை தயாரித்தால் விலை குறைவாகவும், ருசியாகவும், சுத்தமான முறையிலும் நமக்கு கிடைக்கும்.


ஆரோக்கிய வாழ்விற்கு எளிய வழி காது அக்குபஞ்சர் (Auricular Therapy)

அக்குபஞ்சரில் காது அக்குபஞ்சர் (Auricular Therapy) மிகப் பழமையான ஒரு சீன வைத்திய முறை. வந்த வியாதிகளை குணப்படுத்தவும், வரப்போகும் வியாதிகளை தடுக்கவும் ஒரு எளிய வழி இதோ உங்களுக்காக....

உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புடைய புள்ளிகள் காதுகளிலும் அமைந்திருக்கின்றன. இந்த புள்ளிகளில் கொடுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை வியாதிகளை வர விடாமல் தடுக்கவும், வந்த வியாதிகளை குணமாக்கவும், அந்த நோய் அறிகுறிகளை அறவே குணப்படுத்தவும் செய்கின்றன..
.
இரண்டு காது மடல்களையும் மெதுவாக இரண்டு நிமிடம் அழுத்தம் (மசாஜ்) கொடுத்தால் போதும். அதன் பின் ஆழ்ந்த மூச்சு இழுத்துக் கொண்டே பின்பக்கம் சாய்ந்து பத்து வினாடிகள் இருந்து விட்டு மூச்சை நிதானமாக விட்டுக் கொண்டு முன்பக்கம் வர வேண்டும். ஒரு நிமிட நேரம் இந்த மூச்சுப் பயிற்சி. இதே போல ஒரு நாளைக்கு 2 (அ) 3 முறை செய்தாலே போதும்....

மிக எளிமையான பயிற்சி..முயன்று தான் பாருங்களேன்... இந்த காது பயிற்சி செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்பதை நாமே அறிந்து கொள்ளலாம்.


மருந்தில்லா மருத்துவம் – புத்துணர்ச்சி பெற எளிய வழி

ன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 90% நோய்கள் மன அழுத்தத்தால் வருபவையே. எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போகும். இன்று நம்மில் யாரும் எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் இல்லாமில்லை. செய்த தவறை யாரும் ஒப்புக் கொள்வதுமில்லை, தவறு செய்தவரை மன்னிப்பதுமில்லை.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக கவனம், குழப்பம், பிறப்பு, இறப்பு, திருமணங்கள், விவாகரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வுகள், போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான நிகழ்வுகளும் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும்., காரணங்கள் ஆகும். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்திற்குள் கொண்டுச் செல்லும்.


புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதைமருத்துப் பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள்.
புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை மற்றும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் மன அழுத்தம் அதிகமாய் இருக்கும். சில நேரங்களில் காரணமேயின்றி உடல், மனம் இரண்டும் தளர்ந்தும், சோர்ந்தும் போகும். காரணம் என்னவென்று பார்த்தால் எதுவுமே புலப்படாது.

இப்படிப்பட்ட நேரங்களில் உடனே உடலையும், மனத்தையும் புத்துணர்ச்சி பெற வைக்க எளிமையான ஒரு வழி இருக்கிறது. உடல் மற்றும் உயிர் இரண்டிற்கும் தேவையான சக்திகள் அனைத்தும் பிரபஞ்சம், இயற்கை இவற்றிலிருந்து தான் பெறப்படுகின்றன.

இரண்டு கால்களையும் ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு, இரண்டு கைகளின் உள்பக்கம் வானத்தை நோக்கி இருக்கும்படி அகலமாக விரித்து (இயேசு பிரான் கைகளை மேல்நோக்கி விரித்து இருப்பது போல) வெறுமனே 5நிமிடங்கள் வெட்ட வெளியில் நின்று பாருங்கள். உங்கள் உடல் உடனே சக்தி பெறுவதை உணர முடியும். விரல் நுனி மூலம் ஆகாயத்திலிருந்து பிரபஞ்ச சக்தியானது கைகள், உடல் என பரவி கால் விரல்களின் நுனி வழியாக வெளியேறும். இதுவே அக்குபஞ்சரில் “யாங்” சக்தி எனக் அழைக்கப்படுகிறது. அதே போல பூமியிலிருந்து விரல் நுனி வழியாக சக்தி பெறப்பட்டு கால்கள், உடல் வழியாக மேல்நோக்கி பரவி விரல்களின் நுனி வழியாக வெளியேற்றப்படுகிறது. இது “யின்” சக்தி எனவும் அழைக்கப்படுகிறது. ஆகாயம், பூமியிலிருந்து கிடைக்கும் சக்தியால் உடல் உடனே புத்துணர்ச்சி பெறும். 


நிரந்தரமான தீர்வுக்கு தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும், மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்வதும் மன அழுத்தத்தைபோக்க எளிய வழிகளாகும்.

விலை கூடுதலாக கொடுத்து வாங்கப்பட்ட எனர்ஜி டிரிங், காபி, டீ போன்றவற்றால் உடலையையும், மனத்தையும் கெடுத்து நோய்களுடன் வாழ்வதை விட, செலவே இல்லாமல் நமக்கு சக்தியை இலவசமாகக் வாரிக் கொடுக்கக் காத்துக் கொண்டு இருக்கும் இப்பிரபஞ்சத்திடம் இருந்து சக்தியைப் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம் வாருங்கள்


தலைவலி

திகபடியான வேலை பளு, இரவு நீண்ட நேரம் கண்விழித்தல், தூக்கமின்மை, குடிப்பழக்கம், புகைப்பழக்கம், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், அதிகபடியான வெளிச்சம்....போன்றவற்றால் பெரும்பாலும் அனைவருக்குமே தலைவலி வந்துவிடுகிறது. 
நமது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் திறனும், சக்தியும் கொண்டது. சிறிதளவு ஒய்வு கொடுத்தால் உடலே அந்த தலைவலியை சரி செய்யும்... 



ஆனால் எங்கும் அவசரம்.. எதிலும் அவசரம் என்று அவசர யுகத்தில் அவசரமாய் வாழப் பழகிய நாம் இப்படியாக வரும் தலைவலியை கூட நமது உடல் தன்னை தானே சரி செய்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் உடனே ஒரு மாத்திரையை சாப்பிட்டு... அந்த தலைவலியை தற்காலிகமாய் மறைத்து வைக்கிறோம்.... கவனிக்கவும்... குணப்படுத்தவில்லை....மறைத்து வைக்கிறோம்...அந்த வலி போகிறதோ இல்லையோ அதோடு வேறு
ஒரு வலியையும் வர வைத்துக் கொள்கிறோம். சிலருக்கு மாத்திரை போட்டு குணமானது போன்று தோன்றும் தலைவலி கொஞ்ச நேரத்தில் உடனே திரும்ப வந்து விடும்...பலருக்கு சிலநாட்கள் விட்டு தலைவலி மீண்டும் புதிய வேகத்துடன் தொடரும். முதலில் ஒரு மாத்திரைக்கு கட்டுப்படும் தலைவலி நாளடைவில் மேலும் அதிகமாகும்.. அப்போதும் கூட அதற்கு நிரந்தர தீர்வை தேடாமல் மாத்திரையின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போவோம்.... ஒன்று இரண்டாகும்.. இரண்டு நான்காகும்.. ஆனால் தலை வலி மேலும் மேலும் வீரியமாய் வரும்.... ஒரு மாத்திரை உட்கொண்ட காலம் போய் அதிகப்படியான மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இரண்டு, மூன்று நாட்கள் தலைவலியால் அவதிப்படுவோரும் உண்டு....எனக்கு தெரிந்த ஒருவர் எட்டு மாத்திரைகள் போட்டும் தலைவலி நிற்கவில்லை என்று கூறினார்... இப்படி மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமானால் உடல் தன்னை தானே சரி செய்துகொள்ளும் சக்தியை இழந்து வீணாகி அதன் விளைவாக, மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் உடலின் பல உறுப்புகளும் பாதிக்கப்பட்டு பல தொல்லைகள் தலை தூக்க ஆரம்பித்து இருக்கும்.


ஏதேனும் ஒரு தலைவலித் தைலத்தை, நெற்றிப் பொட்டில் வைத்துத் தேய்ப்பது கூட ஒருவகை "அக்குபிரஷர்" வகை மருத்துவம் தான்.
படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்ததில் நம் நடுவிரலை வைத்து 2நிமிடம் அழுத்தம் கொடுத்து, தலையை லேசாக பின் பக்கம் சாய்த்து மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும்.
சிறிது இடைவெளி விட்டு ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம். இப்படி செய்வதால் உடலுக்கு பிராண சக்தி உடனடியாக கிடைக்கும். பிராண சக்தியால் உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு தலைவலியும் வந்த சுவடு தெரியாமல் எளிய வழியில் நம்மை விட்டு போகும்.

தலைவலி போவதோடு இல்லமால்..மனமும் அமைதி பெறும், மன உளைச்சல், தேவையே இல்லாத எண்ணங்கள், பயம் போன்றவையும் இதோடு நீங்கும்.

முதுகு வலிக்கு எளிய நிவாரணம்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பது, அதிக தூரம் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, எடை அதிகமான பொருட்களை அடிக்கடி தூக்குவது என இப்படிப்பட்ட வேலைகளால் பலருக்கும்.. இப்படி எதுவும் செய்யாமலே கூடவும் இப்போதெல்லாம் இடுப்பு வலி (lower back pain), குறுக்கு வலி, கீல்வாதம் (Sciatica ) போன்ற வலிகள் மனிதனின் அன்றாட வாழ்வில் பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. .மேற்சொன்ன காரணங்கள் எதுவுமே இல்லாமல் சிலருக்கு எப்போதும் இந்த வலியால் பாதிக்கப்டுவர். பொதுவாக இப்போது இந்த வலியால் அவதிப்படாதவர்களே யாருமே இல்லை எனலாம்.



இதற்கு தீர்வாக அனைவரும் வீட்டிலையே செய்து கொள்ள எளிமையான வழி ஒன்றை படத்துடன் விளக்கியுள்ளேன். பயமும் இல்லை..பக்க விளைவுகளும் இல்லை. முயற்சி செய்து தான் பாருங்களேன்...

சமமான தரையில் படுத்துக் கொண்டு, இடுப்பின் கீழ் பகுதியில் (lower back) இரண்டு கை விரல்களையும் இறுக மூடி மடித்து ஒரு நிமிடத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பக்கமாக ஒருக்களித்து நம்முடைய மூடிய கையை (அ) டென்னிஸ் பந்தை படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் அமைதியாக கண்ணை மூடி மூச்சை மெதுவாக இழுத்து விட வேண்டும். அதன் பிறகு அடுத்த பக்கமாக ஒருக்களித்து படுத்து முன்பு செய்தது போலவே செய்யவும் (இடது மற்றும் வலது புறம் மாறி மாறி ) இப்படி செய்தால் உடனே வலியில் இருந்து மீள முடியும். நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் இதனுடன் மேலும் சில புள்ளிகளை நம் கையால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.


கூந்தல் கருமை பெற....

வெள்ளை கரிசாலை, கொட்டை கரந்தை இலை இரண்டையும் நிழலில் காய வைத்து பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவு காலை, இரவு இரண்டு வேளையும் தேனில் கலந்து உண்டு வந்தால் இளநரை, முது நரை இரண்டும் மறைந்து கூந்தல் கருமை நிறம் அடையும்.
(சித்தர்களின் வழி தேடல்களில் இருக்கும் ஒருவர் கூற கேட்டது.)

மருந்தில்லா மருத்துவம் - (சுகப்பிரசவம்)

பெண் என்ற பிறவி முழுமை அடைவது தாய்மையை அடையும் போது தான். குழந்தையை சுமக்கும் ஒவ்வொரு தாயும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை அனுபவிப்பர்.

ஒரு பெண்ணின் கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்குத் தயாராகும். கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும். இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாகவே இருக்கும். இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம். தாயின் பிரசவ வலியின் அளவு 57 Dels. மனித உடலில் 20 எலும்புகளை ஒரே நேரத்தில் உடைத்தால் உண்டாகும் வலி தான் பிரசவ வலி!!



பிரசவ வலி என்பது உண்மை... அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த வலியின் தீவிரம் புரியும்... குழந்தையை சுமக்கும் அனைவருக்குமே இந்த வலி இருக்குமென்றாலும் எல்லோராலும் இந்த வலியை தாங்க முடிவதில்லை... ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போலவே முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, வீட்டு வேலைகள் ஆகியவற்றின் மூலம் குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம். திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பவர்கள் தாங்கும் அளவு பலகீனமானவர்களால் தாங்க முடிவதில்லை...


அதோடு நவீன விஞ்ஞானம் இயல்பான பிரசவத்தை மிகவும் சிக்கலாக்கியோ, பயமுறுத்தியோ பணம் சம்பாதிப்பதற்காகவே பெரும்பாலான பிரசவங்களை அறுவை சிகிச்சை மூலமாகவே செய்கிறது... (உண்மையாகவே சிக்கலான தருணங்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை இங்கே குறிப்பிடவில்லை) அதே நேரம் "பிரசவ வலி" க்கு பயந்து பெண்களே கூட சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராகி விடுகிறார்கள்... ஆனால்... எண்ணெய் சட்டிக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போல.. சில மணி நேர வலிக்கு பயந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு அதன் பிறகு வாழ்நாளெல்லாம் வலியை சுமக்கும் வேதனை சொல்லில் அடங்காது...

நிறைமாத கர்ப்பிணிகள் பிரசவத்தில் எந்தவிதமான குறைபாடும், வலியும் இல்லாமல் சுகப்பிரசவமாக குழந்தையை பெற்று எடுக்க அக்குபஞ்சரில் அதற்கு எளிய வழியும் உண்டு. நம் உடலில் பெருங்குடல் (large intestine) மற்றும் மண்ணீரல் (spleen) இரண்டு உறுப்புகளிலும் உள்ள ஒரு முக்கியமான புள்ளியை தினமும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் சுகப்பிரசவம் நடைபெறும்.

மேலும் சிலருக்கு குழந்தை சரியான முறையில் திரும்பவில்லை..அதனால் உடனே ஆபரேஷன் மூலமே குழந்தையை எடுக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை மூலமே பிரசவங்கள் நடைபெற்று வருகிறது.

தலைகீழாக, தலை திரும்பாத குழந்தைகளை கூட அக்குபஞ்சர் மூலம் நல்லபடியாக இயற்கையான முறையில் பிரசவம் உண்டாக்கலாம். எப்படி என்பதை பார்ப்போம்.
சிறுநீரகப்பையில் (Urinary Bladder) அமைந்துள்ள முக்கியமான ஒரு புள்ளிக்கு சக்தி கொடுப்பதன் மூலம் அட்ரீனல் சுரப்பி செயல்பாடு அதிகமாகும். அட்ரீனலுக்கும் கர்ப்பபைக்கும் என்ன சம்பந்தம்? அந்தச் சுரப்பி தான் கர்ப்பப்பையின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. நல்ல முறையில் இயங்க ஆரம்பிக்கும் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டால் இயல்புக்கு மாறான நிலையில் கருவிலிருக்கும் சிசுவின் இயக்கமும் சீராகிறது. குழந்தையும் நல்ல முறையில் பிறக்கிறது. (எந்தப் புள்ளி என்று யாரும் இங்க கேள்வி கேட்க கூடாது. அக்குபஞ்சர் படித்தவர்களுக்கு நன்கு புரியும். தெரியும்.)

மருந்தில்லா மருத்துவம்

யற்கைக்கு முரண்பட்ட செயல்களினால் நம் உடலில் சமநிலைச் சீர்குலைவுகள் உண்டாகி சில பல தொல்லைகளாக வெளிப்படுத்தும். அவை சிறிய அளவில் இருக்கும் போதே கவனிக்காமல் விட்டுவிட்டால் பின் வாழ்நாள் முழுவதும் தொல்லைகளோடு போராடுவதே நம் முழுநேர வேலையாகி விடும். 

ஒரு வாகனத்தில்/ இயந்திரத்தில் மிக சிறியதாக பிரச்சினை வரும்போது சரி செய்யாமல் விட்டுவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம்.. அதுதான் ஓடுகிறதே என்று ஓடும் வரை ஓட்டிவிட்டு திடீரென்று ஒரு நாள் வண்டி நின்றவுடன் அடித்துப்பிடித்து மெக்கானிக்கிடம் ஓடினால்.. அவர் ஏதாவது பெரிய பழுது என்றும் அதை இப்பொது சரி செய்யாவிட்டால் இயந்திரமே உபயோகமற்று போகும் என்று சொல்வார்....அவர் சொல்லும் தொகையில் பத்தில் ஒரு மடங்கு கூட ஆகி இருக்காது , அந்த பிரச்சினை நம் கவனத்தில் வரும் போதே சரி செய்திருந்தால்...அது வெறும் இயந்திரம்... கொஞ்சம் கூடுதல் செலவானாலும் கூட பாகங்களை மாற்றி விடலாம்... அல்லது இறுதி கட்டமாக எடைக்கு கூட போட்டு விடலாம்....
ஆனால் மனித உடல் அப்படியானதா??? உடலின் பாகங்கள் பழுது பட்டால்??? பலர் கவனக் குறைவினாலோ, அலட்சியத்தினாலோ உடலில் ஒரு பாதிப்பு தொடங்கும் போதே கண்டறிந்து சரி செய்யாமல் விட்டு விட்டு... பின் அவர்கள் வியாதின் பிடியில் சிக்கித் தவிப்பது என்பது மிகவும் கொடுமை தானே?..

எப்போதும் களைப்பு அல்லது அடிக்கடி களைப்பாதல், காரணமின்றி எரிச்சலடைதல், தூக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், கண்களில் நீர் கொட்டுதல், மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், தொடர் இருமல், காதில் மெழுகுப் போன்ற படலம் படித்தல், அதிகப்படியான வியர்வை மற்றும் உடலில் தோன்றும் துர்நாற்றம், அடிக்கடி கொட்டாவி, பெருமூச்சு விடுதல், முறையற்ற மாதவிடாய், பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிகமான இரத்தப்போக்கு மற்றும் வலியுடன் கூடிய இரத்தப்போக்கு போன்றவை உடலில் உண்டான கோளாறின் வெளிப்பாடே ஆகும்.

மேலே சொன்ன காரணங்களை நன்கு கவனித்தால் உடல் தன்னிடமிருந்து அதிகப்படியான கழிவுகளை வெளியேற்றுகிறது என்பதை புரிந்துக் கொள்ளாலாம். இந்த கழிவுகள் நம் உடலில் அளவுக்கதிகமாக சேர்வதால் தானே உடல் அவற்றை வெளியேற்றுகிறது??? வழக்கத்திற்கு மாறாக கழிவுகள் அதிகமாகிறது என்றால் நம்முடைய ஆரோக்கியம் எங்கோ தொலைந்துக் கொண்டிருக்கிறது என்று தானே பொருள். இந்த மாதிரி தொல்லைகள் எல்லாம் உள்ளுறுப்புகளின் பாதிப்பின் வெளிப்பாடே ஆகும்.

அக்குபஞ்சர் முறைப்படி இந்த நோய்கள் தோன்ற உடலிலுள்ள நிலப்புள்ளிகளில் (இரைப்பை, மண்ணீரல்) உண்டான தடைப்பட்ட இயக்கமே காரணமாக கொள்ளபடுகிறது. பஞ்ச பூதங்களில் மிக முக்கியமானது நிலம். அந்த நிலம் சீர்குலைந்தால் மற்ற உறுப்புகள் எல்லாம் மிக வேகமாக தன் பணிகளை செயல்படுத்தும் திறனை இழக்க ஆரம்பிக்கும்.

உடல் களைப்படைய செரிமாண பிரச்சனையே மிக முக்கிய காரணம். களைப்படையும் ஒருவருக்கு உணவு செரிமாணம் ஆவதிலும் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.

அக்குபஞ்சர் முறைப்படி சரியான நிலப்புள்ளியை (இரைப்பை, மண்ணீரல்) தூண்டுவதன் மூலம் தடைப்பட்ட இயக்கத்தை சீராக்கி மேற்சொன்ன அத்தனை பிரச்சனைகளில் இருந்தும் மீளலாம். (எந்தப் புள்ளி என்று யாரும் இங்க கேள்வி கேட்க கூடாது. அக்குபஞ்சர் படித்தவர்களுக்கு நன்கு புரியும். தெரியும்.)

சாதிக்காய்

சாதிக்காய் அனைவரையும் மயக்கும் ஒரு விதமான நறுமணம் கொண்டது. அதோடு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த மணமூட்டி. 

சாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் எது என்று அறிய 6 வருடங்கழித்து அவை பூக்கும் போது தான் கண்டுபிடிக்கவே முடியும்.

முற்காலத்தில் நறுமண வியாபாரிகளாலும், மூலிகை வியாபாரிகளாலும் "எங்கிருந்து இந்த பொருள் கொண்டு வரப்படுகிறது" என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியமாய் வைத்து விற்பனை செய்யப்பட்ட வரலாறும் உண்டு...

ஆரம்ப காலக் கட்டத்தில் இது நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.. நாளடைவில் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் உணரப்பட்டது... ஆனால் இதன் குணத்தை மேலோட்டமாக ஓரளவு மட்டுமே அறிந்தவர்களால் இது காமம் தூண்டக்கூடிய பொருள் என்று மட்டுமே பார்க்கப்படுகிறது...
இதில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட இதில் அதை தாண்டிய பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பி வழிகிறது...

சாதிக்காய் கனிக்கும் விதைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதி தனியாக பிரிக்கப்பட்டு "சாதிபத்ரி" என்று தனியாகவும் பயன்படுத்தப்படுகிறது...

குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சித்த/ஆயுர்வேத மருந்துகளில் சாதிக்காயும், சாதிபத்ரியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.. ஆண்களுக்கு காம உணர்வை தூண்டும். விந்தணு குறைபாட்டை நீக்கி விந்தணு எண்ணிக்கையை பெருக்கும். இதன் காரணமாக குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும்.


நினைவாற்றல் அதிகமாகும்.. சுவாசம் சீராகும். பித்தம் நீக்கும். அதோடு மட்டுமல்லாமல் நரம்பு மண்டலத்தை முழுவதுமாக சீராக்கும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உண்டாகும் வயிற்றுப்போக்கை குணமாக்கும். காலரா போன்ற வாந்தி பேதி நோய்களுக்கு இது ஒரு அருமருந்து .

சாதிக்காய் "அரோமா தெரபி" என்று சொல்லக்கூடிய வாசனை சிகிச்சை முறையிலும் கூட பயன் படுத்தப்படுகிறது. இதன் வாசனை நிலையில்லாமல் அலைபாயும் மனதை அமைதிப்படுத்தும் . மன அழுத்தத்தை போக்கி நல்ல உறக்கம் வர வைக்கும். மனதில் உற்சாகம் உண்டாக்கும்..

சாதிக்காயில் உள்ள Myristicin என்ற சத்து அதிகம் இருப்பதால் தோல் சுருக்கத்தை (anti ageing) தடுக்கும். இதனை நம் முன்னோர்கள் அறிந்து தங்களது தோற்றப் பொலிவை காத்திருக்கிறார்கள்... மேலும் இது வாசனை திரவியங்கள், முகப்பூச்சுக்கள், பற்பசை மற்றும் வாய் கொப்புளிக்கும் தைலங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எல்லாவற்றிலும் நம் முன்னோர்களை புறக்கணித்த நாம் இந்த விஷயத்திலும் கூட அதையே செய்து இரசாயன கலவையாக வரும் அழகுசாதன கிரீம்களை விளம்பரங்களைப் பார்த்து, மயங்கி வாங்கி உபயோகித்து... இயற்கையாகவே இருக்கும் சரும அழகையும் கெடுத்துக்கொள்கிறோம்.


"சாதிக்காய்"
* * * * * * * * * * *
இரண்டு நாட்களுக்கு முன் உட்கொள்ளும் மருந்தாகவும், வாசனை மருந்தாகவும் விளங்க கூடிய "சாதிக்காய்" பற்றிய பதிவில் அதை எப்படி சாப்பிடுவது என்று நிறைய நண்பர்கள் சந்தேகம் கேட்கவே .. அதற்கான விளக்கம்...

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”
- அகத்தியர் குணபாடம்

1. ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு, விக்கல், தூக்கமின்மை, மறதியால் பாதிக்கப்பட்டோர் தினமும் 10 கிராம் சாதிக்காய் பொடியுடன் நெல்லிக்காய்ச் சாறு ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் பூரண குணமாகும்.

2.சாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு உடனே தீர்ந்து விடும்.

3.சாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதை ஒரு நாள் முழுதும் சிறிது சிறிதாக குடித்து வர காலரா, வாந்தி பேதி நோய்களுக்குச் மிகச் சிறந்த மருந்தாகும்.

4.சாதிக்காய் பொடியை அரை கிராம் அளவு பசும்பாலில் கலந்து மூன்று வேளை குடித்து வர உணவு உண்டவுடன் உண்டாகும் வயிற்றுப் போக்கு தீரும் . நடுக்கம், பக்கவாதம் குணமாகும். மனத் தெளிவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் சூடு தணியும். எப்போதும் வாந்தி வரும் என்ற உணர்வைப் போக்கும். இரைப்பை, கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும்.

5.நல்லெண்ணெயில் இப்பொடியை சிறிது கலந்து காய்ச்சி காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும்.

6.விந்தணு எண்ணிக்கை குறைந்தவர்களுக்கு அதன் எண்ணிக்கை கூடும். விந்தணு நீர்த்துப்போனவர்களுக்கு அது இறுகி கெட்டியாகும்..

அனைவருமே தினமும் சிறிய அளவு உண்டு வந்தால் செரிமானத்திறன் கூடும். உடல் சுறுசுறுப்படையும்.

உளுந்து

செய்ய உருந்திற்குச் சிலேத்மவனி லற்பிறக்கும்
வெய்யபித்தம் போமந்தம் வீறுங்காண் -மெய்யதனில்
என்புருக்கி தீரும் இடுப்புக் கடுபலமாம்
முன்பு விருத்தியுண்டாய் முன்
(அகத்தியர் குணபாடம்)



உடலை வலுவாக்கும் உன்னதமான சிறுதானியம் உளுந்து. இதில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது எனக் கூறுவார்கள்.

உளுந்து உணவை உண்டு வந்தால் உடல் வலுப் பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும், பெண்களுக்கு இடுப்பு எலும்பை வலிமையாக்கும். மாத விலக்கை சீராக்கும். மலச் சிக்கலை நீக்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உண்டான உடல் சூட்டை உளுந்து உணவு தணிய வைத்து நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். உளுந்து வடை பசியைப் போக்கி உடலுக்கு குளுர்ச்சி கொடுக்கும். நினைவுத்திறன் அதிகரிக்கும். இடுப்பு வலுவில்லாமல் இருக்கும் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருமே உளுந்து களி தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீக்கி எலும்புகள் வலுவாகும்.

குறிப்பாக பெண்கள் பூப்பெய்திய உடன் உளுந்தால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்... பெண்களுக்கு பிரசவ காலத்தில் இடுப்பு எலும்பு வலுவாக இருந்தால் மட்டுமே குழந்தை பிறக்கும் வழியை தாங்கும் ஆற்றல் கிடைக்கும். இதன் பொருட்டே இடுப்பு எலும்பை வலுவாக்க உளுந்தங்களி, உளுந்து வடை போன்றவற்றை அதிகம் உண்ணக் கொடுப்பார்கள்...

மிக சாதாரணமாக நமது வீடுகளில் காலை மற்றும் இரவு உணவுக்கென இட்லி, தோசை போன்ற உளுந்து கலந்த உணவுகளை கொடுப்பது உடலை வலுவாக்கவும், நிறைய சக்தி கொடுக்கவும் எளிதில் ஜீரண மாகவும் தான்...

அன்றாடம் உண்ணும் உணவை சக்தி கொடுக்கும் விதமாகவும்,, எளிதில் ஜீரணமாகவும் , உடலை பலப்படுத்தும் படியாகவும், அதோடு சுவை நிரம்பியதாகவும் சொல்லித்தந்த நம் முன்னோர்களை மறந்துவிட்டு நவீன யுகத்தில் விளம்பரங்களை கண்டு பீசா - பர்க்கர் கலாச்சாரத்தில் சிக்கி இன்னும் எவ்வளவுகாலம் நோயோடு வாழப்போகிறோம்...???

எலும்புகள்

இயற்கை தந்த அதிசயம் மனிதன். மனிதனுள் பல அதியசங்கள் இருந்தாலும் மனிதனின் எலும்புகள் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை, விசித்திரமானவை. உடலைத் தாங்குவதோடு மட்டுமில்லாமல், உடல் உறுப்புகளுக்கு விறைப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. நிமிர்ந்து நடப்பது, நிற்பது, இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பது, என மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் உடலின் எலும்புகளே முக்கிய ஆதாரமாக திகழ்கின்றன. எலும்புகள் இல்லாமலோ, மனித எடையை தூக்கி நிறுத்தும் அளவு வலு இல்லாமலோ இருந்தால் மனிதன் மண்புழுவை போல ஊர்ந்துதான் கிடந்திருக்க முடியும்...
பலவகையான வடிவங்களில் அமைந்துள்ள மனித எலும்புகள், அளவில் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். நம் உடலமைப்பை நிர்ணயம் செய்யும் முக்கிய பணியை செவ்வனே செய்து முடிப்பவை கடினத்தன்மை கொண்ட இந்த எலும்புகளே ஆகும். உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு ஆதாரமாக இருப்பதும் இந்த எலும்புத் கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறும் எலும்புகள் அமையப் பெற்றுள்ளன.

மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோவாகும்.எலும்புகள் 50% நீரும், 33% சதவீதம் உப்புக்களும் 17% சதவீதம் மற்ற பொருட்களும் அமையப்பெற்றது.

பிறந்தவுடன் 306 எலும்புகளும், பின் எலும்புகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து 206 எலும்புகளாகி வலுவான எலும்பாக மாறும். இந்த 206 எலும்புகளில் உடலில் எந்தெந்த பகுதியில் எத்தனை எத்தனை எலும்புகள் இருக்கின்றன தெரியுமா???
1. மண்டை ஓடு - 29
2. தண்டு வடம் - 26
3. மார்புக்கூடு - 25
4. கை எலும்புகள் - 64
5. கால் எலும்புகள் - 62
மொத்தம் - 2௦6

மண்டை ஓடு என்பது 29 தனித்தனி எலும்புகளால் இணைக்கப்பட்ட ஒரு கவசம் போன்ற கூடு அமைப்பு உடையது...

தண்டு வடம் என்பது 26 எலும்புகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட எலும்பு தொகுப்பு...

மார்புக்கூடு என்பது இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போன்ற அதி முக்கிய உறுப்புகளை பாதுகாக்கவும் உடலுக்கு பொலிவான தோற்றத்தை தரவும் வல்ல 25 எலும்புகளால் அமையப்பெற்ற ஒரு பாதுகாப்பு வளையம் போன்ற அமைப்பை உடையது...

தோள்பட்டை தொடங்கி விரல் நுனி வரையிலான கை எலும்புகள் எண்ணிக்கை மொத்தம் 64

இதே போல இடுப்பில் தொடங்கி கால் விரல் நுனி வரை உடலின் ஓட்டு மொத்த எடையையும் தாங்கும் விதமாகவும், நாம் ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு இடம் பெயரும் விதமாகவும் இருக்கும் சிறியதும் பெரியதுமான எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 62

மேற்கண்ட அனைத்து எலும்புகளையும் சேர்த்து மொத்த எலும்புகள் 206

மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பிற்கு தகுந்தவாறு எலும்புகள் சில சிறியதாகவும், பெரியதாகவும், மிகவும் உறுதி வாய்ந்த எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் என இயற்கை மிக அழகாக அமைத்து கொடுத்து இருக்கிறது. உடலில் எலும்புகளில் குறைபாடு உண்டானால் உடலின் தோற்றம் மாறி, அழகு கெட்டு, மிகவும் அலங்கோலமான தோற்றமே மிஞ்சும்.

பழைய எலும்புகள் மாறுவதும், புதிய எலும்புகள் தோன்றிக்கொண்டே இருப்பதும் என நம் வாழ்நாள் முழுவதும் எலும்பில் இருக்கும் உயிர் திசுக்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும்.
எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒரு வகை கனிமங்கள் நிறைந்துள்ளன. பழைய எலும்புகள் வலு இழக்கும் போது அதற்கு ஈடாக புதிய எலும்புகள் அதை விட விரைவாக உருவாகும் திறன் பெற்றவை. தன்னிச்சையாக, யாரையும் சாராமல் வாழ நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் நம்முடைய எலும்புகளை நோய்களில் இருந்து காத்து ஆரோக்கியத்தை பேணவேண்டும்.

எலும்பின் மேல் உறை பெரியோஸ்டியம் என்று அழைக்கபடுகிறது. கால்சியம், பாஸ்பரசால் ஆன எலும்புகள் கடின தன்மை கொண்டது. இதில் எலும்பு மஜ்ஜை, இரத்தக் குழாய்களும், நரம்புகளும், இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவற்றை உள்ளடக்கியது. எலும்புகள் உடல் உறுப்புகளை பாதுகாப்பதோடு நில்லாமல் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாகவும், கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் உள்ளன.

எலும்புகளுக்கு விரைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள் தான். எலும்புகளில் சிறய எலும்பு காதிலும், மிகப் பெரிய எலும்பு தொடையிலும் உள்ளது. மனிதனின் இதயம், நுரையீரல் போன்றவற்றை பாதுகாப்பவை மார்பெலும்புகள்.

நம் தலையில் அதாவது மண்டையோட்டில் 29 எலும்புகள் இருந்தாலும் அதில் 8 எலும்புகள் மிக கடினமானவை . மண்டையோட்டில் உள்ள எலும்புகளில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி "மாண்டிபுல்" என்ற தாடை எலும்பு மட்டும்தான். இந்த எலும்பு சுமார் ஒன்னரை டன் எடையை தாங்க கூடிய அளவு உறுதியும் வலிமையையும் நிறைந்தது...

பெரும்பாலான எலும்புகள் கைகளிலும், கால்களிலும் அமைந்துள்ளன. எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசை நார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. கால்சியம் சத்துக் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதிலிருந்தே எலும்புகள் பலமிழப்பதோடு எளிதில் உடையும் நிலைக்கு செல்லும்.


மது என்னும் மாயப்பிசாசு..

ரைப்பை நீரிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் நாம் உண்ட உணவில் உள்ள நோய்கிருமிகளையும் கொன்று விடும். இரைப்பையிலிருந்து அரைக்கப்பட்ட உணவானது சிறுகுடலுக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் சேர்ந்து செரிமாண வேலையை முழுமைப்படுத்தும். எலும்பு போன்ற திட உணவுகள் கூட செரிக்கப்பட்டு விடும். ஆனால் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் இந்த ஆல்கஹாலை மட்டும் எதுவும் செய்ய முடியாது. செரிக்கப்பட முடியாத நிலையில் தான் ஆல்கஹால் நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகிறது. அமிலத்தாலேயே ஒன்றும் செய்ய முடியாத ஆல்கஹால் என்னவெல்லாம் செய்யும் என்பதை நாம் அறிந்தால் அதை நெருங்கவே மாட்டோம்.


உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது, கால்கள் மரத்துப்போவது மாத்திரமன்றி சிலருக்கு உள்ளங்கால் எரிச்சல் போன்ற வேதனைகளும் இருக்கலாம். பக்கவாதம் வரும்போது அங்கங்கள் செயலிழப்பது மட்டுமின்றி எரிவு, விறைப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. அதேபோல வலிப்பு நோய் வருபவர்களிலும் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டு விறைப்பு, எரிவு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. மது அருந்துபவர்களிலும் விறைப்பு எரிவு நோய்கள் வருவது அதிகம்.
பெரும்பாலான விறைப்பு எரிவு என்பன படிப்படியாக வருபவை.
திடீரென உங்களது உடல் உறுப்புகளை அசைக்க முடியாது போனாலும்.

சிறுநீர், மலம் வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியாத நிலை, திடீரென தோன்றும் மயக்கம், நடைத்தடுமாற்றம், மறதி, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இதன் தாக்கம் அதிகம் உள்ளது என்று நாமே புரிந்து கொள்ளலாம். மதுவும் புகைத்தலுமே இதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

இப்படிப்பட்ட மதுவும் புகையும் தேவையா..????

புற்று நோய் - பொதுவான அறிகுறிகள்

சியின்மை, தீவிர எடை குறைதல், சோர்வு, ரத்த சோகை, உணவு விழுங்குவதில் சிரமம், கட்டி, அதிகநாள் ஆறாத புண், இருமல் ரத்தத்தோட வெளியேறும் சளி, இரத்த வாந்தி, மலத்தில் ரத்தம், மலச்சிக்கல், தொடர்ச்சியான வயிற்று போக்கு தொடர்ச்சியான வாந்தி (இரத்தத்துடன் அல்லது இரத்தம் இல்லாமல்), மஞ்சள் காமாலை, கண்களில் தண்ணீர் கசிதல், பூச்சி பறப்பது போன்ற உணர்வு, விழித்திரை பிரச்சனை, விடியற்காலையில் அதிக அளவு தலைவலி மற்றும் தொடர்ச்சியான தலைவலி, தொடர்ந்து லேசான ஜுரம் ஆகிய இவை எல்லாம் முக்கியமான பொதுவான அறிகுறிகளாகும்.



இது மட்டுமில்லாமல் எந்த இடத்தில் புற்றுநோய் வருகிறதோ அந்த இடத்துக்கு ஏற்றவாறும் சில குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றும்.

(முக்கிய குறிப்பு : புற்று நோய் அறிகுறிகள் பற்றிய இந்த பதிவின் நோக்கம் நமக்கு கேன்சரின் ஆரம்ப நிலை பற்றிய ஒரு விழிப்புணர்வுக்கு தானே ஒழிய, எல்லா அறிகுறிகளையும் கேன்சர் என்று பயப்பட அல்ல) 

மலச்சிக்கல்

நமது உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு நல்ல உடல் உழைப்பும் பசியும் மற்றும் செரிமானமும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மலச்சிக்கல் இருக்காது. வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் உண்டாகாமல் யாருமே இருக்க மாட்டார்கள். மலச்சிக்கலுடனேயே பலர் வாழ்ந்து கொண்டும் இருகின்றனர். 

சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், உப்பு நீர் கலந்து குடித்து வாந்தி, பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

மலச்சிக்கலால் மூலநோய் மட்டுமில்லாமல் உடல் சோர்வு, வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறு குடல் புற்று நோய் போன்ற பல நோய்ககள் வர வாய்ப்புகள் உள்ளன.

மலச்சிக்கலை தவிர்க்க மலம் கழிப்பதற்கு முன்பு, தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் கழுத்துப் பயிற்சி, முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடுதல், தோப்புக்கரணம் போன்ற பயிற்சிகள் செய்தால் எந்த சிக்கலும் இல்லாமல் மலம் வேகமாக வெளியேறும்.

வாரம் ஒரு முறை உடல் முழுவதும் நல்லலெண்ணை தேய்த்து குளித்தல், தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை, (முருங்கை கீரை மிக நல்லது) பச்சை காய்கறிகள், பழங்கள் வகையை சேர்த்துகொள்ளுதல் போன்ற பழக்கங்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்கும் . . இரவில் பாஸ்ட் புட் மற்றும் பரோட்டா போன்ற துரித வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலின் மொத்த வியாதிக்கும் மலச்சிக்கலே காரணமாகி விடும்.

நமது வாழ்கையின் முற் பகுதி முழுவதும் பணம் பணம் என்று உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே கழித்து, பிற் பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க மிக சுலபமான பயிற்சிகள், உணவுப் பழக்கவழக்கங்களை கையாண்டாலே போதும்..

கணையம் (Pancreas)

ணையம் உடலின் மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பி என்ற பெருமைப் பெற்றது.கணையம் தனித்தன்மை கொண்ட ஒரு உறுப்பு .
பேன்கிரியாஸ் என்பது ஒரு கிரேக்க வார்த்தை... கிரேக்க மொழியில் பேன் (pan) என்றால் "எல்லாமும்" என்றும், கிரியாஸ் (creas) என்றால் சதை என்றும் பொருள்படும். முழுவது சதையிலான உறுப்பு என்று கூறுகிறார்கள். 



வயிற்றின் இடதுபுறம் இரைப்பைக்கு நேர் கீழே இருக்கும் கணையமானது ஜீரண நீர் சுரக்கும் இயக்கத்தையும், நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் இயக்கத்தையும் ஒரு சேரக் கொண்டது.

செரிமானத்திற்கு இதன் பங்கு மிக முக்கியமானது. புரதத்தின் செரிமானாத்திற்கு மூன்று விதமான நொதிப்பொருட்களை உற்பத்தி செய்யும். அவை முறையே ட்ரிப்சின், கைமோட்ரிப்சின், கார்பாக்சி பெப்டிடேஸ்.

இதில் ட்ரிப்சின் வேலை மிக மகத்தானது. உயிர் காக்கும் வேலையை பார்க்கக் கூடியது. ட்ரிப்சின் சுரப்பு குறைந்தால் பாதி நிலையிலையே செரிக்கப்பட புரதப் பொருட்கள் கணையக்குழாயை அடைத்து கணையத்தில் ஒவ்வாமையை உண்டு பண்ணி கணைய வீக்கம் உண்டாக்கி விடும். கணைய வீக்கம் அதிகமானால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இப்படி பட்ட கணையம் சீர்கெட மிக முக்கிய காரணம் குடி மட்டுமே..
ஆல்கஹாலில் உள்ள நச்சுப் பொருட்கள் ட்ரிப்சின் அதிகம் சுரக்காமல் செய்து விடும். ஆக மதுவை தவிர்ப்போம்.. மகிழ்ச்சியோடு வாழ்வோம்...



மருந்தில்லா மருத்துவம்.... விரல் நுனியில் ஆரோக்கியம்...!!!


நமது உடலில் உள்ள மிக முக்கிய 12 உறுப்புகளும் கைவிரல் நுனிகளில் அல்லது கால் விரல் நுனிகளில் ஆரம்பம் ஆகின்றன அல்லது முடிவடைகின்றன. சுஜோக் எனப்படும் பிரதிபலிப்பு முறையின்படி கையின் கட்டை விரல் தலைப் பகுதியாகவும், ஆட்காட்டிவிரல், சுண்டுவிரல் இவைகள் கைகளையும், நடுவிரல், மோதிரவிரல் கால்களையும் குறிப்பிடப்படுகிறது. இவைகளில் தான் ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது. விரல் நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால் நம்மிடம் உள்ள பல நோய்கள் காணாமல் போகும்.

உடலில் உண்டாகும் நோய்களுக்கு காரணம் பிராணசக்தியின் குறைபாடே ஆகும். நம் உடல் உறுப்புகள் இயங்குவது பிராணசக்தியால் தான். விரல் நுனிகளில் கொடுக்கப்படும் அழுத்தம் உடலுக்கு தேவையான பிராண சக்தியை அதிகரிக்கச் செய்யும். அதனால் நுரையீரல் வலுப்படும். மூச்சு விடுதலில் சிரமம் முதலில் நீங்கும். விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் முழு உடலுமே ஆரோக்கியம் பெறும்.

சில நேரங்களில் கைகளுக்கு அதிக வேலை கொடுத்து செய்ய வேண்டி இருக்கும். அப்படி அந்த வேலைகளை செய்து முடித்தவுடன் நாம் நம்மை அறியாமலே விரல்களில் சொடுக்கு எடுப்போம். மிகச்சாதாரணமாய் எடுக்கும் சொடுக்கு நொடிகளில் சோர்வை போக்கி உற்சாகத்தை தருவதை உணர்ந்திருப்போம்.. ஆனால் அது ஏனென்று கவனித்திருக்க மாட்டோம்....

யாரையோ அல்லது எதையோ எதிர்பார்க்கும் போதும், எதிர்பாராத அதிர்ச்சியான விஷயங்களை கேட்கும் போதும், பார்க்கும் போதும் நம்மையறியாமல் கைகளை பிசைந்து கொள்வோம்... அதே போல தலையில் லேசாக அடித்துக்கொள்வோம்.... இவைகள் எதுவும் நாம் திட்டமிட்டு செய்வதில்லை.. அதுவே அனிச்சையாக நடக்கும். அந்தச் செயலின் மூலம் 'எண்டோமார் ஃபின்' என்ற பொருளைச் சுரக்கச் செய்து, யாருடைய துணையுமின்றி நம் உடல் தம்மைத்தாமே ஒருநிலைக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்திக்கொள்கிறது.

மற்றவர்களை செயல்களில் வியந்து பாராட்டவோ அல்லது அதிகப்படியான மகிழ்ச்சியின் காரணமாகவோ கை தட்டுவது என்பது நம்மை அறியாமல் செய்யும் அனிச்சை செயலாகும். இப்படி பட்ட சூழ்நிலையில் நம் உள்ளுறுப்புகளில் உண்டாகும் மாற்றங்களின் விளைவாக, 'அசிட்டைல் கொலைன்' என்கிற சுரப்பு சுரந்து, உடலையும் மனதையும் ஒருசேர மேலும் உற்சாகப்படுத்துகிறது.

டெல்லியில் ஒரு சாது தனது பக்தர்களை கை தட்ட சொல்லியே கவலைகளைப் போக்குவதாக கேள்வியும் பட்டு இருக்கிறோம். கவலைகள் போகிறதோ இல்லையோ அவர்கள் உடல் ஆரோக்கியம் அடைவார்கள் என்பதை அந்த சாது உணர்ந்து தான் இதை அவர்களுக்கு சிகிச்சையாகவே அளிக்கிறார்.

இப்படி ...முத்ரா, பாவனைகள், கை, கால் அசைத்தல் ஆகியவற்றில் நிறைந்திருக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை முறையை நம்மையறியாமலேயே நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

இதை மையமாகக் கொண்டே அன்று உரல், அம்மி, ஆட்டுக்கல்லு, / அன்று, உரலில் நெல் குத்துதல், அம்மியில் மிளகாய் அரைத்தல், ஆட்டுக்கல்லில் மாவரைத்தல் கிணற்றில் நீர் இறைத்தல், கோலம் போடுதல் போன்ற வேலைகளும், பல்லாங்குழி, கல்லாங்காயாட்டம் போன்ற விளையாட்டுகளும் பெண்களுக்கெனவே ஒதுக்கப்பட்டது. மேற்கூறிய அனைத்திலும் பெரும் பங்கு கைகளுக்கு மட்டுமே இருந்து வந்துது. வேலைகளை செய்வதையும் விளையாட்டையும் கூட பொழுதுபோக்குக்காகவோ, பணம் சம்பாதிக்கவோ மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் மையப்படுத்தியே அமைத்த நமது முன்னோர்களை வியக்காமல் இருக்க முடியாது...

இன்று பெருமளவில் நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான வியாதி சைனஸ். இதே போல கண், காது மூக்கு, வாய், பல், மற்றும் நாக்கு இவைகளில் உண்டாகும் குறைபாடுகள் நீண்டு கொண்டே போகும். இப்படியான எல்லா வியாதிகளுக்குமே விரல் நுனிகளில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். தூக்கமே இல்லை என்று பலரும் மிகுந்த மனக்கவலயுடன் இருப்பார்கள். சிலர் தூங்குவதே தொழிலாக இருப்பார்கள். விரல் நுனி அழுத்தம் கொடுப்பதால் தூக்கம் இல்லாதவர்கள் நன்கு தூங்குவார்கள். தூங்கி கொண்டு இருப்பவர்கள் சுறுசுறுப்படைவார்கள்.

முகவாதம், தலைவலி, தலைமுடி கொட்டுதல், கண்ணெரிச்சல், மூக்கடைப்பு, சைனஸ், ஒற்றை தலைவலி, முகநரம்பு வாதம், வாய்கோணல், தொண்டைகரகரப்பு, காது வலி, காதுகேளாமை, பல்வலி, அடைப்பு, மயக்கம், அதிர்ச்சி, மூக்கில் இரத்தம் வடிதல், இருமல், தொண்டைப்புண், வலிப்பு, இதய வலி மற்றும் இதய கோளாறுகள், நாக்கில் தடிப்பு, உயர் இரத்த அழுத்தம், அதிக வியர்வை, படபடப்பு, சோம்பல், மனத்தடுமாற்றம், மனக்கோளாறுகள், நரம்பு சம்பந்தமான கோளாறுகள், உள்ளங்காலில் உண்டாகும் எரிச்சல், கால்கள் மற்றும் கைகள் சில்லிட்டு போதல், செரிமாண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, சிறுகுடல் பிரச்சனைகள், மரத்துப்போதல், தசைகளில் இறுக்கம், தொப்பை, அல்சர், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை கோளாறுகள், வலிப்பு, தூக்கமின்மை, கனவுகோளாறுகள், உடல்வலி என மொத்த வியாதிகளுக்கும் மருந்து வேறு எங்கும் இல்லை..நம் கை மற்றும் கால் விரல் நுனிகளிலேயே அமைந்துள்ளது.

உடலின் எந்த பாகத்தில் வலியோ, குறைபாடோ இருந்தாலும் இந்த விரல் நுனிகளில் கொடுக்கும் அழுத்தம் மிகுந்த பலன் கொடுக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை விரல் நுனிகளில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் சரியான பலன் கிடைக்கும் என்பதில் ஐயப்பட வேண்டியதே இல்லை.

சரியான நேரத்தில் தூக்கமும், மலச்சிக்கல் இல்லாத உணவு பழக்கவழக்கங்களும், விரல் நுனி அழுத்தமும் கொடுத்து வாழ்ந்து வந்தால் வியாதியே என்பதே இல்லாத உலகை படைக்க முடியும்.

பணமும், பொருளும் இழந்து, உறுப்புகளையும் தொலைத்து, நிம்மதியையும் இழப்பது மட்டுமில்லாமல் இன்னும் பல வேறு வியாதிகளுடன் வாழ்நாள் முழுவதும் புலம்புவதை விட்டுவிட்டு விரல் நுனியில் ஆரோக்கியம் என்ற இந்த முறையைப் பயன் படுத்தி அனைவரும் வாழும் காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்.