"டென்ஷன்.. டென்ஷன்.. டென்ஷன்..." எதெற்கெடுத்தாலும் டென்ஷன்... எப்போதுமே நாம் டென்ஷனாக இருக்கிறோம்,.. அல்லது யாரையாவது டென்ஷனாக்கிக்கொண்டிருக்கிற
சமகால வாழ்க்கை கொடுத்த பரிசு அது... வேகம்.. வேகம்.. எதிலும் வேகம்.. நமக்கு நாமே ஒரு கற்பனையை சிருஷ்டித்துக்கொண்டு அதன்படி நாமே நடக்க முடியாமை , மற்றவர்கள் அவ்வாறு நடக்கவில்லை என்ற கோபம்... ரசாயனங்கள் கலந்துவிட்ட உணவு, மாசுபட்டுவிட்ட காற்று... உடல் உழைப்பை முடக்கிப்போட்டுவிட்ட நவீனம்.. எல்லாம் சேர்ந்து மன அழுத்தம்.. அந்த மன அழுத்தம் 90% நோய்களை கொண்டுவருகிறது
மிக முக்கியமாக உயர் இரத்த அழுத்தம்... உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் எடை கூடி, எரிக்கப்படாத சக்தி (கலோரி) இரத்தத்தில் சேர்ந்து கொழுப்பாக மாறி உயர் இரத்த அழுத்தமாக உருவெடுக்கிறது... தலை வலி, எரிச்சல் என்ற சாதாரண அறிகுறிகளாக முதலில் தென்படும்.. இரத்த அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க அது கொடுமையான தலைவலி, கை கால்கள் மரத்துப்போதல், நெஞ்சு எரிச்சல் என பல பிரச்சனைகளை கொண்டுவரும்.. நாளடைவில் மூளையில் இருக்கும் மெல்லிய இரத்த குழாய்கள் வெடித்து பெராலிசிஸ் எனப்படும் பக்கவாதத்தையோ இல்லை மரணத்தையோ கொண்டுவரும்..
புகை, மது அறவே கூடாது..மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, சீரான உணவுப் பழக்கம், தேவையான அளவு தூக்கம், மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால் இந்த வியாதி வர வாய்ப்பே இல்லை எனலாம்...
உயர் இரத்த அழுத்தம் போக்க மிக எளிய வழி அக்குபிரஷரில் உண்டு.
உயர் இரத்த அழுத்தத்திற்கு பல புள்ளிகள் இருந்தாலும் இது உடனடியாகவும், நாமே செய்து கொள்ள மிக எளிமையாகவும் இருக்கும்....படத்தில் காட்டியுள்ள படி இரு கைகளாலும் 3 நிமிடங்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே மூச்சை ஆழமாக இழுத்து விட வேண்டும். ஒரு நாளைக்கு 2, 3 முறை கூட செய்து வர வேண்டும். டென்னிஸ் பந்து இரண்டை அந்த இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் படுத்து ஓய்வு எடுக்கலாம்.
இன்னும் சில எளிய முறைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், சியாட்டிகா என்றழைக்கப்படும் இடுப்புச் சந்து வாதம் உள்ளவர்களுக்கும் தோப்புக்கரணம் நல்ல பயனளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக