சோளச்சோறு, சோளதோசை, சோளக்கஞ்சி எல்லாம் அன்றைய காலகட்டங்களில் கிராம மக்களின் எளிமையான உணவாக இருந்தது... சோளத்தோசை மிகவும் சத்து மற்றும் ருசி நிறைந்த மிக எளிய பாரம்பரிய உணவு வகை.
அரை ஆழாக்கு மக்கா சோளம் .. அரை ஆழாக்கு அரிசி, ஒரு கைப்பிடி உளுந்து , அரை டீஸ்பூன் வெந்தயம்.. ஆகியவற்றை நன்கு கழுவி களைந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்...பிறகு இதனைஅரைத்து (அளவு குறைவாக இருப்பதால் மிக்சியிலேயே அரைத்துக்கொள்ளலாம்) மூன்று அல்லது நான்கு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.. உதாரணமாக மதியம் அரைத்து வைத்தால் மாலை/இரவு தோசைக்கு தேவையான பதம் கிடைக்கும்... மாவு நன்கு பொங்கி வந்திருக்கும். பிறகு, எப்போதும் போல தோசைக்கல்லில் வார்த்து எடுக்கலாம்...
இது சாதாரண அரிசி-உளுந்து மாவு தோசையை விட கூடுதல் சுவையாகவும், அதீத சத்துக்கள் மிகுந்ததாகவும் இருக்கும்...
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஃபோலிக் அமிலம், செரோட்டன், அஸ்கார்பிக் அமிலம் ஆகியவற்றுடன் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளது.
சோள உணவுகள் உடலுக்கு உறுதியை கொடுப்பதோடு இதயத்தை பாதுக்காக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். கொஞ்சம் சூடு அதிகம் என்பதால் மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்து வருவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக