வியாழன், 28 ஆகஸ்ட், 2014

புகையால் கருகும் உறவுகள்.


புகைப் பிடிப்பவர்களுக்கு வாய், தொண்டை, நுரையீரல், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை என மிக முக்கிய உறுப்புகளிலும் புற்றுநோய் வரும், ஆண்மைக் குறைபாடு, வாய் துர்நாற்றம் போன்ற உபரி பரிசளிப்பும் உண்டு என பல முறை இங்கு பதிவுகள் போட்டு எச்சரித்தாலும் இன்னும் நம்மில் பலர் அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வரவில்லை.

புகைப்பதால் உண்டாகும் கெடுதல்கள் குறித்து பல விழிப்புணர்ச்சி விளம்பரங்கள் வந்தாலும், அதையும் மீறி புகைப் பிடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு வாரத்திற்கு நாற்பது மணி நேரம் வீதம் புகை பிடிப்பவர்கள் உடன் இருந்தால், உடன் இருக்கும் ஒரே பாவத்திற்காக மனைவி-பிள்ளைகள்-அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்..இவர்களுக்கும் ஐந்தாண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் வரும் சாத்தியங்கள் அதிகம்..நுரையீரல் புற்றுநோய் மட்டுமில்லாமல் இன்னும் பல நோய்களும் அவர்களை தாக்கும்.

இனிமேல் உங்கள் அருகில் இருப்பவர் யாரும் புகைத்தால்.. "நீ செத்தா சாவு... என்னை ஏன் கொல்ற" ன்னு அந்த சிகரெட்டை பிடுங்கி எறிங்க.... 




ஒரு கூடுதல் தகவல்:- ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் அமைந்திருக்கும் "ஆல்கலிக்ஸ்" என்ற தனியார் நிறுவனம் புகை பிடிக்காதவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக