திரைப்படங்களில் தங்களின் ஆதர்ச கதாநாயகனை பார்த்தோ, இல்லை தன்னுடைய தந்தை, அண்ணன், பக்கத்து வீட்டுக்காரர், ஆசிரியர் இப்படி யாரோ ஒருவரை பார்த்தோ ஆசைப்பட்டு விளையாட்டாக ஆரம்பிக்கும் புகைப்பழக்கமும் போதைப்பழக்கமும் நாளடைவில், வேதாளத்தை வீழ்த்த விடாமுயற்சியுடன் போராடிய விக்கிரமாதித்யன் போல எவ்வளவு முயன்றாலும் விடாமல் அவர்களை முழுமையாய் தொற்றிக் கொள்ளும்..
யாரெல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமை ஆகிறார்கள்???
பதின்பருவ வயதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோரை இந்த பழக்கம் எளிதில் தொற்றுகிறது .. இதற்கு காரணம், மது-போதை என்பது ஒரு கதாநாயகனுக்கு உரிய அடையாளமாய் சமூகத்தில் சித்தரிக்கப்படுவது... அதன் பிறகு, நண்பர்களுடன் சேர்ந்து "கம்பெனி" கொடுப்பதற்காக புகைக்க-குடிக்க ஆரம்பிப்பது, கொண்டாட்டங்களுக்காக ஆரம்பிப்பது என இப்படி தொடங்கி, ஏதாவது பிரச்சினையில் இருந்து விடுபட (அப்படித்தான் அவர்கள் நம்பிகொண்டிருப்பார்கள்), பயம், மன உளைச்சல், மன அழுத்தம், தனிமை, தைரியமின்மை என பல காரணங்களால் அந்த பழக்கம் தொடர ஆரம்பிக்கிறது.. கொஞ்சம் கொஞ்சமாய் அது அவர்களை ஆக்கிரமித்து நாளடைவில் அடிமையாக்கி விடும்..
யாரெல்லாம் இந்த பழக்கத்திற்கு அடிமை ஆகிறார்கள்???
பதின்பருவ வயதுகளின் தொடக்கத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோரை இந்த பழக்கம் எளிதில் தொற்றுகிறது .. இதற்கு காரணம், மது-போதை என்பது ஒரு கதாநாயகனுக்கு உரிய அடையாளமாய் சமூகத்தில் சித்தரிக்கப்படுவது... அதன் பிறகு, நண்பர்களுடன் சேர்ந்து "கம்பெனி" கொடுப்பதற்காக புகைக்க-குடிக்க ஆரம்பிப்பது, கொண்டாட்டங்களுக்காக ஆரம்பிப்பது என இப்படி தொடங்கி, ஏதாவது பிரச்சினையில் இருந்து விடுபட (அப்படித்தான் அவர்கள் நம்பிகொண்டிருப்பார்கள்), பயம், மன உளைச்சல், மன அழுத்தம், தனிமை, தைரியமின்மை என பல காரணங்களால் அந்த பழக்கம் தொடர ஆரம்பிக்கிறது.. கொஞ்சம் கொஞ்சமாய் அது அவர்களை ஆக்கிரமித்து நாளடைவில் அடிமையாக்கி விடும்..
இன்னும் ஒரு முக்கிய காரணம்... எளிதில் கிடைப்பது... எல்லா பெட்டிக்கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை புகை பொருட்கள் கிடைக்கிறது... அலைச்சல் இல்லாமல் மதுவகைகளை வாங்க அரசே ஊரெங்கும் கடைகளை திறந்திருக்கிறது... இன்னும் ராயல் சொசைட்டி மக்களுக்கென பஃப் - கேளிக்கை விடுதிகள் ஆங்காங்கே திறக்கப்பட்டிருக்கிறது..
இன்று போதை பழக்கம் நமது சமுதாயத்தில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது வறுமை, வேலையின்மைக்கு அடுத்த படியாக இந்தியா எதிர் நோக்கியுள்ள பெரிய பிரச்சனை போதைபழக்கம்.அதுமட்டுமல்லாம
பரவலாக மனப் பதட்டம், பயந்த சுபாவம் சோம்பல், சோர்வு, சோகம், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைவு, ஆண்மை குறைவு போன்ற குறையுள்ளவர்கள் சுலபமாக மதுபோதைக்கு அடிமையாகிறார்கள். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் துருதிஷ்டவசமாக போதையின் தீ நாக்குகள் இவர்களை எளிதில் ஆட்கொண்டு விடுகின்றன.
இதன் விளைவுகள்??
நம் உடல் உறுப்புகள் உடலின் இயக்கத்திற்கான வேலைகளை தனித்தனியாக செய்தாலும் கூட அவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டே இயங்குகின்றன... உடல் உறுப்புகளின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவைகள் யாவும் இணைந்து உயிர் காக்கும் கூட்டுமுயற்சியில் தான் இயங்குகின்றன. ஒரு உறுப்பு செயலிழந்தால் அது தொடர்பான மற்ற உறுப்புகளும்..அதை திடர்ந்து அடுத்தடுத்த உறுப்புகளும் செயலிழக்க தொடங்கும். இதுதான் உடலின் அடிப்படை தத்துவம்.
மதுபழக்கம் உள்ளவர்களிடம் புகைப்பழக்கம் சேர்ந்து கொள்வதால் இதயம் நிச்சயமாக மாரடைப்பால் தாக்கப்பட வாய்ப்பு அதிகமாகிறது. இரத்தத்தில் உள்ள பொட்டாசியம்,மெக்னீசியம்.போ
தினசரி கடின உடல் உழைப்பு செய்யும் ஏழைத் தொழிலாளிகள் தங்களின் உடல் அலுப்பு தீர என்று தினசரி குடிக்கும் மது ஒருநாள் அவர்கள் எதற்குமே லாயக்கற்றவர்காக போகும் படியாக செய்து விடும்...காசநோய், புற்றுநோய் போன்ற பரிசுகளை அள்ளிக்கொடுத்து அவர்களை நிரந்தர ஒய்வு எடுக்க வைத்து விடும்..
போதையில் சுய நினைவிழந்து வாந்தி எடுக்கும் போது புரையேறி நுரையீரல் உள்புகும். இதனால் நுரையீரல் கிருமிகளால் தாக்கப்பட்டு காய்ச்சல், நிமோனியா, மூச்சு திணறல்,மயக்கம் போன்ற பல ஆபத்தான விளைவுகள் தோன்றி, சாதாரண வாந்தி இரத்த வாந்தியாகி இறுதியில் மரணத்தை தழுவுவர்.
இரத்தத்தில் இருந்து மதுவால் கரைக்கப்பட்ட பொட்டாஷியம் , மக்னீஷியம் போன்ற பல முக்கிய தாது உப்புக்கள் தொடர்ந்து சிறுநீர் வழியாக வெளியேறுவதால் உடலும், நரம்புகளும் தீவிரமாக பாதிப்புக்குளாகும்.
இரத்த சோகை, இரத்த ஓட்ட தடை, இரத்த இழப்பு, இருதய வீக்கம், கல்லீரல் வீக்கம், கல்லீரல் சிதைவு, வயிறு வீக்கம் போன்ற பல உறுப்புக்கள் பாதிப்பால் சிறு நீரகங்களை மது மறைமுகமாக பாதிக்கும் காரணங்களாக அமைகிறது. சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள், பல உறுப்புகளை தாக்கும் தீவிர நோய்கள் என்பதால் மதுவினால் மேலும் புரத சக்தி குறைந்து சிறு நீரகங்களையும் தாக்கி அழிகிறது.
இருப்பதை விட இறப்பதே தீர்வு என்ற தீவிர வெறுப்பான வார்த்தைகளும், அவர்களது ஆழ்மனதில் புதைந்துள்ள மனசோர்வும், விரக்தியும், அவநம்பிக்கையும் மதுவால் தற்கொலையாக மாறியுள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு புகை, கஞ்சாவுடன் கூடிய மது பழக்கத்தால், விந்து தன்மை பாதிக்கப்பட்டு குழந்தையின்மை, ஆணுறுப்பு விரைப்புத்தன்மை குறைவு அல்லது முழுமையாகவே விரைப்புத் தன்மையற்றுப் போதல், விந்து முந்துதல், விந்து பற்றாகுறை போன்ற தீவிர பல பாதிப்புகள் ஏற்படலாம்.
மனசோர்வு, நரம்பு கோளாறுகள், பேச்சிழப்பு, சோகை, பலகீனம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, உடலுறவில் சிக்கல், தொடர் குடிபழக்கம் உள்ளவர்களுக்கு உண்டாகும் வியாதிகள். இவர்களுக்கு வாய், தொண்டை, குரல்வளை, குரல் நாண்கள், உணவுக்குழாய், இரைப்பை, பெருங்குடல், மலக்குடல், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற பல பாகங்களில் புற்று நோய் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பெண்களுக்கு நீண்ட நாள் மதுபழக்கம் நமது நாட்டை பொறுத்த வரை குறைவு என்றாலும் "உண்டு" என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதன் சராசரி சதவிகிதம் இப்போது கூடிக்கொண்டே போகிறது என்பதையும் அறிவோம். பெண்கள் மதுவை தொடர்ந்து நீண்டகாலம் எடுத்தால் கர்ப்பப்பை மற்றும் கருவைப் பாதித்து, கருச் சிதைவு உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் கர்ப்ப காலத்தில் பெண்களின் இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்கள்குறைபாடு உண்டாகி, மது கருவின் மூளையை பாதித்து ஆல்ஹகால் பீடல் சின்ரோம் என்ற வியாதியுடன் குழந்தை பிறக்க வைக்கும். தொடர் குடிபழக்கத்தால் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவர்.
மிதமாக குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு, என்று பரவலான வதந்திகளால் தம்மைத் தாமே ஏமாற்றி, நியாயபடுத்தி கொண்டு பெருமைப்படும் பழக்கம் ஒரு மூட நம்பிக்கையாகவே மாறி விட்டது.
இதிலிருந்து மீள்வது எப்படி??
மது மற்றும் புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உறுதியாக எடுக்க வேண்டும்,... அப்படி உறுதியாய் முடிவேடுப்பவற்குகு அவரது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள் உறுதுணையாய் இருக்க வேண்டும்... கூடுமானவரை அம்மாதிரியான நண்பர்கள் சேர்க்கையை தவிர்த்தல், மாலைநேரங்களில் வெளியில் எங்கும் சுற்றாமல் வீட்டில் இருத்தல், குழந்தைகளுடன் போழுதுபோக்கியோ, நல்ல புத்தகங்களை படித்தோ, நிகழ்ச்சிகளை பார்த்தோ தங்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும்..
The Department of Preventative Medicine, University of Oslo in Norway கடந்த 1997 ல் சராசரியாக 39 வயதிற்குட்பட்ட, சுமார் 8 முதல் 23 வருடங்கள் புகை- மது பழக்கம் உடைய, ஒரு நாளைக்கு சுமார் 6 முதல் 20 சிகரெட் வரை புகைக்கும் பழக்கம் உடைய ஆண் மற்றும் பெண்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது... ஒவ்வொரு முறை சிகிச்சைக்கு முன்பும் அவர்களுக்கு போதை-புகை மீதான ஆர்வங்கள் கேட்டறியப்பட்டது... கடைசிநாள் சிகிச்சையின் முடிவும் அவர்களுக்கு புகைக்கும் -மது அருந்தும் எண்ணமே தோன்றவில்லை என்று கூறினார்கள்..
மேலும் சில வாரங்களிலேயே நிக்கோடினால் அவர்கள் உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்ததையும் கண்டறிந்தனர்...
இந்த பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அக்குபஞ்சர் மருத்துவமானது "காது அக்குபஞ்சர்" (Auricular acupuncture) என்றொரு சிகிச்சை முறையை கொண்டுள்ளது.. இந்த சிகிச்சையால் மிக விரைவில் போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியும்.. காதுகளில் அமைந்துள்ள , முக்கிய உடல் உறுப்புகளுடன் தொடர்புடைய அக்குபஞ்சர் புள்ளிகளை மெல்லிய ஊசி மூலம் தூண்டுவதால் உடல் உறுப்புகளும் சீரமைக்கப்படுகிறது... மூளையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் "போதை" மீதான ஆவலை குறைத்து நாளடைவில் ஆசையே வராமல் செய்யும்..
பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பை பொறுத்து சிகிச்சைக்கான காலம் மாறுபடும்..
மேலும் இதனுடன் நெற்றியின் இருப்பக்கமும் பொட்டில் (temple point) படத்தில் காட்டியுள்ளது போல இரண்டு கை கட்டை விரலையும் வைத்து மேலும் கீழுமாக அழுத்தம் கொடுத்து வர நியாபக சக்தியையும், மன அழுத்தம் குறையவும் உதவும். மேலும் இது மது, புகை, போதை போன்ற எண்ணங்களில் இருந்து நம்மை மீட்டெடுக்கவும் பேருதவியாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக