மனித உடல் திசுக்களில் ஏற்படும் அசாதாரணத் தன்மையும், கட்டுப்பாடற்ற, முறையற்ற வளர்ச்சியுமே புற்றுநோய் எனப்படுகிறது. பலவகையான உயிரணுக்களால் (செல்களால்) ஆனது நம் உடல். உடலின் வளர்ச்சிக்கு உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்கும். இப்படிப்பட்ட முறையில் கோளாறு உண்டாகும் போது பழைய உயிரணுக்கள் அழிய வேண்டிய நேரத்தில் அழியாமல் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துவிடும். உடலில் எப்போதும் போல புதிய உயிரணுக்கள் உருவாகும். உடலில் சேரும் அதிகப்படியான உயிரணுக்கள் கட்டியாக மாற ஆரம்பித்து விடும். உடலுக்கு அடிப்படையாக உள்ள செல்களை பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்ற வைரஸ்களும் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.
இப்போதைய பெண்களை உலுக்கிக்கொண்டிருக்கும் கொடிய நோய்.. மார்பகப் புற்று நோய்.. மார்பகப்புற்றுநோய் பற்றிய விழிப்புணர்ச்சி தற்போது அனைத்து பெண்களுக்குமே அவசியமான ஒன்று.. அனைத்து வயதினரும் இதை பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும். இதன் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து வைத்திருந்தால் இந்த நோயை வராமல் இருக்கவும், வந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் ஆயுளை நீட்டித்துக்கொள்ளலாம்...
பெண்களின் மார்பகம் ஒவ்வொன்றும் லோப்ஸ் எனப்படும் ஆறு முதல் ஒன்பது அடுக்குகளை கொண்ட மடிப்புத் தொங்கு சதைகள் கொண்டது. மார்பகத்தில் சதைப்பற்று ஏதுமில்லை. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று விலா எலும்புகளை மறைக்கின்றன. ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும், லிம்ப் (lymph) எனப்படும் வண்ணமற்ற திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் இருந்தாலும் மிக அதிகமாக அக்குள், தோள்பட்டை எலும்புகளின் மேலே மற்றும் மார்பகங்களிலும் உள்ளன. மார்பகத்தில் உள்ள சதைக் கோளங்கள் வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்று தோன்றும்.
மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். மார்பகங்களின் கீழிருந்து மேலாக, பக்கவாட்டில் மற்றும் அக்குளை ஒட்டிய பகுதியில் அழுத்தமாக தடவிப் பார்ப்பதன் மூலம் ஏதேனும் கட்டிகளோ, கொப்புளங்கள் போன்றோ, மேடிட்டோ காணப்படுமாயின் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். மேலும் கட்டிகள் அனைத்துமே கேன்சர் கட்டிகள் இல்லை. சிலசமயம் அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினால், அந்த கட்டிகளில் வலி இருந்தாலும், இல்லாவிட்டாலும் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என முறையான பரிசோதனை செய்துகொள்வது நல்லது . புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை.
புற்றுநோய் ஏன், எதனால், எப்போது, எப்படி தாக்கும் என்பது குறித்து இதுவரை முழுமையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை .புற்றுநோய் உண்டாகும் சூழ்நிலைகள், காரணங்கள் மற்றும் அறிகுறிகளும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. தொடக்க நிலையிலே புற்றுநோய்களை கண்டறிய வழிகளும், அதிலிருந்து மீண்டு நீண்ட காலம் வாழ மாற்று மருத்துவ வழிமுறைகளும் இப்போது நடை முறையில் வந்து விட்டன.
ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது.
பொதுவாக 50 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ளவது அவசியம். மனித உடலை 250 வகையான புற்றுநோய்கள் தாக்குவதாகவும், மார்பக புற்றுநோயால் சென்னையில் மட்டும், 35 பெண்களில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடமும் எட்டு இலட்சம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 2 சதவிகிதம் உள்ளது. மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் பெண்கள் மிரளத்தான் செய்கிறார்கள். சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.
மாசு நிறைந்த சுற்றுச்சூழல், ரசாயனம் நிறைந்த உட்கொள்ளும் உணவுகள், தாய்மை அடையாத பெண்கள், குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம், பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம்.
எந்த வித அறிகுறியையும் காட்டாமல், நம் உடலில் ரகசியமாக உருவாகி, சிறிது சிறிதாக நம் மன உறுதியை உடைத்து இறப்பின் வாசலுக்கே அழைத்துச் செல்லும். சாகும் நாள் தெரிந்துவிட்டால் சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட வாழும் நாள் நரகமாகவே இருக்கும்.. பிறக்கும் எல்லோருமே இறக்கபோவது உறுதி என்று தெரிந்து இருந்தாலும் கூட, மரணத்தை வாசலில் உட்காரவைத்து விட்டு அது எப்போது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம் என்ற பயத்துடனே ஒவ்வொரு நொடியையும் வாழும் வாழ்க்கை நரகம் தான். உடலை வேதனைப்படுத்தி அதன் மூலம் மனதை, நம்பிக்கையை தளர்த்தி, தகர்த்தி கடைசியில் வெல்லும் ஒரு நோய்தான் புற்று நோய். அமைதி, மன உறுதி, நோயைப் பற்றிய தெளிவும் இருந்தால் எந்தவிதமான புற்றுநோயால் பாதிக்கப் பட்டாலும், அதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு சந்தோஷமாக வாழலாம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் நம்முடன் ஆரோக்கியமாக பலகாலமாக வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்கு இறப்பு ஒன்று தான் முடிவு என்ற நிலை மாறி, பக்கவிளைவுகள் இல்லாத பலவிதமான மாற்று சிகிச்சை முறைகள் வந்து விட்ட நிலையிலும், மருந்து கால், மனசு முக்கால் என்ற வைத்திய மொழியின் அடிப்படையில், வீணான பயங்களை அகற்றி, நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழலாம் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கமே இந்த பதிவு
மார்பக புற்று பெண்களை தாக்காமலும், நோயால் தாக்கப்பட்டால் நோயிலிருந்து விடுபட பெண்கள் அனைவரும் சிறிதளவாவது விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். பெண்கள் தங்களை தாங்களே எப்படியெல்லாம் மார்பகத்தை சுயபரிசோதனை செய்துக்கொள்ளலாம் என இனி காணலாம்.
பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவு மற்றும் வடிவம் மாறி இருந்தாலோ, அக்குள், மார்பகங்களில் வழக்கத்துக்கு மாறாக தடித்தோ (அ) கட்டி மாதிரி இருந்தாலோ, மார்பகம் மேல் அசாதரணமாக சிவப்பு தடிப்புகள் தென்பட்டாலோ கண்டிப்பாக அதை சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது, வலி, காம்புகளில் இருந்து இரத்தமோ வேறு திரவமோ கசிந்தால் உடனடியாக தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது. புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. மார்பகத் திசுக்கள், மார்பகப் பகுதியில் மட்டுமே இருப்பதில்லை, அக்குள் பகுதியிலும் உண்டு. அக்குள் பகுதிகளில் உருண்டையாக தசைக் கோளங்கள் போல உருவாகி இருந்தால் சில சமயம் அது கட்டியாக கூட இருக்கலாம், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்
புற்று நோய்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
முதல் வகை புற்றுநோய் நாளங்கள் தடிப்பதின் மூலம் தொடங்கும்.
இரண்டாம் வகை புற்றுநோய் மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் தொடங்கும்.
மூன்றாம் வகை புற்றுநோய் மார்பகம் முழுவதும் பரவிய பின், அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களிலும், எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் எல்லா லிம்ப் நோட்களிலும் புற்று நோய்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
முதல் வகை புற்றுநோய் என்பது, நாளங்கள் தடிப்பதின் மூலம் தொடங்கும்.
இரண்டாம் வகை புற்றுநோய் என்பது, மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் தொடங்கும்.
மூன்றாம் வகை புற்றுநோய் என்பது மார்பகம் முழுவதும் முற்றிலும் பரவிய பின், அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களிலும், எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் எல்லா லிம்ப் நோட்களிலும் பரவியிருக்கும்.
மார்பகப் புற்று நோயில் நான்கு நிலைகள் உள்ளன.
1. வேறு எங்கும் பரவாமல் மிகச் சிறிய அளவில் மட்டுமே கட்டியாக முதலில் மார்பகம் மட்டுமே தாக்கிய நிலை.
2. மார்பகம் மற்றும் அக்குள் பகுதியையும் பாதித்து விட்ட நிலை.
3. மார்பக தோல் மற்றும் மார்பக சுவரை தாண்டியும், அக்குள் பகுதியிலுள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவிய நிலை.
4. மூளை, எலும்புகள் என உடலின் மற்ற பாகங்கள், லிம்ப் நோட்கள் அனைத்திலும் முற்றிலும் பரவி விட்ட நிலை.
சிறுவயதிலிருந்தே தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு உடலில் உருவாகி, கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனக் கூறலாம். மேலும் கேரட்டில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் (நோய் எதிர்ப்பு சக்தி) அதிகம் உள்ளதால், அடிக்கடி உணவில் கேரட்டை சேர்த்துக் கொண்டால் புற்றுநோயை அடியோடு வராமல் தடுக்கலாம். ஆம் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது கேரட்.
அகத்திக்கீரை, முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
மேலும் உணவில் முளைக்கட்டிய பயறு, நெல்லிக்காய், முட்டைக்கோஸ், கேரட், பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை, சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ், ஆப்பிள், மாதுளை, திராட்சை, பப்பாளிப் பழம் மற்றும் தர்பூசணிப் பழங்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நோயால் தாக்கப்பட்டால் அதன் பின் உணவு வகைகளில் அசைவத்தில் அறவே தவிர்க்க வேண்டியவை ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி.
மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் வேப்பிலையும், மஞ்சளும் தினமும் ஆண்/பெண் இருபாலரும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் அணுக்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டு, எந்த வகையான புற்று நோயும் நம்மை அண்டாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக