வியாழன், 28 ஆகஸ்ட், 2014

உடல் பருமன்



சமகால (சோம்பேறித்தனத்துடன் கூடிய) அவசர வாழ்க்கையில் அனைத்து நோய்களுக்கும் முக்கிய காரணம் உடல் உழைப்பை துறந்து ஃபாஸ்ட் ஃபுட் என்று சொல்லக்கூடிய துரித உணவுவகைகளையும், எண்ணெயில் பொறித்த உணவு வகைகளையும் சாப்பிட்டு உடல் பருமனை கூட்டிக்கொல்(ள்)வதுதான். வியாதிகளை வரவேற்கும் பொறுப்பை உடல் பருமன் எனும் வரவேற்பாளர் தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்..




உடல் உழைப்பு தேவைப்படும் எல்லா வேலைகளுக்கும் (grinder, mixie,washing machine) இயந்திரங்களை வாங்கி வைத்துவிட்டு, உடல் பருமனானவுடன் அந்த பருமனை குறைக்கவும் ஒரு இயந்திரம் வாங்குவதுதான் நவீனம்.. அல்லது இயற்கை காற்று, சூரிய ஒளி எதுவுமே உடலில் படாதவாறு, குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி நிலையங்களில் வியர்க்காமல் உடற்பயிற்சி செய்வது தான் ஃபேஷன் ஆகிவிட்டது..

புகை‌பிடி‌த்தால் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், வாய், தொண்டை என பல உறுப்புகள் பாதிக்கப்பட்டு..பின் மொத்த உறுப்புகளும் பாதிக்கப்படும். ஆனால் உடல் எடை கூடினாலோ, புகை‌பிடி‌டிப்பதால் உண்டாகும் பாதிப்பை விட அ‌திக பா‌தி‌ப்பை‌த் தரு‌ம். அதிகப்படியான எடையுடன் இருப்பவர்கள் தன் வாழ்நாளை சுமார் 10 லிருந்து 13 ஆ‌ண்டுகளை‌க் இழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு எளிய கணக்காக , நமது உடலில் உயரத்தை சென்டிமீட்டரில் அளந்துகொண்டு, அதில் 105 என்ற என்னை கழித்தால் மீதம் வரும் அளவு சரியான எடை என்பதை அறியலாம்... உதாரணமாக 168 செண்டி மீட்டர் உயரம் உள்ள ஒருவர் , 168-105 = 63 கிலோ இருந்தால் அது சராசரியான சரி எடை ஆகும்..கூடுமானவரையில் இந்த சராசரி அளவை நிர்வகிப்பதன் மூலம் பலவியாதிகளை வாயிலிலேயே திருப்பி அனுப்பலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக