மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம் என்றே கூறலாம். உடலின் அனைத்து பாகங்களிலிருந்து தகவல்களை தண்டுவடம் மற்றும் மூளைக்கும் , தண்டுவடமும் மூளையும் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடலின் மற்ற பாகங்களுக்கும் தொடர்ந்து இடைவிடாமல் இந்த நரம்பு மண்டலமே பரிமாறிக்கொண்டிருக்கிறது
தகவல்களை மூளை மற்றும் தண்டுவடத்திற்கு கொண்டு சேர்க்கும் வகை நரம்புகள் உணர்வு (sensory) நரம்புகள். இவை உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும் . மூளை மற்றும் தண்டுவடம் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடலின் மற்ற பாகங்களுக்கு கொண்டு சேர்க்கும் நரம்புகள், செயல்(motor) நரம்புகள் இவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். சமகால சாதாரண வார்த்தைகளில் சொல்வதென்றால் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் நரம்புகள்
நம் உடலில் 72,000 நரம்புகள் உண்டு என்று நாம் அறிந்தது தான்...அவை எங்கே , எத்தனை இருக்கின்றன என்பதை பார்ப்போம்.
தலை 15000
செவிகள் 3300
கண்கள் 4000
மூக்கு 3349
தோள், பிடரி 6000
கண்டம் 5000
கரங்கள் 3000
முண்டம் 2170
இடை 8000
விரல்கள் 3000
லிங்கம் 7000
மூலம் 5000
சந்துகள் 2000
பாதம் 5150
ஆக மொத்தம் -72000 .. இந்த 72000 நரம்புகளுமே நம்மை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக