வியாழன், 28 ஆகஸ்ட், 2014

நீரிழிவு நோய்

ஒருகாலத்தில் பணக்கார வியாதியாக (???!!) இருந்த சர்க்கரை வியாதி இன்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாக ஆகி விட்டது... அப்படியானால் எல்லோருமே பணக்காரர்கள் ஆகிவிட்டோமா என்ன..??? அப்படி இல்லை... பணக்காரர்கள் என்பவர்கள் எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் வைத்துக்கொண்டும், இயந்திரங்கள் வைத்துக்கொண்டும் இருப்பதால் அவர்களது உடல் "உழைப்பு" என்பதையே அறியாததாக இருக்கிறது... உடல் உழைப்பு இல்லை என்றால் வரக்கூடிய சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் பணக்கார வியாதிகள் என சொல்லப்பட்டது... ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் பணக்காரர்கள்/ஏழைகள் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோருமே உடல் உழைப்பை குறைத்து இயந்திரங்களின் உதவியை நாட ஆரம்பித்து விட்டோம்.... உடலில் சேரும் எரிக்கப்படாத சக்தி(கலோரீஸ்) உடலில் சேர்ந்து சேர்ந்து இன்று பல வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விட்டோம்... அதில் மிக முக்கியமானது "சர்க்கரை வியாதி"
வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் போது கூட உங்களுக்கு டீ /காஃபி சர்க்கரை போடலாமா... இல்லாம தரவா?" என்று கேட்கும் அளவு எல்லோருக்கும் இந்த வியாதியின் தாக்கம் நிறைந்திருக்கிறது

இந்த சர்க்கரையும், உயர் அழுத்தமும் உடன்பிறவா சகோதரர்கள்.. ஒருவரை ஒருவர் பிரிவதும் இல்லை.. கைவிடுவதும் இல்லை... ஒருவர் ஒரு உடம்பில் வந்தால் உடனே மற்றவரையும் வரவழைத்து விடுவார்...

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரில் அதிகம் பேர் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று "உலக சுகாதார அமைப்பின்" (WHO ) புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன... இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அதிர வைக்கும், ஆட்டிப் படைக்கும், ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக, நோய்களில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இது அடுத்த பத்து ஆண்டுகளில் இன்னும் இருபது சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் அந்த புள்ளி விபரம் எச்சரிக்கிறது...



இது எப்படி வருகிறது?

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூடினாலோ, குறைந்தாலோ சர்க்கரை நோய் வரும்.. ஓ ... இவ்ளோ தானே... அதுபாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே.... என்பவர்கள் கவனத்திற்கு... இந்த அறியாமைதான் சர்க்கரை நோயின் பலம்... இரத்தத்தில் கூடும் சர்க்கரையின் அளவானது இதய நோய்கள், நரம்பு மண்டல பாதிப்புகள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு என படிப்படியாக நமது உறுப்புகளை சூறையாடி மரணத்தின் பிடியில் எளிதில் தள்ளி விடும்..

ஒருமுறை இப்படி சர்க்கரையின் அளவு கூடிவிட்டாலோ/குறைந்து விட்டாலோ.. பிறகு அதை சமநிலைப்படுத்த மாத்திரைகளை வாழ்நாள் முழுதும் உட்கொண்டே ஆக வேண்டிய நிலை தான் இப்போது இருக்கிறது... இதற்கு காரணம் சர்க்கரை நோயை பற்றி போதிய விழிப்புணர்ச்சி இல்லாததும், நமது உடல் நலனின் மீது அக்கறை இல்லாததும் தான்...
இடுப்பில் அதிக தசை, அதிக உடல் எடை, பரம்பரையாக இந்நோய் இருப்பது, அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, சரிவிகித சத்துக்கள் இல்லாத உணவு, மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது போன்றவை இந்நோய்க்கான சில காரணங்களாக அமைகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், சோர்வு, பசி, உடல் எடை இழத்தல், கண்பார்வை மங்குதல், எடை அதிகமாக இருப்பவர்கள், அடிக்கடி சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் உண்டாகும் தொற்று நோய் உடற்காயங்கள் மெதுவாக ஆறுவது மற்றும் உள்ளங்கை அல்லது பாதங்களில் மரத்துப்போதல் நீரிழிவு நோயின் அறிகுறிகள்.
மேலும் முற்றிய நிலையில் இந்நோயால் பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு உண்டாகும்.

நமது முன்னோர்கள் சொன்னபடி முறையான உணவுப்பழக்கத்தையும், சிறு சிறு உடல் உழைப்புகளையும் செய்தாலே போதுமானது..ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கையாள்வதாலும் நோய் பற்றிய விழிப்புணர்வாலும், முறையான உணவு, யோகா, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை வராமல் நிச்சயமாகத் தடுக்கவும் முடியும்.

உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும். எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இந்நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் வந்து விட்டால் அதனை அக்குபஞ்சர் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும்..தன்னைத்தானே உடலை பாதுகாத்துக் கொள்ளவும், உடலின் இயல்பான தன்மையைத் தூண்டி விட அக்குபஞ்சர் துணைப் புரியும். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை, மற்றும் நோய் முற்றுவது ஆகியவை முறையான அக்குபஞ்சர் சிகிச்சையால் நோயும், நோயின் அறிகுறிகளும் வேகமாகக் குறைந்து விடும். மன அழுத்தம் வேகமாகக் குறைவதால் இன்சுலின் நன்கு வேலை செய்வதோடு, மேலும் அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகளும் குறைவதால் இன்சுலின் செயல்பாடு சீராகும்.

படத்தில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் 3 நிமிட நேரம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒரு நாளில் மூன்று முறை அழுத்தம் கொடுத்து வர வேண்டும். (எளிய முறையில் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் சில குறிப்புகள் மட்டுமே இங்கு கூறப்பட்டுள்ளது) இப்படி அழுத்தம் கொடுத்துக் கொண்டும், சிறுதான்யங்களை உணவில் சேர்த்து உணவு முறையை சீராக்கி, பின் சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்தால் நீங்களே உங்களின் உடலின் மாற்றத்தை உணர முடியும். மேலும் முழுவதும் குணமாக முறையான அக்குபஞ்சர் மருத்துவத்தை மேற்கொண்டு வந்தால் நிச்சயமாக பூரணமாக குணமாகலாம்.

தினமும் நான்கைந்து வேப்பிலை சாப்பிடுவது இன்சுலின் சுரப்பதை அதிகமாக்கும்.

முறையான உணவு, தினமும் எளிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஆசனம் செய்து வந்தால் எந்த நோயும் நம்மை அண்டாமல், நோயற்ற வாழ்வு வாழலாம். அக்குபஞ்சர் மற்றும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே நீரிழிவு நோயின் தாக்கத்திலிருந்து 100% மீண்டு வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக