புதன், 24 ஜூலை, 2013

மலசிக்கல் (Constibation)


பகவத்கீதையில் மனித குணங்களை சத்துவ குணம், இரசோ குணம், தமோ குணம் என் பிரித்து கூறி ஒவ்வொரு குணத்திற்கும் ஒவ்வொரு வகையான உணவுகளையும் கூறி , அவ்வகை உணவுகளை  உட்கொண்டால் அந்தந்த குணத்தையும் அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது... சத்துவ குணம்.. மிக உயர்வான குணம்...  உயர்நிலை அடைய விரும்புவர்கள் சத்துவ குணம் தரும் உணவுகளை மாத்திரம் உண்ண வேண்டும் என கூறுகின்றன....

“காலை மலமொடு, கடும்பகல் பசி, நிசிவேலை நித்திரை பிழைத்தும்” என மாணிக்கவாசகனார் உரைக்கிறார்....
தூங்கி எழுந்ததும் கால் மணி நேரத்திற்குள் எந்த தொந்தரவும் இல்லாமல் மலம் கழிக்க வேண்டும்... அப்படி இல்லாமல்..ஒரு மணி நேரம் சென்ற பிறகு மலம் கழிப்பவர்கள், பத்து நிமிஷம் மலங்கழிக்க உட்கார்ந்து இருப்பவர்கள், காலையில் ஒரு முறை மலங்கழித்து காபி, காலை உணவு உண்டவுடன் மலம் கழிப்பவர்கள் ஆகியோர் மலச்சிக்கல் உடையவர்கள்.... காலையில் போகாமல் மாலையில் மலங்கழிப்போர் மிகுதியான மலசிக்கல் உடையவர்கள்.....
காலையில் போய்விட்டு மாலையிலும் போகலாம் ...போகாமலும் இருக்கலாம் ... இப்படி இருந்தால் மலசிக்கல் இல்லை.
அதிகமான மலசிக்கல் உள்ளவர்கள் பொதுவாக மல்லாந்து தான் படுப்பது எளிதாய் இருக்கும் என்பார்கள்.... அவர்களால் ஒருக்களித்து படுக்கவே முடியாது. அதிகமாக உண்டுவிட்டு படுப்பவர்களால் மல்லாந்து தான் படுக்க முடியும்...
இரவு உணவு முடித்தவுடன் படுக்க சென்றால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது...உண்ட உணவு பாதி செரித்த பிறகே படுக்க செல்ல வேண்டும்....இரவு உணவு முடிந்த வரை 7 மணிக்குள் முடிக்க வேண்டும்..இயலாதவர்கள் 8 மணிக்குள்ளாக முடித்து கொள்ள வேண்டும்... இரவு உணவு முடிந்த வரை பழங்களை உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தூக்க குறைவினாலும் மலசிக்கல் வரும். இச்சிக்கல் உள்ளவர்கள் அதிகமாக டீ, காபி குடிக்க கூடாது..சிகரட் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும்...
யோகநூல்களில் பச்சிமோத்தாசனம்(மிருத்யுஞ்சய ஆசனம்) என்ற ஆசனத்தை தினசரி தொடர்ந்து செய்துவந்தால்  மலசிக்கல் வரவே வராது...நோய்களும் அண்டாது...
பத்து நாட்களுக்கு அரக்கீரையை சமைத்து உணவோடு உண்டு வந்தால் மலசிக்கல் தீரும். சாதம் அளவுக்கு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும். (சாம்பார், ரசம், மோர் முதலியன தவிர்க்க வேண்டும்). பேயன் வாழைப்பழம் தினம் எடுத்து கொள்ளலாம்....அரக்கீரை கிடைக்கவில்லை என்றால் கலவைக்கீரை (அ) மிளகு, சீரகம், உப்பு சேர்த்து மூன்றையும் பொடி செய்து சூடாக இருக்கும் சாதத்தில் சிறிது நெய் ஊற்றி கலந்து உண்ண வேண்டும்... மலசிக்கலை நீக்க நிலையான வழி கடுக்காயை எந்த வகையிலும் உபயோகப்படுத்தலாம்...
இளைஞர் முதல் முதியவர் வரை இடப்பக்கம் ஒருக்களித்து தான் படுக்க வேண்டும்....நம் வலக்கை கீழிருக்க ஒருக்களித்து படுத்தால் நம் வயிற்றின் வலப்பக்கம் இருக்கும் பித்தப்பை வயிற்றின் கனத்தால் அழுத்தப்பட்டு பித்தநீர் குறைவாக சுரக்கும்...அதனால் சீரணம் குறைவாகும்... ஆங்கில மருத்துவரும் கூட அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களை இடப்பக்கம் ஒருக்களித்து தான் படுக்க சொல்கிறாகள்... இடக்கை கீழிருக்க ஒருக்களித்து படுத்தால் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்...
மலசிக்கல் உடல், மனம் இரண்டையும் கெடுத்து, நோயையும் தரும்...இச்சிக்கல் உள்ளவர்கள் ஒழுக்ககேடு மற்றும் பிறருக்கு தீங்கு விளைவிப்பவராகவும், காம உணர்ச்சி அதிகமாக கொண்டவராகவும் இருப்பர்...
நாட்பட்ட மலசிக்கல் உள்ளவர்கள் மனஉளைச்சல்(depression) , நீரிழிவு(Diabetes), மூலம் (Piles), கட்டிகள் (Tumor) என பல கொடிய வியாதிகளால் பாதிக்கப்படுகின்றனர்.....
வயிறுக்கு சாப்பாடு கிடைக்காமல் கூட பத்து நாட்கள் வரை தண்ணீரை குடித்து உயிர் வாழலாம்.. ஆனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றாமல் விட்டால் மூன்று நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாது.. எந்த ஒரு உடம்பில் இருந்து கழிவுகள் சிக்கலில்லாமல் வெளியேற்றப்படுகிறதோ அந்த உடலுக்கு நோய்கள் வரும் வாய்ப்புகள் பாதியாக குறையும்....
மலச்சிக்கலை மருந்து மாத்திரைகள் இன்றி அக்குபஞ்சர் மருத்துவத்தில் முற்றிலும் குணமாக்கலாம்...

செவ்வாய், 23 ஜூலை, 2013

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதே இப்போது ஒரு பெரிய கவுரவமாக கருதுகிறார்கள்...அந்த வியாதி பற்றி தெரிந்தும் அதிலிருந்து மீண்டு வரமால் மேலும் மேலும் மருந்து , மாத்திரைகள் என்று மட்டுமில்லாமல் மாவு சத்துக்கள் அதிகமாக உள்ள உணவை உட்கொண்டு எண்ணெய்சட்டிக்கு பயந்து அடுப்பிலேயே விழுவது போல... ஒரு வியாதியைக் குறைக்கிறேன் என்று பல வியாதிகளை அவர்களே உருவாக்கி கொள்கிறார்கள்....
நம் சமையல் அறையே ஒரு மூலிகைப்பண்ணை....ஆனால் அதை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை...நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சர்க்கரை வியாதியை எப்படி விரட்டி அடிப்பது என்பதை பார்க்காலம்...
கீழ் உள்ள முறைப்படி உணவை மேற்கொண்டால் எத்தனை வருஷம், எவ்வளவு அதிக அளவில் சர்க்கரை நோய் இருந்தாலும் இருபது நாட்களில் இருந்து ஒரு மாதத்திற்குள் நோயின் தாக்கத்திலிருந்து வெளி வருவது உறுதி...அதோடு உணவு முறையை மாற்றாமல் பின்பற்றி வந்தால் திரும்ப நம்மிடம் அந்த நோய் வரவே வராது என அறுதியிட்டும் கூறலாம்....
1. காலையில் எழுந்ததும் ஆயில் புல்லிங் (நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்) 15 நிமிடங்கள் செய்து விட்டு, ஒரு நெல்லிக்காய், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஜூஸ் எடுத்து குடிக்க வேண்டும்...
2. ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து அதை காலையில் மென்று சாப்பிட்டு அந்த நீரை குடிக்க வேண்டும். (வயதானவர்கள் வெந்தயம் முளை கட்டி காய வைத்து பவுடராக்கி வைத்து கொண்டு 1 ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம்.)
3. சிறுகுறிஞ்சான் பொடி, சீந்தில்கொடி பொடி, நாவல் பொடி, நெல்லி பொடி, ஆவாரம்பூ பொடி இதை முறையே 5௦ கிராம் அளவு வாங்கி கலந்து வைத்துக்கொண்டு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
4. காலை உணவாக ஓட்ஸ், சிவப்பு அவல், கோதுமை ரவை, மக்காச்சோள ரவை, கம்பு இட்லி (கம்பு, வரகரிசி, கைக்குத்தல் அரிசி, கருப்பு உளுந்து ஆகியவற்றை 4 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்) அரிசி மாவால் ஆன இட்லி, தோசையை தவிர்த்து மேற்சொன்னவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
5. காலை 11 மணி, மாலை 3 மணி இந்த நேரங்களில் (பசித்தால் மட்டுமே) மா, பலா, வாழை தவிர்த்து கொய்யா, மாதுளை, அன்னாசி, பப்பாளி, வெள்ளரி, சாத்துக்குடி, நாவல் என பழங்களையும், முளை கட்டிய தானியங்களான சோளம், காராமணி, நிலக்கடலை, கொள்ளு, கருப்பு சுண்டல், பச்சைப்பயறு என பழங்களையும், முளை கட்டிய தானிய வகைகளையும் அளவோடு உண்ணலாம். பால் கலந்த காபி, டீக்கு பதில் சுக்கு காபி, கிரீன் டீ குடிக்கலாம்.
6. மதிய உணவாக ஒரு கப் சாதம், பிஞ்சு அவரை, பீர்க்கங்காய், வாழைக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், நூல்கோல், வாழைப்பூ, கீரைவைகைகள் இதில் செய்யப்பட குழம்பு, பொரியல், ரசம், மோர் என்று இருக்க வேண்டும்.
7. இரவு உணவாக கோதுமை கலவை மாவில் (கோதுமை, கொள்ளு, பச்சைபயறு, கருப்புச்சுண்டல் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைத்து காய வைத்து அரைத்த மாவு) செய்த தோசை (அ) சப்பாத்தி இரண்டு சாப்பிடலாம்..
8. தாகம் எடுக்கும் போது எல்லாம் சீரகம் (அ) வெந்தய நீர் அருந்தலாம்..
9. எந்த காரணத்தைக் கொண்டும் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சத்துணவு மாவோ (அ) குந்தைகளுக்கு என வீட்டில் அரைக்கும் சத்து மாவிலோ பால் கலந்து கஞ்சியாக குடிக்கவே கூடாது. பால், சர்க்கரை, மைதா உணவு அறவே கூடாது. இதனால் நோயின் தன்மை அதிகமாகுமே தவிர குறையாது....
வாழும் காலம் ஆரோக்கியம் எத்தனை முக்கியம் என்பதை வியாதியில் வாழ்ந்தவர்களுக்குத் தான் புரியும். நம் வாழ்க்கை முறையை சிறிது மாற்றி அமைத்தால் சர்க்கரை என்னும் இந்த நோய் நம்மை விட்டு இருபது நாட்களில் அறவே ஒழியும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.

குடல் இறக்கம் (ஹெர்னியா)

Photo: குடல் இறக்கம் (ஹெர்னியா) 
-----------------------------------------------
உடலில் உள்ள தேவை இல்லாத இடங்களில் உறுப்பின் ஒரு பகுதி (அ) திசுக்கள் முன்னால் தள்ளப்படுவதே குடல் இறக்கம் .....

ஹயாடஸ் ஹெர்னியா (Hiatus Hernia) என்பது மார்பு, வயிறு பாகத்திற்கு இடையேயுள்ள தடித்த தசைச்சுவரின் (Diaphragm) இடையில் உணவுக்குழாய் வழியாக அடி வயிற்றுப்பகுதி தள்ளப்படுவது ஆகும்....... 

அடி வயிற்று உறுப்புகள், முன் பக்கத்தில் தொடை அடிவயிறுடன் சேரும் பாகத்தில் (Groin) தள்ளப்படுவது இன்கியூனால் ஹெர்னியா (Inguinal Hernia) எனப்படும் ....
அடிக்கடி அதிகமான பளு தூக்குபவர்கள், பேதி, மலசிக்கல், அதிகபடியான வயிறு பகுதியில் தசை, சத்தற்ற உணவு, சிகரட், இவைகள் எல்லாம் தசைகளை வலுவிழக்க வைத்து ஹெர்னியா வர வழி வகுக்கிறது..

பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்கு பின்னால் இது வரும் வாய்ப்புகள் அதிகம்... தொடர்ந்த இருமல், கனமான பொருட்களை தூக்குதல் ஆகியவற்றால் பெண்களுக்கு இது வர வாய்ப்பு உள்ளது..

எளிதில் நோய்வாய்ப்படுபவர்கள் முன்பக்கம் குனிந்து அதிக கனமான பொருள்கள் தூக்கக்கூடாது .....அப்படி தூக்குவதன் மூலம் அவர்களுக்கு ஹெர்னியா வரும் வாய்ப்புகள் அதிகம்.... மேலும் , மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அழுத்தமான அசைவுகள் ஏற்படுத்த கூடாது ... 

ஆண்களுக்கு உடலில் வளைவு பகுதியானது அடிவயிற்றின் நுழைவாயில் (Groin) தள்ளப்படுகிறது.... இந்த பாதை வழியே தான் ஆண்களுக்கு விதை கோளங்கள் விதைப்பைக்குள் செலுத்தப்படுகிறது .... ஆண்களுக்கு குறிப்பாக விதைப்பையை சுற்றி லேசான வலி, வீக்கம் ஆகிய அறிகுறிகள் தென்படும்..
வயிற்று பகுதியில் அதிகப்படியான தசைக்கோளம் லேசாக வெளியே தள்ளிக்கொண்டு வரும் போதே இதை உணரலாம் அந்த பகுதியில் வலி இருக்கும்...
நோயாளிக்கு வலி, வாந்தி முதலிய அறிகுறிகள் இருந்தால் நோய் தீவிரமடைந்து இருக்கும்...

இதனை ஆரம்ப காலத்திலேயே அக்குபஞ்சர் முறையில் மருந்து எதுவும் உட்கொள்ளாமலேயே குணப்படுத்தலாம்.. ஆரம்ப காலத்திலேயே அறிகுறிகள் மூலம் உணர்ந்து தகுந்த பயிற்சி பெற்ற அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி அவரின் நேரடி உதவி மூலம் முழு குணமடையலாம்...

ஒற்றை தலைவலி (Migraine)

மந்தம், மலசிக்கல்.....

புகைப்பதை மன உறுதியுடன் நிறுத்துங்கள்

பெருங்குடல் (Large Intestine) காற்று மூலகம்

Photo: பெருங்குடல் (Large Intestine) காற்று மூலகம்
------------------------------------------------------------

நெருப்பு(Fire)மூலகம் மெட்டல்(Air) மூலகத்தை கட்டுபடுத்தும்...உடலின் அதிகபடியான சூடு(Heat) மற்றும் இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும்  பெருங்குடலை (Large Intestine) சார்ந்தது... 

காற்று, வெப்பம், குளிர்ச்சி, வறட்சி போன்றவற்றால் நம் உடலில் உண்டாகும் அதிகபடியான சூட்டை சமன் படுத்தும் ஒரே புள்ளி நம் பெருங்குடலில் தான் உள்ளது....

வலியுடன் கூடிய கண் சிவத்தல், எரிச்சல், கண்புரை மற்றும் வீக்கம், கண், ஈறு, தொண்டையில் ஏற்படும் வீக்கங்கள், பல் சார்ந்த பிரச்சனைகள், செவிட்டுதன்மை, காது அடைப்புடன் கூடிய வலி, தலைவலி, மூக்கில் இரதம் வடிதல்.......

பாக்டிரியா, வைரஸால் உண்டாகும் காய்ச்சல் , மனகுழப்பத்தால் உண்டாகும் காய்ச்சல், நெஞ்சில் எப்போதும் ஒரு வேதனையோடும், வருத்ததோடும் இருப்பதால் உண்டாகும் அதிகபடியான காய்ச்சல் ,நெஞ்சுவலியுடன் மூச்சு விட சிரமத்துடன் கூடிய காய்ச்சல்.......

எரிச்சல், சொறி ,படை, எக்சிமா போன்ற எல்லாவிதமான தோல்வியதிகளுக்கும்.....
கைகளை மேலே தூக்கமுடியாத அளவு மணிக்கட்டு, மூட்டுகளில்  வலி, முதுகு வலி, இடுப்பு வலி.....
எப்போதும் உடல் வலியும்,சோர்வும், சோம்பேறித்தனமும், மனச்சோர்வு (Hyper or hypotension)  இத்தனை வியாதிகளையும்  அக்குபஞ்சர் முறைப்படி ஒரே  புள்ளியில் பெருங்குடலின் தடைபட்ட இயக்கத்தை தூண்டி ஒழுங்குப்படுத்தி சீர் செய்வதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் .... 

மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு  அதனால் உண்டாகும் பக்க விளைவுகளுடன் வாழ்க்கை முழுவதும் போராட்டத்துடனும், கவலையுடனும் கழிக்காமல்........ அக்குபஞ்சர் முறைப்படி நம் உடலை சீராக வைத்து அமைதி, ஆரோக்கியம் என்றால் நமக்கு  வாழும் காலமே  மகிழ்ச்சி தானே ......

ஆயில் புல்லிங் (Oil Pulling)

Photo: ஆயில் புல்லிங் (Oil Pulling)
---------------------------------- 
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி (அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய் எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்..... 


ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் ..... கண் காது மூக்கு சம்பந்தமான மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.
நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த அழுத்தம், இதயநோய்கள், பார்க்கின்சன், கல்லீரல், நோய், ரத்தபுற்று (அ) எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தந்துள்ளனர்  நம் முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக எளிமையான முறையில் குணமாக்கியும் இருக்கிறார்கள் .....
தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர் .....
நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம் குறையும்.....

எட்டு நடை பயிற்சி


சூரியகலை-சந்திரகலை

மனச்சோர்வு (மெலன்கோலியா ) Depression (Melancholia)

சிறுநீரகங்கள்

Photo: சிறுநீரகங்கள்
மனித உடலில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகங்கள் (கிட்னி). நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று. உலகின் மிகச்சிறந்த , மிக நுண்ணிய சுத்திகரிப்பு ஆலை என்றே சொல்லலாம்.. கருவில் நான்காவது மாதத்திலிருந்து துவங்கி மனிதனின் இறுதி மூச்சு வரை இடைவிடாது தொடர்ந்து இயங்குகின்ற உறுப்பு. 11–14 cm நீளத்திலும் , 6 cm அகலமும் மற்றும் 4 cm தடிமனும் கொண்ட இவ்வுறுப்பு இரத்தத்தை சுத்தம் செய்து அதிலிருக்கும் கழிவுகளை பிரித்தெடுத்து கழிவாக வெளியேற்றுகிறது.
இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது.உடலில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீராக வெளியேற்றுவது மட்டுமே சிறுநீரகங்களின் வேலை இல்லை.. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும், உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும், இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும், அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான். உடலில் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய முழு காரணியே நம் சிறுநீரகங்கள் தான்.....
நெப்ஃரான்களால் ஆனது நமது சிறுநீரகம்...இவைதான் ரத்தத்தை சுத்தம் செய்யும்.. இவை எப்போது பழுதடைந்து ரத்தம் சுத்திகரிக்கும் வேலையை சரிவர செய்ய இயலாமல் போகிறதோ அப்போது செயலிழக்க ஆரம்பிக்கும்.....
உணவு பழக்கம் தான் சிறுநீரகக் கோளாறுக்கு முக்கிய காரணம் . பாஸ்ட் புட் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு இரண்டும் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கிறது. இந்த நிலைக்கு செல்லாமல் இருக்க சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
நீண்டநாள் இரத்தக்கொதிப்பு, நீண்டநாள் நீரிழிவு, பரம்பரை குடும்பவழி மரபணுக்கள் பாதிப்பு, நாட்பட்ட சிறுநீர்குழாய் அடைப்பு, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது போன்ற , இரசாயன பொருட்களையும் தொடர்ந்து சாப்பிடுவது, சிறுநீரக இரத்தக்குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படுவது நாளடைவில் வரும் சிறுநீரக செயலிழப்பாகும்.
சிறுநீரக செயல்திறன் குறைகின்ற போது நமது உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்களான யூரியா, கிரியாடினின் மற்றும் பிற தாதுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து விடுவதால், சிறுநீர் சரிவர வெளியேற முடியாத நிலையில் மூச்சுத்திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம்,கைநடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல்வறண்டு அரிப்பு, இரத்தசோகை ஏற்படுதல் இதன் அறிகுறிகள்..............இதனால் சிறுநீரகத்தை தொடர்ந்து இதயம், மூளை, நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
நம் உயிர் சக்தியான ஜீவாதார மூலச்சக்தி இருப்பதே சிறுநீரகங்களில் தான் ....ஆனால் நம்மில் பெரும்பலானோர் வரும் முன் காப்பதை விட வந்த பின் பார்த்து கொள்ளலாம் என்பதிலே கண்ணும் கருத்துமாய் இருப்பர் .....
இந்த மாதிரி பிரச்சனைகளில் இருப்போர் பெரும்பாலும் பயத்தினாலே இறந்து விடுவர்......காரணம் ...இதற்கு சிகிச்சையே இல்லை, இதற்கு பிறகு வாழ்க்கையே இல்லை என்று மிரட்டியே கொன்று விடுவர்கள் நம்மவர்கள்
எல்லோருக்குமே சிறுநீரகங்களின் பாதிப்பு ஒரே காரணத்தினால் உண்டாவது இல்லை.....அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சிறுநீரக பாதிப்பு உள்ள மற்ற நோயாளிகளிடம் கேட்டு அதன்படி நடக்காமல் உடலின் பிரச்சனைக்கு தகுந்தாற்போல நம்மை நாமே முறை படுத்தி கொள்ளலாம் ... எதற்குமே ஒரு மாற்று உண்டு...எந்த ஒரு விளைவுக்கும் ஒரு காரண காரியமும் , அதற்கு ஒரு மூலகாரணமும் இருக்கும் ...அதை தேடி கலைந்தால் எல்லாமும் கைகூடும் ...முடியாதது எதுவுமே இல்லை......
அனைத்து உறுப்புகளின் பாதிப்புகளில் இருந்து வெளிவரவும், சிறுநீரகங்களை மறுபடியும் நல்ல நிலையில் இயங்க வைக்கவும் முடியும் .....

அக்குபஞ்சரில் தகுந்த புள்ளிகளை தூண்டுவதன் மூலமாகவும், உணவு கட்டுப்பாடுடனும், பயத்தை அறவே நீக்கிவிட்டு மன அமைதியுடன் இருந்தால் மொத்த பிரச்சனைகளில் இருந்தும் வெளிவருவதுடன் சிறுநீரகங்களையும் மறுபடியும் தன் நிலைக்கு கொண்டு வரலாம் .....

ஹைப்பர் கால்கேமியா (இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாவது)

ஆஸ்டியோ ஆர்திரைடிஸ் (Osteoarthritis)

ஹைப்போ தைராய்டிஸம் ( Hypothyroid )

கர்ப்பப்பை ஃபைபிராய்டு (Uterine Fibroids)

வயிற்றுபோக்கு நல்லது


பொதுவாக உணவு ஒவ்வாமை மற்றும் கிருமி தொற்று காரணமாகவோ வயிற்றுப்போக்கு,வாந்தி ஏற்பட்டால் பயந்து போய் மருத்துவரிடம் ஓடுவோம். 
நம்முடைய உடல் நாம் உண்ட ஏதோ ஒரு வகை உணவை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் அது பேதியாகவோ அல்லது வாந்தியாகவோ வெளியே தள்ளுகிறது. தேவை இல்லாமல் ஒரு நொடி கூட தங்கக் கூடாத கழிவைத்தான் மேற்கண்ட வகைகளில் உடல் வெளியேற்றுகிறது. ஆனால் இது தெரியாமல் பயந்து கழிவை உள்ளேயே தங்க வைக்க நாம் மாத்திரையை விழுங்கி அதை உடலுக்குள்ளேயே இருக்குமாறு செய்து விடுகிறோம்.

இந்த கழிவுகள் தான் பிற்காலத்தில் அவரவர் உடலுக்குள் பெரிய பாதிப்பை கொடுக்கும் மிகப் பெரிய காரணியாக அமைகிறது . எனவே வயிற்றுபோக்கு, வாந்தி என்றால் அதை தடுக்க மருந்து மாத்திரை பின்னால் அலைய வேண்டாம் .

கழிவு என்று தெரிந்து நம் உடலே அதை வெளியே தள்ளும் சூட்சுமத்தை அறிந்திருக்கிறது. அதை புரிந்து கொள்ளாமல் வெளியேறவிடாமல் தடுத்து இல்லாத கொடிய நோய்களை ஏன் வர வைத்துக்கொள்ள வேண்டும் ?

பயம் அறவே கூடாது



சில மனிதர்கள் எப்போதும் பயமின்றி இருப்பார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குவார்கள் . விவேகானந்தர் எப்போதும் பயமின்றி இருந்தார். தன்னை துரத்திய குரங்குகளையும் அவர் எதிர்த்து நிற்க அக்குரங்குகள் அவருக்கு பயந்து ஓடின. நிமிர்ந்து நில் துணிந்து செல் என்பது அவரின் கொள்கையாக இருந்தது. வள்ளலாரும் தனது திருவருட்பாவில் மனித உடலுக்கு தேவையான உணவு, உறக்கம், போன்றவைகளின் அளவை குறிப்பிடும் போது பயம் என்பது மட்டும் துளியும் கூடாது என்று வசன பாகத்தில் கூறியுள்ளார்.

ஆகாரம்..1/2 பங்கு..
உறக்கம் - 8ல் 1பங்கு
உறவு (மைதுனம்) - 16ல் 1பங்கு
பயம் - பூஜ்யம்

என்று குறிப்பிடும் வள்ளலார் வயிற்றில் அரைபங்கு அளவு மட்டுமே சாப்பிட்டு கால் பங்கு நீரும் கால் பங்கு காலியாகவும் இருக்கும்படி கூறுகிறார் .தூக்கம் ஒரு நாளின் மூன்று மணி நேரம் மட்டுமே போதும் என்றும் தாம்பத்தியம் மாதத்தில் இரண்டு நாட்கள் போதும் என்று குறிப்பிடும் அவர் பயம் என்பது மட்டும் மனிதனுக்கு அறவே கூடாது என்கிறார்.

பயம் மனதில் குடி கொண்டால் உடலின் ஆரோக்கியம் மட்டுமல்ல நம் வாழ்கையின் மொத்த ஆதாரமும் கெட்டுவிடும். பயம் பற்றிய சிந்தனை இரண்டு துறவிகளுக்கும் இல்லாத காரணத்தால்தான் அவர்கள் இறந்தும் இன்னும் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.
வாழ்கையில் முன்னேற வேண்டும் என்பது எல்லோருக்குள்ளும் ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியத்துக்காக சிலர் தூங்காமல் கூட உழைப்பர். தூக்கமின்மையால் டென்ஷன், எரிச்சல் ,தேவை இல்லாத கவலை அதிகப்படியான சோர்வு எல்லாம் வரும். இதெல்லாம் வந்தால் ஓரிரு நாளில் சரி பண்ணிவிடலாம். ஆனால் மலட்டு தன்மை வந்தால் ? வாழ்கையில் அர்த்தமே இல்லாமல் போய் விடுமே . மேற்கண்ட பிரச்னைகளின் காரணமாகக் கூட ஆண் மலட்டு தன்மை ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உண்டாகின்றன. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் மனதை அமைதி படுத்தி வாழும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்

உடல் மாற்றங்கள் உறுப்புகளுக்கு ஏற்ப மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

தட்ப வெப்ப நிலைகள் மாற்றம் மற்றும் சுற்று சூழல் மாற்றம் மனித உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் ... இந்த உடல் மாற்றங்கள் உறுப்புகளுக்கு ஏற்ப மனநிலையில் வெளிப்படும் ... இந்த மனநிலையை நிச்சயமாய் நாம் இன்னொருவர் மீது வெளிப்படுத்துவோம் ... அப்படியாக வெளிப்படுத்தும் மனோ நிலையை சற்று நேரம் நாமே கூர்ந்து கவனித்தோமானால் அது எந்த உறுப்பின் செயல் திறனில் குறைபாட்டை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறியும் திறன் பெறலாம் ... இந்த மாற்றம் அந்த உறுப்புகளின் செயல்படும் திறனில் குறைபாடு ஏற்பட தொடங்கி இருப்பதற்கான அறிகுறிகள். ..

கல்லீரல் (கோபம் )

எப்போதும் யார்மீதாவது கோபம் ... அல்லது எதன் மீதாவது கோபம் ... வீட்டில் இருப்பவர்களுடன்.. சாலையில் வாகனம் ஓட்டுபவர் மீது ... விதிகளுக்கு முரணாக செயல் படுபவர் மீது .. ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் மீது ... இப்படி நமக்கு நேரடியாய் தொடர்பு உள்ளவர்கள்.. நேரடியாய் தொடர்பில்லாதவர்கள் எல்லோர் மீதும் காரணமில்லாமல் கோபம் வந்தால் .. நம்முடைய கல்லீரல் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி......

இரைப்பை ( இரக்கம் )

எல்லோரையும் பார்த்து இரக்கப்பட தோன்றினால் அது நல்ல விஷயம் தான் ... ஆனால் அதே நேரம் இரைப்பை பாதிப்பின் அறிகுறியே இரக்க மன நிலையாக வெளிப்படும் ..

நுரையீரல் (துன்பம் )

எந்த நேரத்திலும் துன்பத்தில் உழல்வதாக ... நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று கவலை கொள்வது நுரையீரல் பாதிப்பின் அறிகுறி ..

இருதயம் ( அதீத சந்தோஷம் )

நான் எல்லாவற்றையும் சாதிப்பவனாக்கும் ... என்னால் செய்ய முடியாதது எதுவும் இல்லை .. பாருங்களேன் .. நான் என்னென்ன செய்திருக்கிறேன் ... எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள் ... என்று வறட்டு பெருமையும் கர்வமும் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாய் நினைத்துக்கொண்டால் .. அது நல்ல விஷயம் இல்லை .. உங்கள் இருதய செயலபாட்டில் குறை இருப்பதற்கான அறிகுறி .....

சிறு நீரகங்கள் ( பயம் )

நடக்கும் போது கால் இடறி விழுந்துவிடுவோமோ .... நாற்காலியில் உட்காரும் போது அதன் கால் உடைந்து விடுமோ .. சாலையில் வரும் ஏதாவது ஒரு வாகனம் நம் மீது மோதி விடுமோ ... நம்மை யாரும் ஏமாற்றி விடுவார்களோ .. என்று அதீத கற்பனையில் பயந்துகொண்டே இருப்பது முன்னெச்சரிக்கை இல்லை .... உங்கள் சிறு நீரகங்கள் தன்னுடைய இயல்பான செயல் பாட்டிலிருந்து சற்றே குறைய தொடங்கி இருக்கிறது என்பதற்கான அறிகுறி ...

அமைதியாக நமது மன நிலையை நாமே கவனித்தால் உறுப்புகளின் குறைபாடுகளை தொடக்க நிலையிலேயே சரி செய்து மீண்டும் நல்ல நிலையிலேயே செயல் பட வைக்கலாம்...

ஆகவே நம்மை நாமே கூர்ந்து கவனித்தால் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் !!!

12 முக்கிய உறுப்புகளில் தோன்றும் நோயின் அறிகுறிகள்

12 முக்கிய உறுப்புகளில் தேவைக்கு குறைவாகவோ , அதிகமாகவோ சக்தி பெறப்பட்டால் உடலில் தோன்றும் நோயின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

இருதயம் ( Heart) 

படபடப்பு, கைகால்களில் தளர்ச்சி, சூடான உள்ளங்கைகள் , மூக்கில் வீக்கம், தூக்கமின்மை, அதிக வியர்வை, சிவந்த தோற்றம்.

சிறுகுடல் ( Small Intestine)

தலைவலி, கால்களில் ரத்தஓட்ட குறைவு, வயிறு பெருத்தல், மலச்சிக்கல், அஜீரணம், காதில் இரைச்சல், எப்போதும் குளிர்வது போன்று இருத்தல்.
இதயஉறை (Pericardium)
படபடப்பு, குளிர்ந்த வியர்வை மிக்க கைகள், ஞாபகமறதி, உயரமாக இருப்பவற்றை பார்த்து பயம், அடிக்கடி கனவு காணுதல், தூக்கமின்மை, இதயவலி.

மூவெப்பமண்டலம் (Triple warmer)

காதில் இரைச்சல், காது மந்தம், மயக்கம், செரிமானமின்மை, மூச்சு கோளாறு, சிறுநீர் தொல்லைகள், எப்போதும் முன் எச்சரிகையாக செயல்படுவது போன்று எண்ணம்.

மண்ணீரல் (Spleen)

வயிற்றுப்போக்கு, மாதவிடாய் குறைபாடுகள், நீர்க்கோவை, அதிக எடை, இனிப்பின் மீது ஆர்வம், பாதங்களில் குளிர்ச்சி, அஜீரண கோளாறு,தொடர்ந்து மயக்க உணர்வு.

இரைப்பை (Stomach)

வாயில் கெட்ட நீர் ஊறுதல், உதடுகளின் வறட்சி, மார்பக அழற்சி, உணவின்மீது அதிக நாட்டம் (அ) உணவு உண்ண இயலாமை, கைகால் வீக்கம், அடிவயறு உப்பசம், மஞ்சளான தோற்றம்,

நுரையீரல் (Lungs)

தோள்பட்டைவலி, மூச்சுவாங்குதல், சளி, இருமல், கைகால் சில்லிடுதல், தோலில் வறட்சி, சக்தியின்மை, நடுக்கம், அசதி, சூடான உள்ளங்கைகள்.

பெருங்குடல் (Large Intestine)

தோள்பட்டை சரிவு, மலசிக்கல், வயிற்றுப்போக்கு, நமைச்சல், தலைவலி, பல்வலி, தொண்டைபுண், சீதளம், அடிக்கடி சளி பிடித்தல்.

சிறுநீரகங்கள் (Kidney)

மூச்சுத்தொல்லைகள், தொண்டைவீக்கம், மூட்டுவலிகள், பாலியல் தொல்லைகள், அசதி, களைப்பு, தளர்ச்சி, மனக்கவலை, இரவில் வியர்த்தல்.

சிறுநீர்ப்பை (Urinary Bladder)

தலைவலி, கழுத்து விரைப்பு, முதுகுவலி, நடுக்கம், கவலை, ஆவல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கொட்டாவி, கை நடுக்கம்,

கல்லீரல் (Lever)

பசியின்மை, எரிச்சல், கோபம், கண்புரை, கால்கள் வீக்கம், கெட்ட நாற்றத்துடன் சிறுநீர் போதல், வயிறு உப்பசம், கல்லீரல் அமைந்துள்ள வலது வயிறு பாகத்தில் வலி.

பித்தப்பை (Gall Bladder)

தலைவலி, கோபம், ஒவ்வாமை (அலர்ஜி ), கண்குறைபாடுகள், உணவு ஏற்காமை, வயிற்றுபோக்கு (அ ) மலச்சிக்கல், லேசாக அடிபட்டால் கூட சிவந்து போதல்.

அக்குபஞ்சர் புள்ளிகள்

பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக இயங்கவில்லை என்றால் உடலில் பல நோய்கள் தோன்றுகின்றன.பஞ்சபூதங்களான நெருப்பு, நிலம், காற்று, நீர் மரம் என ஐந்து மூலகங்களும் நம உடலில் எப்படி பரவி இருக்கின்றன என்று பார்ப்போம் .

சீன அக்குபஞ்சர் தாவோவின் இயக்கத்தின்படி கரு -உரு தத்துவம் (கரு/-உட்புறம், உரு-வெளிப்புறம்) என்று அழைக்கப்படுகிறது.
சீனா கோட்பாட்டின் படி 12 பாதைகள் 15 இணைப்பு பாதைகள் 8 சிறப்பு பாதைகள் இவற்றின் மீது தான் அக்குபஞ்சர் புள்ளிகள் அமைந்துள்ளன.

நம் உடலில் முக்கியமான 12 உள்ளுறுப்புகள் உள்ளன, அவை முறையே பஞ்சபூத சக்தியோடு எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்க்கலாம்.

மூலகங்கள் (five Elements)------- தொடர்புடைய உள்ளுறுப்புகள்
1. நெருப்பு (fire) - இருதயம், சிறுகுடல் , இருதய உறை, மூவெப்ப மண்டலம்,
2.நிலம் (Earth) - மண்ணீரல் , வயிறு
3. காற்று (Metal/air) - நுரையீரல், பெருங்குடல்
4. நீர் ( Water) - சிறுநீரகம், சிறுநீர்ப்பை
5. மரம் ( wood ) - கல்லீரல், பித்தப்பை

இந்த உறுப்புகள் எப்படி பஞ்சபூதங்களின் துணையுடன் நம் உடலின் இயக்கத்திற்கு உறுதுணையாக உள்ளது என்று இனி பார்ப்போம் .

நாடிகள்

நம் உடலின் இயக்கத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் 12 உறுப்புகளையும் , அவைகள் எத்தனை புள்ளிகளுடன், எப்படி.. ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன ...... ??
உடலின் உள்ள 12 முக்கிய உறுப்புகள் ...

இருதயம், சிறுகுடல் , இருதய உறை, மூவெப்ப மண்டலம், மண்ணீரல் , வயிறு, நுரையீரல், பெருங்குடல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கல்லீரல், பித்தப்பை. 

2முக்கிய சக்தி ஓட்டப்பாதைகளிலும் இருக்கும் நாடிகளின் [Governing Vessel -(Du), conception vessel (Ren) ] எண்ணிக்கை 361.
12 முக்கிய உறுப்புகள் மற்றும் 2முக்கிய சக்தி ஓட்டப்பாதைகள் பின்வரும் அளவுகளில் இந்த நாடிகளை பெற்றிருக்கின்றது...

இருதயம் - 9
சிறுகுடல் - 19
இருதய உறை - 9
மூவெப்ப மண்டலம் - 23
மண்ணீரல் - 2
இரைப்பை- 45
நுரையீரல் - 11
பெருங்குடல் - 20
சிறுநீரகம் - 27
சிறுநீர்ப்பை - 67
கல்லீரல் - 14
பித்தப்பை - 44
Ren channel -24
Du channel - 28
மேற்கூறிய இந்த உறுப்புகளில் தேவைக்கு குறைவாகவோ , அதிகமாகவோ சக்தி பெறப் பட்டால் உடலில் பல தொல்லைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். அதனால் நம் உடலில் தோன்றும் நோயின் அறிகுறிகள் என்னவென்று அறிந்து அதிலிருந்து விடுபட்டு வாழும் காலம் இனிமையாக மாற இனி நம்மை நாமே சரி செய்து கொள்ளலாம்
மனித உடல்..

ஒரு ஆச்சர்யத்தின் மொத்த தொகுப்பு... தன்னுள் ஏற்படும் குறைபாடுகளை ஒரு அடையாளத்தின் மூலம் வெளிப்படுத்தவும்.. அதனை தனக்குத்தானே சரிசெய்துகொள்ளவும் ஆற்றல் பெற்ற அற்புத களஞ்சியம்...
தாக்கும் நோய்களுக்கு ஏற்ப உடலின் ஆங்காங்கே அமையப்பெற்ற அதிசய புள்ளிகளை கண்டறிந்து அதை தூண்டுவதன் மூலம் அனைத்து நோய்களையும் சரி செய்யும் நமது பாரம்பரிய மருத்துவ முறைதான் அக்குபஞ்சர்...

மருந்துகளின் அளவை குறித்தோ, அல்லது மருந்தே இல்லாமலோ இந்த மருத்துவமுறை கையாளப்படுவதால் பக்கவிளைவுகள் இல்லாதது என்பதற்கு நூறு சதவிகிதன் உத்திரவாதம் தரக்கூடியது...

உலகம் முழுக்க அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை போற்றப்படுகிறது... வர்மக்கலை (தொடு வர்மம்) என்ற நம் முன்னோர்கள் கண்டறிந்த இன்னொரு கலையின் மேம்பட்ட பரிணாமமே அக்குபஞ்சர்.

அங்காங்கு அமைந்த அந்த அதிசய புள்ளிகளையும் , அதனை ஒரு சிறிய ஊசியை செலுத்தியோ- அல்லது விரல்நுனியில் அழுத்தம் கொடுத்தோ தூண்டி நோயற்றவாழ்வை தரும்/பெரும் முறையையும் அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறையின் மூலம் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற பொக்கிஷத்தை எல்லோருக்கும் தெரிவிக்கும் நோக்கம் தான் இந்த பக்கம்...

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள்.. ஒரு விஷயத்தை கேட்க கேட்க , பார்க்க பார்க்க, உணர உணர அதன்மீது நமக்கும் ஆர்வமேற்பட்டு அதில் ஈடுபாடுகொண்டு கற்க தொடங்கினால் வல்லுனராகாவிடினும் கூட ஒரு விபரம் தெரிந்தவராக ஆகலாமே...

இதற்கான முறையான படிப்பை எளிய முறையில் வடிவமைத்து பல கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன... இந்த மருத்துவ முறையின் அடிப்படை அறிவை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கமே இப்போது உங்கள் முன் கணினித்திரையில் விரிந்திருக்கிறது.... இனி வரும் காலங்களில் தொடர்ந்து விரியும்...

குறிப்பு....: இத்த காயங்கள், மருத்துவம் சார்ந்த முதலுதவிகள், அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டிய அதி தீவிர நிலைகளில் அக்குபஞ்சர் பலனளிக்காது...