செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

பற்பொடி..


அந்த காலத்தில் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கருவேலங்குச்சி, உப்பு, சாம்பல் போன்ற பக்க விளைவு இல்லாத இயற்கையான பொருட்களை உபோயோகித்து பல் தேய்த்து வந்தார்கள்.... இதனால் பல் சொத்தை, வலி, சிறிய வயதிலே பற்களை இழத்தல்,வாய்துர்நாற்றம், போன்ற எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் இயற்கையான பற்களுடன்....

ஆனால் இப்போது நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட்களில் நிகோடின் அதிக அளவில் உள்ளது என்று வெளிட்டு நம்மை பீதியடைய வைத்தார்கள்....

இதிலிருந்து விடுபட ரொம்பவும் எளிமையான வழி ஒன்று உள்ளது ...முயற்சி செய்து பாருங்கள்...
வேப்பிலை – நாலு பிடி
கல் உப்பு - ஒரு பிடி

இரண்டையும் மண்சட்டியில் இட்டு வறுத்து பொடி செய்து பல் தேய்த்து வந்தால்..... வேப்பிலையும், கல் உப்பும் பல்லுக்கு வரும் பல நோய்களைத் தடுக்கும்....இருக்கும் வியாதிகளையும் போக்கும் ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக