வெள்ளி, 24 ஜூன், 2016

கரிசாலை கூந்தல் தைலம்
* * * * * * * * * * * * * * * * * * * * * *
இளைய தலைமுறையினர் முதல் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை முடி நரைப்பது, முடி கொட்டுவது போன்றவை. வெகு சாதாரணமாக வசவு வார்த்தையாகவும், எதற்கும் உதவாததாகவும் சித்தரிக்கப்பட்டாலும் உண்மையிலேயே இது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. இள வயதில் வழுக்கை ஏற்பட்டவர்களின் மன உளைச்சல் சொல்லி மாளாது.
தலையில் முடி இருந்து, அது கருப்பாகவும் இருந்து அதற்கு கலரிங் செய்பவர்களை விட நூறு மடங்கு அதிகமானோர் நரைத்த / செம்பட்டையான முடியை கருப்பாக்க நேரத்தையும்-பணத்தையும் விரயம் செய்கிறார்கள்.
எண்ணெய்யில் பொறித்த உணவு வகைகள், சாலையோர கடைகளில் சாயம் கலந்த இரசாயன உணவுப்பொருட்களை உண்ணுதல், எதற்கெடுத்தாலும் பக்கவிளைவுகள் நிறைந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி உட்கொள்ளுதல் இப்படி உணவுமுறையும், பழக்க வழக்கங்களும் மாறியதன் விளைவு முடி கொட்டுதல், வழுக்கை, புழுவெட்டு, இளநரை.
சராசரியாக இதய-சிறுநீரக நோய்களுக்கு மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையை விட இந்த முடி பிரச்சினைகளுக்காக செலவிடப்படும் தொகை பன்மடங்கு அதிகம் என்பது அனுபவ உண்மை. ஆம்...ஒருவர் ஒரு சிறிய நோய்க்காக ஒரு லட்சம் செலவிடும் நேரத்தில், பத்தாயிரம் பேர் முடி பிரச்சினைக்காக நூறு ரூபாய் செலவிடுகிறார்கள். ஆக மொத்தம் 10000X100 = 1000000 ரூபாய்.
இதனால்தான் உள்நாட்டு நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு ஷாம்பூ விற்கவும், வண்ணச்சாயம் விற்கவும் இறங்கி இருக்கிறார்கள்.
டி வி விளம்பரங்கள் காட்சிப்படுத்தும் இரசாயன மருந்துகளில் “நோ அம்மோனியா” என்று சொல்லப்பட்டாலும், இது முற்றிலும் இயற்கையானது என்று பறைசாற்றப்பட்டாலும் அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் தலை முடி வழியாக ஊடுருவி மூளை செயல்திறன் குறைவு, கண்பார்வை குறைபாடு , தோலில் ஒவ்வாமை (அலர்ஜி), கேன்சர், கட்டிகள் என பலவிதமான பிரச்சினைகளை கொடுப்பதை கண்கூடாக உணரலாம்.
எல்லாவற்றிற்கும் இயற்கை முறையிலேயே பரிகாரம் கண்ட நம் முன்னோர்கள் இதையும் விட்டுவிடவில்லை.
செம்பட்டை முடிகள் கருமையாகவும், முடி உதிர்தலை தடுக்கவும், முடி அடர்ந்து வளரவும் வெவ்வேறு இயற்கை மூலிகைகளை கலந்து கூந்தல் தைலம் உருவாக்கி இருக்கிறார்கள்.
நம் முன்னோர்களின் வழிமுறையில் சற்றும் மாறாமல் ஒரு மாதத்திற்குள் கருமையான அடர்ந்த முடி வளர்ச்சியுடன், முடி உதிராமல் தடுத்து, வழுக்கை தலையிலும் முடி நன்கு வளர 32மூலிகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட தைலம் “கரிசாலை தைலம்”. உள்ளுக்கும் உட்கொள்ள மூலிகைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரே பேக்கிங்கில் தலைமுடிக்கான வெளி உபயோகத் தைலமும், உட்கொள்ள கூடிய மூலிகைகளும் இருப்பது இதன் சிறப்பு. இவைகள் வெறும் முடிக்கான போஷாக்கையும், கருமையையும், அடர்த்தியையும் மட்டும் தருவதில்லை. அதோடு சிரசில் ஏற்படும் பொடுகு, சொறி-சிரங்கு, அரிப்பு, தடிப்பு, கட்டிகள், நீர்கோர்வை, தலைப்பாரம் போன்ற 96 வகையான நோய்களுக்கும் நிவாரணமாகக் கூடும் இந்த தைலம்.
இந்த தைலத்தை நேரிலோ- கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். குறைந்த அளவிலான தயாரிப்பு என்பதால் தனி நபர் உபயோகத்திற்கு 100 மில்லி பாட்டிகளில் மட்டுமே கிடைக்கும்.. விலை ரூபாய் 200 /- மட்டும் (கொரியர் செலவு தனி )
தைலத்தை பெற அலைபேசி எண் +91 99401 75326 (அ) easwarisherbs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
V.Easwari
STATE BANK OF INDIA
KANDIGAI BRANCH,
AC.NO:35387725926
CIF NO:88797451281
IFSC:SBIN0018365
MICR:600002284.
தூதுவளை - காயல்கல்ப மூலிகை.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, தொடர் இருமல், நுரையீரல் நோய், தொண்டைவலி, மார்புச்சளி, காய்ச்சல், தோல் வியாதி, குறைந்த மூளை வளர்ச்சி, நினைவாற்றல் குறைதல், நீரிழிவு, காது மந்தம், எலும்பு மற்றும் பற்கள் பலவீனமடைதல், உடல் இளைப்பு, மூலம், கேன்சர், குழந்தைப் பேறின்மை, நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக் குறைபாடு என பல்வேறுப்பட்ட சகல வியாதிகளைளில் இருந்தும் காப்பாற்றி, நம் உடலை பாதுகாக்கவும் நோயற்ற வாழ்வு வாழவும், என்றும் இளமையோடு இருக்கவும் தூதுவளை ஒரு சிறந்த மூலிகையாக இருக்கிறது.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்றுகளுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ நிவாரணி என ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றால் உண்டான புற்றுநோய்களை ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்தால், தூதுவளை இலையைப் பயன்படுத்தி சில மாதங்களிலேயே பூரண குணமடையலாம்.
தூதுவளைப் பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், வறட்டு இருமல் உடனே நிற்கும்.
தூதுவளை கீரையை அரைத்து கோதுமை மாவு, இட்லி மாவுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். துவையல் செய்யலாம். பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.
சர்வரோக நிவாரணியாகவும், நோயற்ற இளமையான வாழ்வை கொடுப்பதாகவும் இருக்கும் இந்த தூதுவளை யை காயகல்ப மூலிகை என்றால் அது மிகையில்லை.
கடுக்காய் - சிறு குறிப்பு
* * * * * * * * * * * * * * * * * * *
மிக எளிதாக கிடைக்கக் கூடிய, விலையும் மிகக் குறைந்த, அறுசுவைகளையும் தன்னகத்தே கொண்ட காயகல்ப மூலிகை தான் இந்த கடுக்காய்.
கடுக்காய் பொடியை உணவுக்குப் பின் உண்ண உணவில் செரிமானமும், உணவில் உள்ள கபத்தையும் நீக்கும். நெய்யோடு உண்ண வாதத்தையும், வெல்லத்தோடு உண்டால் உணவில் உள்ள பித்தத்தையும், முக்குற்றங்களையும் நீக்கும்.
உணவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்கள் (குழந்தை முதல் பெரியவர் வரை) தினம் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியால் உணவுப் பிரியர்கள் ஆவார்கள் என்பது உறுதி. அதோடு கபம், பித்தம், வாதம், மலச்சிக்கல் என அனைத்து வியாதிகளையும் எளிய முறையில் களையலாம்.
கடுக்காய் பொடி அன்றாடம் உண்டு வந்தால் முதுமை தோற்றம் மறைந்து என்றும் இளமையோடு வாழலாம்.
(என்றும் இளமையோடு வாழ டிப்ஸ் கேட்போர் கவனத்திற்கு)
(முக்குற்றம் - வளி (காற்று), அழல்(நெருப்பு), ஐயம் என்ற மூன்றும் சமநிலை தவறுதல்)

வியாழன், 19 நவம்பர், 2015

http://www.dinamalar.com/supplementary_detail.asp…
நான் எழுதுகின்ற உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான செய்திகள் அனைவரையும் சென்றடைய பாதை அமைத்துக்கொடுத்த தினமலர் நிறுவனத்தாருக்கும், ஆதரவளித்த உங்களுக்கும் நன்றிகள்.
தொடர்ந்து படித்து- படித்ததை செயல்படுத்தி ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள். 
காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, மலேரியா குணமாக.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஏழை-பணக்காரர், கிராமம்-நகரம், குடிசை-மாடி வீடு என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாவற்றையும் “வெள்ளம்” என்ற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தெருவில் நிறுத்தி இருக்கும் மாமழை, சாக்கடை-நல்லநீர் என்ற வித்தியாசமும் இல்லாமல் செய்திருக்கிறது.
அரசும், அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் , பொதுமக்களும் பாதிக்கப்பட்டோரை வெள்ளத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இப்போதைய நேரடி பாதிப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல வெள்ளம் வடிந்தபின் வரப்போகும் ஆரோக்கிய பிரச்சினைகளும்.
எங்கும் நிறைந்திருக்கும் சாக்கடை கலந்த நீர் ஆங்காங்கு தேங்கி கொசுக்களின் சொர்க்கமாய் மாறிவிடும். கொசுக்கள் மிகவும் ஆனந்தமாக மலேரியா முதல்- டெங்கு வரை நோய்களை பரப்பும்.
இந்த நேரத்தில் பொதுமக்கள் கூடுதல் விழிப்புடனும், அக்கறையுடனும் இருக்க வேண்டும். தேங்கி இருக்கும் நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தேங்காய் சிரட்டை முதல், விளையாட்டு பொம்மைகள், டயர்கள் என எங்கே சிறிதளவு நீர் தேங்கி இருந்தாலும், அதனை அலட்சியம் செய்யாமல் வெளியேற்ற வேண்டும்.
காய்ச்சல் வருவது போல தோன்றினால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் இருந்தால் நிலவேம்பு கஷாயம் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை என ஒரு நாளில் நான்கு முறையும், விட்டு விட்டு காய்ச்சல் இருந்தால் பப்பாளி இலை சாறு 2 டீ ஸ்பூன் மூன்று நாளைக்கு வெறும் வயிற்றில் காலை உட்கொள்ள, சாதாரண காய்ச்சல் முதல், உயிர் கொல்லும் மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்கள் கூட குணமாகும்.
கவனம் ஆரோக்கியமே முதல் மூலதனம்...
வாழ்க வளமுடன்.
வெண் புள்ளி (Leukoderma)
* * * * * * * * * * * * * * * * * * * * *
தன்னுடைய தாய் தன்னுடைய சாப்பாட்டு தட்டை கழுவி வீட்டிற்கு வெளியே வைத்ததை பார்த்த மகன் (குடும்பத்தில் மற்ற அனைவரின் சாப்பாட்டு தட்டுகளும் வீட்டிற்கு உள்ளே வைக்கப்படும்) மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்.
பெற்ற தாயே இந்த ஒரு மகனை மட்டும் வேறுபடுத்தி, ஒதுக்கி வைக்க காரணம் என்ன தெரியுமா?? லூக்கோடெர்மா என்று சொல்லக்கூடிய வெண்புள்ளி, வெண்குட்டம், வெண்படை எனவும், ஆங்கிலத்தில் "மெலனின் நிறமி குறைபாடு"
இதற்கு இது யாரிடமிருந்தும் யாருக்கும் தொற்றாது. பரம்பரை பாதிப்பும் கிடையாது. அதனால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அதைப் பற்றி இங்கு மக்களிடையே பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள் தான் அதிகம். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் உலக அளவில் 2 சதவிகித மக்களும், இந்தியாவில் 4 சதவிகித மக்களும் என தகவல்கள் கூறுகின்றன.
மனித மனங்களை பெரிய அளவில் தாக்கும் ஒரு சில வியாதிகளில் மிக முக்கியமானது வெண் புள்ளி (leukoderma). நித்ய கண்டம், பூரண ஆயுள் என்பார்கள், அதுபோல மரணபயமில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் ஒருவித மன அழுத்தத்தை இந்த வியாதி உருவாக்கி தினசரி மனத்தால் மரணத்தை சந்திக்க கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.
நமது உடலில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால் தான் வெண்புள்ளிகள் உருவாகிறது. இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, எதிர் வினையை ஏற்படுத்துவதால், நிறப்பொருள் அணுக்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும், நிறப்பொருள் அணுக்கள் தம்முடைய பணியைச் சரிவரச் செய்யாது.
இந்த நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தைராய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள், நீரிழிவு, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைவு, வைட்டமின் குறைபாடு ஆகியவைகளால் இவை உருவாகும்.
கதிரியக்க வலைக்குள் கட்டுப்பட்டு கிடக்கும் வாழ்க்கை முறையும், அசைவ உணவுகளுடன் பால் பொருள் உணவுகளை சேர்த்து சாப்பிடுவதும் மிக முக்கிய காரணங்கள். தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அதிகம் வருகிறது. அமீபியாஸ், குடல் நோய்கள், குடற் பூச்சிகள், இரத்தச்சோகை, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின் தாக்குதலாலும் இவை ஏற்படும். இந்தக் குறைபாடு எப்போதுவேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றலாம்.
பொதுவாகவே அசைவ சாப்பாடு உடலுக்கு அத்தனை நலம் பயப்பதில்லை என்றாலும். நம் வாழ்க்கை – உணவு முறை அசைவத்திற்கு நம்மை அடிமையாக்கியே வைத்திருக்கிறது.
ஆனால் அந்த அசைவ உணவுடன், சிக்கன்-மட்டன்-மீன் போன்ற உணவுகளை சாப்பிடும் போது பால்-தயிர் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் ஆபத்தின் அளவை குறைக்க முடியும். நம் முன்னோர்கள் நமக்கு பலவழிகளில், பலமுறை இவ்வுணவு முறைகளை அறிவுறுத்தி இருந்தாலும், நாம் அவர்களின் கூற்றுகளை புறக்கணித்ததின் விளைவே இந்நோய்.
படுப்பதற்கு முன் குழந்தைகள் பால் குடித்தால் நல்லது என்று யாரோ கிளப்பி விட்ட வதந்தியை பிடித்துக்கொண்ட நம்மூர் மக்கள், இரவில் வறுத்த-பொறித்த மீன்- இறைச்சிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு, சற்று நேரத்திற்குள்ளாகவே பாலையும் காய்ச்சி குடிக்க கொடுப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு பதிலாக வெண்புள்ளி நோயை விருந்து வைத்து அழைப்பது போலாகும். ஒருமுறை இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி விட்டால் அதை குணப்படுத்துவதற்கு எத்தனையோ செலவுகள் செய்து இரசாயண மருந்துகளை உட்கொண்டும் கூட, நோய் முற்றிலும் குணமாகாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுபவர்களை கண்கூடாக காண்கிறோம்.
இந்த நேரத்தில் இன்னொரு தகவலையும் பதிவு செய்தே ஆக வேண்டும். இன்றைய உலகின் பெரும்பாலான மருத்துவ கண்டுபிடிப்புகள் இராணுவ தேவைகளுக்கான ஆராய்ச்சியின் பலனே ஆகும். யுத்தகால ராணுவ உதவிக்காக ராணுவ-மருத்துவ ஆய்வு துறை கண்டுபிடித்து, பின்னாளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களே அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.
அந்த வகையில் இந்த வெண்புள்ளி நோயால், தினம் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக, மிக குறைந்த செலவில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், நோய் முற்றிலும் குணமாகக் கூடிய மருந்தை நம் நாட்டு "மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்" கண்டுபிடித்திருக்கிறது. பக்கவிளைவுகளே இல்லாமல் என்ற உடன் நீங்கள் நம் பாரம்பரிய மூலிகைகளை நினைத்தால்... உங்கள் புரிதலும்- தெளிவும் முற்றிலும் சரியானது.
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்து முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆங்கில மருந்தை நீண்ட நாள் சாப்பிட்டு வருபவர்களுக்கு அதில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், மூலிகை மருத்துவத்தில் ஆரோக்கியம் மட்டுமே உங்களிடம் மீட்டு அளிக்கப்படும். இலவச இணைப்பாக வேறு எந்த பக்க விளைவுகளையும் இணைப்பதில்லை.
உடலியக்கத்தைச் சீராகச் செயற்பட வைப்பது தான் இதற்கான சரியான சிகிச்சைமுறை. இந்த நோய்க்கான சிகிச்சையை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத மூலிகை - இயற்கை வைத்திய முறைகளை மட்டுமே பயன்படுத்தி, நிரந்தர குணமாக்கும் சேவையை மிக குறைந்த செலவில் வழங்குகிறது எங்களின் "பீனிக்ஸ் ஹெல்த் கேர்" நிறுவனம். 
“ பீனிக்ஸ் ஹெல்த் கேர்” "PHOENIXX HEALTH CARE"
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அக்குபஞ்சர் சிகிச்சை முறை மற்றும் பாரம்பரிய உணவு முறைகளால் மட்டுமே பக்கவிளைவுகளற்ற மருத்துவத்தை மக்களுக்கு கொடுத்து ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், தக்கவைக்கவும் முடியும் என்பதே என்னுடைய மாறாத நம்பிக்கை.
இந்த நம்பிக்கையின் அடுத்தகட்டமாக உடல்நலனில் பாதிப்படைந்தவர்களுக்கு நிரந்தர தீர்வளிக்கும் நோக்கத்துடனும் , மருந்தில்லா மருத்துவமுறைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் எண்ணத்துடனும், உணவே மருந்து என்பதின் அவசியத்தை வலியுறுத்தும் நல்லெண்ணத்தில் சென்னை – வடபழனி, நூறடி சாலையில் அமைந்துள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டல் எதிரில்
“ பீனிக்ஸ் ஹெல்த் கேர்”
என்ற பெயரில் ஒரு உடல்நல பாதுகாப்பு மையத்தை திறக்க இருக்கிறோம்.
இரத்த கொதிப்பு, சர்க்கரை, தலைவலி இது போன்ற பல நாள்பட்ட ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டவர்கள் தகுந்த ஆலோசனையும், அக்குபஞ்சர் சிகிச்சையும் பெற்று நிரந்தர குணம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
மருந்தில்லா மருத்துவம். நிரந்தர ஆரோக்கியம்.
அன்புடன்,
“நலம் வாழ” ஈஸ்வரி,
அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர்.