வியாழன், 19 நவம்பர், 2015

காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, மலேரியா குணமாக.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஏழை-பணக்காரர், கிராமம்-நகரம், குடிசை-மாடி வீடு என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாவற்றையும் “வெள்ளம்” என்ற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தெருவில் நிறுத்தி இருக்கும் மாமழை, சாக்கடை-நல்லநீர் என்ற வித்தியாசமும் இல்லாமல் செய்திருக்கிறது.
அரசும், அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் , பொதுமக்களும் பாதிக்கப்பட்டோரை வெள்ளத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இப்போதைய நேரடி பாதிப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல வெள்ளம் வடிந்தபின் வரப்போகும் ஆரோக்கிய பிரச்சினைகளும்.
எங்கும் நிறைந்திருக்கும் சாக்கடை கலந்த நீர் ஆங்காங்கு தேங்கி கொசுக்களின் சொர்க்கமாய் மாறிவிடும். கொசுக்கள் மிகவும் ஆனந்தமாக மலேரியா முதல்- டெங்கு வரை நோய்களை பரப்பும்.
இந்த நேரத்தில் பொதுமக்கள் கூடுதல் விழிப்புடனும், அக்கறையுடனும் இருக்க வேண்டும். தேங்கி இருக்கும் நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தேங்காய் சிரட்டை முதல், விளையாட்டு பொம்மைகள், டயர்கள் என எங்கே சிறிதளவு நீர் தேங்கி இருந்தாலும், அதனை அலட்சியம் செய்யாமல் வெளியேற்ற வேண்டும்.
காய்ச்சல் வருவது போல தோன்றினால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் இருந்தால் நிலவேம்பு கஷாயம் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை என ஒரு நாளில் நான்கு முறையும், விட்டு விட்டு காய்ச்சல் இருந்தால் பப்பாளி இலை சாறு 2 டீ ஸ்பூன் மூன்று நாளைக்கு வெறும் வயிற்றில் காலை உட்கொள்ள, சாதாரண காய்ச்சல் முதல், உயிர் கொல்லும் மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்கள் கூட குணமாகும்.
கவனம் ஆரோக்கியமே முதல் மூலதனம்...
வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக