வியாழன், 19 நவம்பர், 2015

நாயுருவி இலை குழம்பு
---------------------------------------------
நாயுருவி இலை - ஒரு கைப்பிடி,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - பத்து பல்,
புளி - எலுமிச்சை அளவு,
குழம்பு மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
உப்பு, மஞ்சள் பொடி - தேவையான அளவு,
எண்ணெய் - தாளிக்க.
மண்சட்டியில் அரைடீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் நாயுருவி இலையை வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து, விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சப்பொடி சேர்த்து, மண்சட்டியில் எண்ணெய் விட்டு தாளித்து, பின் இந்த கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மிளகாய் தூள் வாசம் போனதும் இறக்கி விடலாம்.
குழம்பு கொதிக்கும் போதே வாசம் சாப்பிட தூண்டும். சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். உண்ட உணவு இரண்டு-மூன்று மணி நேரத்துக்குள் சீராக செரிமாணம் ஆகி இருப்பதை உணராலாம்.
சரியான செரிமாணம் இல்லாதவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பாருங்கள். மிகவும் எளிதான செய்முறை கொண்ட இம்மூலிகையின் பலன்களை ஏற்கனவே
பதிவில் கூறி இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக