சனி, 7 ஜூன், 2014

சளி, சைனஸ், ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் - எளிய தீர்வு (அக்குபிரஷர்)

வ்வாமை எனப்படும் அலர்ஜிகளில் அதிகமாக நமக்கு மன உளைச்சல் தரக் கூடியது கண் மற்றும் மூக்கு சம்பந்தமான அலர்ஜிகளால் தான். கோடை காலத்திலும் சளி, அடுக்குத் தும்மல் தொல்லைகளால் ஏராளமானோர் அவதிப்படுப்படுகிறார்கள். 

சைனஸ்களின் சிற்றறைகளில் இருந்து வெளியே வர வேண்டிய நீர், சளியாக மாறி, கட்டியாக அடைத்துக் கொள்வதால், மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. சுவாச மண்டலம் பாதிக்கப்படுகிறது.

நமது தவறான உணவுப் பழக்கம், சுற்றுப்புற சூழ்நிலையுள்ள மாசு, பூக்களின் மகரந்தம், மின் விசிறி, ஏசியின் பில்டரில்களில் படியும் தூசி, நாய், பூனை உள்ளிட்ட வீட்டு செல்லப் பிராணிகள் எச்சம் மற்றும் முடி, தரமற்ற ஐஸ்கிரீம் போன்றவற்றால் அலர்ஜி, சைனஸ் பாதிப்பு வர முக்கிய காரணங்களாக அமைகின்றன.

காது, மூக்கு, தொண்டைக்கும் தொடர்புண்டு. இதனால் ஒன்றில் ஏதாவது பாதிப்பு வந்தாலும், அடுத்தடுத்த பகுதிகளையும் பாதிக்கும். மூக்குத் தண்டு வளைவு இருந்தாலும், மூக்கு, தொண்டைக்கு மேல் உள்ள, 'அடினாய்டு' அடைப்பு, வீக்கத்தினாலும் (குறிப்பாக குழந்தைகளுக்கு) சைனஸ் பிரச்னை ஏற்படும்.

பல் சொத்தையும் சைனஸ் தொல்லைகளை உண்டாக்கலாம். பற்களின் வேர்களின் அருகில் தான் மாக்ஸீலரி சைனஸ் அறைகள் உள்ளன. தீவிரமான, ஆழமான பல் சொத்தை வேர் வரை பரவும் போது, பக்கத்தில் இருக்கும் சைனஸ் அறைகளையும் தாக்கும்.

தூக்கமின்மை, தலைபாரம், தலைவலி, கண்களை சுற்றியும் வீக்கம் வலி, கண்களின் பின்பக்கம், தலையின் முன்புறம், பின்புறம் வலி, பல்வலி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், அடுக்குத் தும்மல், தொண்டை வலி, ருசி உணரமுடியத நிலை, தலைக்கு குளிக்கும் அன்று கட்டாயம் தலைவலி, குனிந்தாலும், நிமிர்ந்தாலும் தலை விண் விண் என்று தெறிக்கிற வலி, இரண்டு மூன்றுமுறை பல்துலக்கினாலும் வாயில் தொடர்ந்து துர்நாற்றம் வருதல் ஆகியவை நோயின் பாதிப்புகளாக அமைகின்றன.

இப்படியான பலவித தொல்லைகளை தரும் அலர்ஜிகள் வராமல் தடுக்கவும், வந்திருந்தால் குணமாக்கவும் நம் உணவில் பழங்கள், முருங்கைக்காய், முள்ளங்கி, பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், மைதாவால் ஆன உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மது, புகை இரண்டும் அறவே கூடாது. அலர்ஜி உண்டாக்கும் தூசி, கொசுவை விரட்ட பயன்படும் வத்திகள் கூடாது. பகலில் தூங்கக்கூடாது.

இவ்விதமான அலர்ஜிகளில் இருந்து விடுபட அக்குபிரஷர் முறையில் மிக எளிமையான வழி இருக்கிறது... கைகளில் இருக்கும் பத்து விரல்களையும் சீராக அழுத்தம் கொடுக்க வேண்டும். காலை, மாலை என இரண்டு வேளையும் பத்து நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வர சளி, சைனஸ், ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் தொல்லைகளில் இருந்து வெளி வரலாம். இதை இன்னும் எளிமையாக செய்ய படத்தில் காட்டி இருப்பது போல வளையங்கள் சந்தையில் கிடைக்கும்.. அதனை வாங்கி, அனைத்து விரல்களில் நன்கு பதியும் படியாக நிதானமாக முன்னும் பின்னும் உருட்டுவதன் மூலம் சீரான அழுத்தம் கிடைக்கும். கூடுதல் நலமும் தொல்லைகளில் இருந்தும் நிரந்தர தீர்வும் காணலாம்.

கோபம், பரபரப்பு, கவலைகளை தவிர்த்து ‘கபாலபாதி’ மட்டும் சரியான முறையில் செய்து வந்தால் சைனஸ் காணாமல் போவது மட்டுமல்லாமல், எல்லா விதமான சளி தொந்தரவுகளில் இருந்தும் விடுபட முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக