சனி, 7 ஜூன், 2014

மருந்தில்லா மருத்துவம்

யற்கைக்கு முரண்பட்ட செயல்களினால் நம் உடலில் சமநிலைச் சீர்குலைவுகள் உண்டாகி சில பல தொல்லைகளாக வெளிப்படுத்தும். அவை சிறிய அளவில் இருக்கும் போதே கவனிக்காமல் விட்டுவிட்டால் பின் வாழ்நாள் முழுவதும் தொல்லைகளோடு போராடுவதே நம் முழுநேர வேலையாகி விடும். 

ஒரு வாகனத்தில்/ இயந்திரத்தில் மிக சிறியதாக பிரச்சினை வரும்போது சரி செய்யாமல் விட்டுவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம்.. அதுதான் ஓடுகிறதே என்று ஓடும் வரை ஓட்டிவிட்டு திடீரென்று ஒரு நாள் வண்டி நின்றவுடன் அடித்துப்பிடித்து மெக்கானிக்கிடம் ஓடினால்.. அவர் ஏதாவது பெரிய பழுது என்றும் அதை இப்பொது சரி செய்யாவிட்டால் இயந்திரமே உபயோகமற்று போகும் என்று சொல்வார்....அவர் சொல்லும் தொகையில் பத்தில் ஒரு மடங்கு கூட ஆகி இருக்காது , அந்த பிரச்சினை நம் கவனத்தில் வரும் போதே சரி செய்திருந்தால்...அது வெறும் இயந்திரம்... கொஞ்சம் கூடுதல் செலவானாலும் கூட பாகங்களை மாற்றி விடலாம்... அல்லது இறுதி கட்டமாக எடைக்கு கூட போட்டு விடலாம்....
ஆனால் மனித உடல் அப்படியானதா??? உடலின் பாகங்கள் பழுது பட்டால்??? பலர் கவனக் குறைவினாலோ, அலட்சியத்தினாலோ உடலில் ஒரு பாதிப்பு தொடங்கும் போதே கண்டறிந்து சரி செய்யாமல் விட்டு விட்டு... பின் அவர்கள் வியாதின் பிடியில் சிக்கித் தவிப்பது என்பது மிகவும் கொடுமை தானே?..

எப்போதும் களைப்பு அல்லது அடிக்கடி களைப்பாதல், காரணமின்றி எரிச்சலடைதல், தூக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், கண்களில் நீர் கொட்டுதல், மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், தொடர் இருமல், காதில் மெழுகுப் போன்ற படலம் படித்தல், அதிகப்படியான வியர்வை மற்றும் உடலில் தோன்றும் துர்நாற்றம், அடிக்கடி கொட்டாவி, பெருமூச்சு விடுதல், முறையற்ற மாதவிடாய், பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிகமான இரத்தப்போக்கு மற்றும் வலியுடன் கூடிய இரத்தப்போக்கு போன்றவை உடலில் உண்டான கோளாறின் வெளிப்பாடே ஆகும்.

மேலே சொன்ன காரணங்களை நன்கு கவனித்தால் உடல் தன்னிடமிருந்து அதிகப்படியான கழிவுகளை வெளியேற்றுகிறது என்பதை புரிந்துக் கொள்ளாலாம். இந்த கழிவுகள் நம் உடலில் அளவுக்கதிகமாக சேர்வதால் தானே உடல் அவற்றை வெளியேற்றுகிறது??? வழக்கத்திற்கு மாறாக கழிவுகள் அதிகமாகிறது என்றால் நம்முடைய ஆரோக்கியம் எங்கோ தொலைந்துக் கொண்டிருக்கிறது என்று தானே பொருள். இந்த மாதிரி தொல்லைகள் எல்லாம் உள்ளுறுப்புகளின் பாதிப்பின் வெளிப்பாடே ஆகும்.

அக்குபஞ்சர் முறைப்படி இந்த நோய்கள் தோன்ற உடலிலுள்ள நிலப்புள்ளிகளில் (இரைப்பை, மண்ணீரல்) உண்டான தடைப்பட்ட இயக்கமே காரணமாக கொள்ளபடுகிறது. பஞ்ச பூதங்களில் மிக முக்கியமானது நிலம். அந்த நிலம் சீர்குலைந்தால் மற்ற உறுப்புகள் எல்லாம் மிக வேகமாக தன் பணிகளை செயல்படுத்தும் திறனை இழக்க ஆரம்பிக்கும்.

உடல் களைப்படைய செரிமாண பிரச்சனையே மிக முக்கிய காரணம். களைப்படையும் ஒருவருக்கு உணவு செரிமாணம் ஆவதிலும் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.

அக்குபஞ்சர் முறைப்படி சரியான நிலப்புள்ளியை (இரைப்பை, மண்ணீரல்) தூண்டுவதன் மூலம் தடைப்பட்ட இயக்கத்தை சீராக்கி மேற்சொன்ன அத்தனை பிரச்சனைகளில் இருந்தும் மீளலாம். (எந்தப் புள்ளி என்று யாரும் இங்க கேள்வி கேட்க கூடாது. அக்குபஞ்சர் படித்தவர்களுக்கு நன்கு புரியும். தெரியும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக