சனி, 7 ஜூன், 2014

ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism)

மனித உடலின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் தான். இந்த தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளை "தைராய்டிசம்" என்கிறோம்...

தைராய்டில் மூன்று வகைகள் உள்ளன. அவை ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் மற்றும் கோயிட்டர் என்பன. தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டிசம், குறைவான அளவில் இருந்தால் ஹைப்போ தைராய்டு, கோயிட்டர் என்பது குரல் வளை சுரப்பியில் ஏற்படும் வீக்கம்.

உடலில் அயோடின் அளவில் உண்டாகும் ஏற்ற இறக்கம் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை பாதித்து, உடல் உறுப்புகளின் இயக்கத்தில் பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்நோய் ஆண்களை விடப் பெண்களை ஏழு மடங்கு அதிகமாய் தாக்குகிறது. பெண் குழந்தைகள் குறைந்த வயதில் பருவமடைவது (அ) அதிக வயது ஆகியும் பருவமடையாமல் இருப்பது போன்றவற்றிற்கு காரணம் இந்த தைராய்டு குறைபாடே ஆகும்... மேலும் பெண்கள் கருத்தரிப்பது கூட முடியாமல் போகும். இந்த பிரச்சனையுடன் குழந்தையை பெற்றெடுக்க முயன்றால், அது குழந்தையின் மனநிலையை பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுவான அறிகுறிகள்
- - - - - - - - - - - - - - - - - - - - -
எப்போதும் உடல் குளிர்ச்சி, மூச்சு வாங்குதல், மாதவிடாய் கோளாறுகள், சக்தியின்மை, எடை குறைதல் (அ) கூடுதல், தோல்வியாதிகள், இதயத்துடிப்பு அதிகமாக இருத்தல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, மூட்டு வலிகள், அளவுக்கு அதிகமான முடி உதிர்தல், ஒருவித பயம் மற்றும் எரிச்சலுடன் கூடிய உளவியல் ரீதியான பிரச்சனைகள் போன்றவைகளுக்கு காரணம் இந்த தைராய்டு பிரச்சினைதான். தைராய்டு சுரப்புக் குறை உள்ளவர்களுக்கு எப்போதும் ஒருவித அசதி, படபடப்பு, மனஅழுத்தம் இருப்பதால் உடல் அசதியாகவே இருக்கும்.
பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற் பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகள்.

இதற்கு அக்குபிரஷர் முறையில் எளிய வழியில் தீர்வு காணலாம். படத்தில் இருப்பதுபோல இரண்டு கைகளையும் குறிப்பிட்ட இடத்தில் 3 நிமிடங்களுக்கு லேசாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே, நன்கு மூச்சை இழுத்து சிறிது நேரம் மூச்சை உள்வைத்து பின் மெதுவாக மூச்சை விடவும்.. ஒரு நாளைக்கு நான்கைந்து முறை மூச்சுப் பயிற்சியுடன் அழுத்தமும் கொடுக்கலாம்...இந்த எளிய முறையால் தைராய்டு சுரப்பி நன்கு இயங்க ஆரம்பிக்கும். தைராய்டு பிரச்சனையிலிருந்து எளிதில் வெளிவரலாம்.

1 கருத்து: