வெள்ளி, 24 ஜூன், 2016

கடுக்காய் - சிறு குறிப்பு
* * * * * * * * * * * * * * * * * * *
மிக எளிதாக கிடைக்கக் கூடிய, விலையும் மிகக் குறைந்த, அறுசுவைகளையும் தன்னகத்தே கொண்ட காயகல்ப மூலிகை தான் இந்த கடுக்காய்.
கடுக்காய் பொடியை உணவுக்குப் பின் உண்ண உணவில் செரிமானமும், உணவில் உள்ள கபத்தையும் நீக்கும். நெய்யோடு உண்ண வாதத்தையும், வெல்லத்தோடு உண்டால் உணவில் உள்ள பித்தத்தையும், முக்குற்றங்களையும் நீக்கும்.
உணவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பவர்கள் (குழந்தை முதல் பெரியவர் வரை) தினம் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியால் உணவுப் பிரியர்கள் ஆவார்கள் என்பது உறுதி. அதோடு கபம், பித்தம், வாதம், மலச்சிக்கல் என அனைத்து வியாதிகளையும் எளிய முறையில் களையலாம்.
கடுக்காய் பொடி அன்றாடம் உண்டு வந்தால் முதுமை தோற்றம் மறைந்து என்றும் இளமையோடு வாழலாம்.
(என்றும் இளமையோடு வாழ டிப்ஸ் கேட்போர் கவனத்திற்கு)
(முக்குற்றம் - வளி (காற்று), அழல்(நெருப்பு), ஐயம் என்ற மூன்றும் சமநிலை தவறுதல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக