செவ்வாய், 14 ஜனவரி, 2014

பால்!!!!

எந்த இரத்தமும், சத்துக்களும் கலந்து பாலாக மாறியதோ... எந்த ஈரல் சுத்திகரித்து பாலாக சுரந்ததோ... அந்த பசுவின் இறைச்சியை உணவாக உண்ணலாமாம்...ஆனால் பால் மட்டும் குடிக்க கூடாதாம்.... பாலே கூடாதெனில் அந்த பால் தரும் பசுவும், மற்ற அசைவமும் உணவாகக் கூடாதல்லவா?.... சித்தர்களின் வைத்திய அனுபான முறைகளில் பால் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதுண்டு... ஆனால் அசைவத்தை முன்னிறுத்தும் கலியுக சித்தர்கள் பாலே அருந்தக்கூடாது என்கிறார்கள்... .... பால் கூடாது என்று மறுக்கும், பிரச்சாரம் செய்யும் கலியுக சித்தர்களிடம்தான் (??!!) முற்கால சித்தர்கள் பாடம் படிக்க வேண்டும் போல.... தாய் இல்லாமல்.. தாய்ப்பால் இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கும் , பால் அருந்தக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்பவர்களின் குழந்தைகளுக்கும் கூட பசுவின் பாலே உயிர் வளர்க்கும் காரணியாக அமைகிறது.... பசுவின் மாமிசம் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக