செவ்வாய், 14 ஜனவரி, 2014

மலேரியா



கொசுக்கள்
மூலமாக பரவும் நோய்களில் மிக முக்கியமானது மலேரியா ஜுரம். மலேரியா கிருமி இரத்த ஓட்டத்தில் கலந்து சிவப்பணுக்களுக்குள் ஊடுருவி ஹீமோகுளோபினை அழித்து பல்கி பெருகும். இதன் விளைவாக இரத்த சிவப்பணுக்கள் சீர்குலைந்து கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் மூளை போன்றவை செயலிழக்க தொடங்கும்.

மலேரியா ஜுரம் வந்தவுடன் நாம் பயந்து போய் மருத்துவமனைக்கு ஓடி மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வோம்... ஜுரம் குறையும். ஆனால் முழுதாக குணமாகாத பட்சத்தில் ஒரு வாரத்தில் மறுபடியும் ஜுரம் வரும். அதோடு, ஜுரத்திற்கு பயந்து நாம் உட்கொண்ட மருந்து மாத்திரைகள் என்ன செய்கிறது தெரியுமா??? அவைகள் கல்லீரலில் தங்கி இருக்கும் மலேரியா கிருமிகளை தாக்கி அழிக்கின்றன.. கிருமிகளை மட்டும் அழிப்பதில்லை.. கல்லீரலை பலவீனப்படுத்தி செயல்பாட்டையும் குறைத்து விடுகின்றன... கல்லீரலின் வேலைத்திறன் குறைவதோடு, மீண்டும் காய்ச்சல் வரும்பட்சத்தில் உடல் பலவீனம், சோர்வு,ரத்த சோகை, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகமாகும்.

மலேரியா எனும் இந்த ஜுரத்தை மருந்து, மாத்திரைகள் இல்லாமல் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் குணமாக்க முடியுமா...?? என்ற கேள்விக்கு இயற்கை மருத்துவம் கொடுக்கும் பதில்.. "முடியும்" என்பது தான்.
“உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும்
அற்றே வருமட்டும் அன்னத்தை காட்டதே.”
என்பது திருமூலர் வாக்கு.
லங்கணம் பரமெளஷதம் என்பது சமஸ்கிருதப் பழமொழி. மேற்கண்ட இரண்டும் கூறுவது பட்டினி மட்டுமே சிறந்த மருந்து என்பதுதான்...

உடலின் மொழி, உணவின் இரகசியம் இரண்டையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். பசிக்காமல் உணவு மற்றும் நீர் அருந்தவே கூடாது. பட்டினியாக இருப்பதால் செரிமாண உறுப்பிற்கு போதுமான ஓய்வு கிடைக்கும். வாய்ப்பகுதியில் தொடங்கும் நம் செரிமாண மண்டலம் மலவாயில் முடிவடைகிறது. பூரண குணம் பெற வேண்டுமானால் முழு ஓய்வும், பட்டினியும் மிக அவசியம்.

பசிக்கும் பட்சத்தில் உணவே மருந்தாக உடைத்தகடலை(பொட்டுகடலை), தேங்காய், எண்ணெய் விடாமல் வறுத்த வரமிளகாய் (தேவைக்கு காரம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல) இவற்றை எடுத்துக் கொண்டு புளி இல்லாமல் துவையல் செய்து, இரண்டு வேளையும் உண்டு வர வேண்டும். முதலில் இத்துவையலை கொஞ்சம் சூடான சாதத்தில் கலந்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட வேண்டும்.. மீதி சாதம் நம் விருப்பம் போல உண்ணலாம். இரண்டு, மூன்று நாட்களில் ஜுரம் போய் உடல் நலம் பெறுவதை காணலாம்.

மேலும் நமது சமையலறையிலேயே இருக்கும் மிளகு - சீரகம் சேர்த்து பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர... ஜுரம் காணாமல் போவதை கண்கூடாக உணரலாம்...

அதோடு உணவே மருந்து என்பதையும் உணரலாம். பயந்து மருத்துவரிடம் ஓடி பக்க விளைவுகளை வாங்கி வர போகிறோமா... நமது சமையலறை பொக்கிஷங்களை கொண்டு ஆரோக்கியமாக வாழ போகிறோமா...??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக