வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வயிற்று வலி, வயிற்றில் வீக்கம், அல்சர் போக எளிய வழி (அக்குபிரஷர்)


கூடுதல் சுவையுடன் உணவு கிடைத்தல் ஒரே நேரத்தில் வயிறு முட்ட அவசர அவசரமாக சாப்பிட்டு, பின்னர் மூச்சு கூட விட முடியாமல் தவிப்பது நம்மில் பலருக்கு வாடிக்கை.. ஆனால் இது மிக மிக தவறான விஷயமாகும்.. "நொறுங்கத் தின்றால் நூறு வயது"...உணவை நன்கு மென்று சுவைத்து, உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.. “அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று நம் முன்னோர்கள் சொன்னவை அனைத்தும் வார்த்தைக்காக இல்லை.. அனுபவ உண்மை..

ருசிக்காக அதிக அளவு சாப்பிடுவது எவ்வளவு பக்க விளைவுகளை ஏற்படுத்துமோ, அதில் சற்றும் குறைவில்லாத விளைவுகளை பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதும் ஏற்படுத்தும்.. உணவை ஜீரணிப்பதற்காக சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலமானது , ஜீரணமாக உணவு இல்லாத பட்சத்தில் குடலின் சுவற்றை பாதிக்கும்... இது அல்சர் எனப்படும்.. இதனாலும் வயிற்றில் தாங்கமுடியாத வலி உண்டாகும்.

பசித்து உண்ணாமல் இருப்பதும் தவறு. பசிக்காமல் உண்ணுவதும் தவறு.

சிக்கும் போது அளவுக்கு அதிகமாக விருப்பபட்ட உணவைச் சாப்பிட்டப் பிறகு, உடல் அதிக சோர்வுடன் (அ) எதுவுமே செய்ய முடியாத நிலையில் அதிக சோர்வும், தூக்கமும் வரும். சில நேரம் வயிறு வலி, வீக்கம், அடிவயிற்றில் அதிக அளவில் வலி, உண்டாகும். அதற்கு செரிமானமின்மை, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயுப் பிடிப்பினால் வலி, அல்சர் இப்படி பல காரணங்கள் வரிசையாக அடுக்கி கொண்டே போகலாம். 


அக்குபிரஷர் முறைப்படி இத்தனை வியாதிக்கும் மிக எளிய முறையில் தீர்வு காணலாம். 3 நிமிடங்கள் தொடர்ந்து சீராக வயிற்று பகுதியில் நெஞ்செலும்பின் கீழ் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். (எளிமையாய் புரிய படத்தை பார்க்கவும்.) இப்படி தொடர்ந்து ஒரு நாளைக்கு 2 (அ) 3 முறை செய்யவும்.. படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் லேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மூச்சை ஆழமாக இழுத்து விடும்போது நமது உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதோடு வலியிலிருந்தும் விடுபடலாம்.

உணவில் கீரைகள், பழங்கள், சிறுதான்யங்கள் என்று சரிவிகத உணவு முறையையும், மேற்கூறிய அக்குபிரஷர் முறையும் இணையும் போது தான் விரைவில் குணமடைய முடியும்.
சரியான உணவுப் பழக்கம், தூக்கம், எளிய உடற்பயிற்சி இவற்றோடு அக்குபஞ்சர் சேர்ந்தால் உடல் எளிய முறையில் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்.

அளவிற்கு அதிகமான சக்தியை தன்னுள்ளே கொண்டுள்ள உடலுக்கும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து தான் பார்க்கலாமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக