வியாழன், 5 செப்டம்பர், 2013

உயர் இரத்த அழுத்தம்



உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களே இன்றைய சூழ்நிலையில் இல்லை எனும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனலாம்...

கவலையும், கோபமும் தான் மனிதனை கொல்லும் முதல் எதிரிகள்...எதற்கு எடுத்தாலும் கோபம், எரிச்சல் ஆத்திரம் தான் அனைவரின் வாழ்விலும் இப்போது நிரம்பி வழிகிறது...அமைதி என்பது கடுகளவு கூட இருப்பது இல்லை..

கோபம், அதீத வேலை பளு,எரிச்சல், ஆத்திரம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவை உயர் இரத்த அழுத்தம் வர காரணங்கள் என்றாலும் மிக முக்கியமான காரணம் மலச்சிக்கல் தான்.. எளிதில் ஜீரணமாகாத உணவை உண்பதன் மூலம் இதயம் அதிக அளவில் வேலை செய்ய நாமே காரணமாகிறோம்..


நம் உடலுக்கு தகுந்த உணவு என்று உணர்ந்து உண்டு வந்தால் இதயத்திற்கும் ஓய்வு கொடுக்கலாம்.... மேலும், மனச்சுமை, மற்றும் வேலையை சிறிது குறைத்துக் கொண்டால் சரியாகிவிடும்...

“தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”
இது உயர் இரத்த அழுத்தம் உடையவர்களுக்கும், அதிகமாக கோபப்பட்டு உயர் இரத்த அழுத்தம் வர வரவழைத்துக் கொள்ளப் போகிறவர்களுக்கும் அன்றே திருவள்ளுவர் சொல்லி வைத்து இருக்கிறார்....

ஆரம்ப காலங்களில் தோன்றும் சிறு சிறு வியாதிகளான தலைவலி, மயக்கம், மங்கிய கண்பார்வை, குமட்டல், வாந்தி, தைராய்டு, சிறுநீரகப்பை கோளாறுகள், சர்க்கரை, தொப்பை (Obesity), சுவாசகோளாறுகள், நெஞ்சு வலி எனும் இந்த வியாதிகளே சில நேரங்களில் உயர் இரத்த அழுத்தம் வரவும், கூடவும் காரணமாகிறது...

ஆரம்ப நிலையிலே இதற்கான மூல காரணம் என்ன எந்த உறுப்பு பாதித்து இருக்கிறது என்று ஆராய்ந்து சரி செய்யாவிட்டால் இப்படிப்பட்ட நாட்பட்ட... உயர் இரத்த அழுத்தமே…..கீழ்க்கண்ட மிகப்பெரிய வியாதிகளை உருவாக்கி ஒரு மனிதனை தன்னிலை இழக்கச் செய்து வாழ்வை முடக்கச் செய்யும் காரணிகள்

.... நெஞ்சுவலி, இதயம் செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, படிப்படியாக கண்பார்வை இழத்தல், நடக்கவே முடியாத அளவிற்கு கால்களில் நிரந்தர வலி....இப்படி அடுக்கி கொண்டே போகலாம்......நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் இதயத்தையும், இரத்த குழாய்களையும் அதிக அளவில் பாதித்து அதன் செயல்பாட்டை முற்றிலும் நசுக்கும்.

ஆனால் இப்படிப்பட்ட உயர் இரத்த அழுத்தத்திற்கு தீர்வும் உண்டு..அதிகபடியான உடல் எடை இருந்தால் நாமே வீட்டிலேயே சரி பண்ணிகொள்ளலாம்......
உணவை கொஞ்சம்..கொஞ்சமாக குறைத்து, அதிகபடியான கலோரிகளை எரிக்க 3௦ நிமிடங்கள் நடைபயிற்சி செய்தும் குறைக்கலாம்...
இதனால் அதிகபடியான கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகிறது....
நம் உடல் ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கான உயிரணுக்களை களைந்தும், உற்பத்தியும் செய்து கொண்டே இருக்கிறது... மேலும் தீர்வு என்று பார்த்தால் திரும்பவும் புகைத்தல், குடி இரண்டையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள், உடல் எடை கூடாமல் சீராக வைத்துக் கொள்ளுவது, எதற்கு எடுத்தாலும் வரும் கோபம், மனஉளைச்சல் தவிர்த்து ...அமைதியான சூழ்நிலையில் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து கொண்டால் எந்த வியாதியுமே நம்மிடம் அண்டாது....

ஆட்டிசம் – வரலாறு


நிறைய பெற்றோரை நிம்மதி இழக்க செய்யும் ஒரு விஷயம்.. தற்போதைய காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் பிறக்கும் குழந்தைகளில் 116 குழந்தைக்கு ஒரு குழந்தைக்கு இந்த குறை பாடு இருப்பதாகவும்.. அமெரிக்காவில் இது 166 குழந்தைக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.
குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.

1943ல் டாக்டர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர் உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்துகிறார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது.
ஆனால், ஆட்டிசத்திற்கு காரணமாக கானர் கருதியதில் முக்கியமானது, பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தைப் பருவத்தில் பெறாததினால் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார். முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில் தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் எனும் குறைபாட்டை முதன் முதலாக வரையரை செய்தவர் என்கிற வகையில் டாக்டர். கானரின் பங்கு மகத்தானது.
ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஓடுவது என்பதுதான் அகராதிப்படியான அர்த்தம். கானர் இவ்வகை குறைபாடுள்ள நோயாளிகள் அப்படி உண்மையை சந்திக்காது விலகி வாழ்வதாகக் கூட எண்ணியிருக்கலாம்.

சரியாக இதே நேரத்தில் டாக்டர். ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் (Hans Asperger) என்பவரும் இதே வகைக் குறைபாடுகளை சற்றே வளர்ந்த பேச முடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார். 1944ல் அவர் ஜெர்மானிய மொழியில் இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். பிற்காலத்தில் ஆட்டிசத்தின் இவ்வகைக்கு (பேசக் கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுதலில் சிரமம் உடைய) குறைபாட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.
கானரின் ஆராய்ச்சியில் முதல் முதலாக ஆட்டிச பாதிப்புக்குள்ளானவராக கண்டறியப்பட்ட டோனால்ட் (Donald Triplett ) என்பவர் முழுக்க குணமடைந்து இயல்பான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார் என்கிற தகவல் 2010ல் கண்டறியப்பட்டபோது அது ஆட்டிசக் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையைத் தந்தது.
ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது. இது ஒரு பெரிய ஆயாசத்தையும், குற்றவுணர்வையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.
நன்றி ....யெஸ். பாலபாரதி

ஸ்டெம் செல் (STEM CELLS)

விஞ்ஞானி எர்நெஸ்ட் என்பவர் 1877இல் எழுதிய ஆந்த்ரோபோஜெனி (Anthropogenic) என்ற நூலில் முதன் முதலில் கரு முட்டைகளை (Fertilized egg) ஸ்டெம் செல் எனக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பிறந்த ஆரிப் பாங்சோ (Ariff Bongso) எனும் கரு ஆராய்ச்சியாளர்தான் உலகில் முதன் முதலில் 1994இல் மனிதனின் கருவிலிருந்து ஸ்டெம் செல்லைத் தனியாக பிரித்தவர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் தாம்சன் ஸ்டெம்செல் பற்றி புத்தகமாக முதலில் வெளியிட்டாலும் ஆரிப் பாங்சோ அவர்களின் முயற்சிதான் ஸ்டெம் செல்லின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது.
உயிர் என்பது உயிரணுக்களின் (செல்) இயக்கமே ஆகும். எல்லா உயிரினங்களிலும் உயிர் அணுக்கள் உண்டு.. ஸ்டெம் செல் எனும் அடிப்படை செல் பொதுவாகக் குழந்தை பிறக்கும்போது தாயுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நஞ்சுக் கொடி (umbilical cord blood)-யில் உள்ள இரத்தத்தில் அதிகமாக இருக்கும். மனிதனின் எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலும், இரத்தத்திலும், முதுகெலும்பு தண்டு வடத்திலும், நரம்பு மண்டலத்திலும், குடலிலும், தோலிலும் உள்ள திசுக்களிலும், அடிவயிற்றிலுள்ள கொழுப்பு திசுக்கள் சுற்றியும் ஸ்டெம் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . கரு ஸ்டெம் செல்களுக்கு நிகரான ஸ்டெம்செல்கள் தாய்ப்பாலிலும் இருப்பதோடு மட்டுமில்லாமல், தாய்ப்பால் சுரக்கும் மார்பகதிசுவிலும் இருப்பது ஆதாரப்பூர்வமாக நீரூபிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெம் செல்கள் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.. பரம்பரை நோய்கள் என்று சொல்லக்கூடிய நோய்களுக்கு காரணமான மரபணுவை நேரடியாக சரி செய்து அதனால் பாதிக்கப்பட்டுள்ள செல்களை குணப்படுத்துவதை தான் ஸ்டெம் செல் சிகிச்சை என்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் செல்லை எடுத்து அதை கரு முட்டையாக மாற்றி வளர வைத்தால் செல்களின் பிரதிகளை உருவாக்க முடியும். பின்பு பாதிக்கப்பட்ட செல்களை நீக்கிவிட்டு இந்த புதிய செல்களை அங்கு பொருத்தினால் அவர்களை குணமாக்க முடியும். ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளவும், தனிப்படுத்திக் கொள்ளவும் இயலும் என நிரூபித்தும் காட்டப்பட்டுள்ளது. ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு புதிய செல்களை உருவாகுவதைத் தான் ஸ்டெம் செல் சிகிச்சை விவரிக்கிறது. செல் சிகிச்சை பெரும்பாலும் செல்களில் இருக்கும் மரபணு திசுக்களை புதுப்பித்து நோய்களை இனம் கண்டறிந்து நீக்குகிறது. நோய் அல்லது காயம் ஏற்படும் நேரங்களில் சிகிச்சை செய்யும் போது பழுதடைந்தை செல்களை சரி செய்வதோடு மட்டுமில்லாமல் புதிய திசுக்களை உருவாக்குவதிலும் ஸ்டெம் செல் இன்றியமையாததாக திகழ்கிறது.
குணப்படுத்தவே முடியாது என்று கூறப்பட்ட வியாதிகளான சிறுநீரக செயலிழப்பு, இரத்தப் புற்று நோய் , நீரழிவு நோய் மற்றும் இருதயக் கோளாறு, எய்ட்ஸ், பார்கின்சன்ஸ் எனப்படும் மூளை முடக்குவாதம், அல்சமீர், தண்டுவட பாதிப்புகள், நரம்பு மண்டல பாதிப்புகள், பார்வை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை மேலான ஒன்றாகும். இந்த சிகிச்சை முறை நம் உடலின் அழகை மேலும் கூட்டும் அழகுக்கலையையும் விட்டு வைக்க வில்லை..

மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் மனிதனை ஆரோக்கியமாக வாழவைக்க இவ்வகை ஸ்டெம் செல்கள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவிலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

புதன், 21 ஆகஸ்ட், 2013

உடல் ஆரோக்கியத்திற்கு எளிய சில வழிகள்


மனதில் நிறுத்த வேண்டிய நான்கு விஷயங்கள்
------------------------------------------------------------------
1. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசித்து சாப்பிடா விட்டாலும் நோய் ..பசிக்காமல் சாப்பிட்டாலும் நோய் தான் ...
2. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் ..
3. சிறுநீர், மலம் அடக்க கூடாது ...
4. தூக்கம் வரும்போது உடனே தூங்க போக வேண்டும்.

தினமும் காலை மற்றும் இரவு ஆயில் புல்லிங் பண்ணவேண்டும்... காலை எழுந்ததும் வாய் கழுவாமல் இரண்டு ஸ்பூன் (அ) 10 மிலி எண்ணெய் எண்ணெய் (நல்லெண்ணெய் (அ) சமையல் செய்யும் எந்த எண்ணையாகவும்) வாயில் ஊற்றி கொப்பளித்து அந்த எண்ணெய் தண்ணீர் போல நீர்த்து போகும் அளவுக்கு செய்தால் முழு பலனையும் பெறலாம்.. அவ்வளவு நேரம் செய்ய இயலாதவர்கள் 15 நிமிடம் செய்தால் கூட போதுமானது. (ஆயில் புல்லிங் பற்றி எமது இன்னொரு பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்...) பின் பல் தேய்த்து விட்டு கிரீன் டீ, (அ) சுக்கு காபி குடிக்கலாம். .. புகை, மது இரண்டும் அறவே கூடாது... குறைந்தது அரைமணி நேரமாவது தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பசித்தால் உடனே சாப்பிட வேண்டும்...பசித்து சாப்பிடாமல் இருப்பதும், நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பசிக்காமல் சாப்பிடுவதும் என இரண்டுமே தவறு தான்.

தாகமே இல்லாமல் இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தேவையே இல்லாமல் தண்ணீர் குடிக்கவே கூடாது. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்தால் போதுமானது.

வெளி இடங்களுக்கு சென்றால் சிறுநீர், மலம் போக வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கழிவறை நன்றாக இருக்காது என்று அடக்கி கொண்டு இருந்தாலும் மிக பெரிய வியாதியை நாமே வரவழைத்துக் கொள்கிறோம் என்பது தான் உண்மையே.....

தினமும் நேரத்திற்கு தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்...பகல் தூக்கம் அறவே கூடாது...

மேலும் காலை நன்றாக உணவு உண்ணலாம்...ஓட்ஸ், கோதுமை ரவை, மக்காச்சோள ரவை, இட்லி, சிவப்பு அவல் என தினமும் ஒரு உணவை சேர்த்துக்கொள்ளலாம்....

மதியம் முக்கால் வயிறு உணவாக கொஞ்சம் சாதமும், பச்சை காய்கறிகள், கீரை வகைகள் ,ரசம், மோர் என உண்ணலாம்.....

இரவு 7.3௦0 லிருந்து 8 மணிக்குள் இரண்டு வாழைப்பழம் (அ) ஒரு ஆப்பிள் (அ) ஒரு மாதுளை (அ) ஒரு மாம்பழம் (அ) ரெண்டு கொய்யாபழம் (அ) கொஞ்சம் பப்பாளி (அ) ரெண்டு இட்லி (அ) ஒரு டம்ளர் ஓட்ஸ் கஞ்சி என மிக குறைவான அளவு உணவே உண்ண வேண்டும் .....

ஏதோ ஒரு வேலை இருந்து அதை முடித்து விட்டு தூங்க போகலாம் என்று இருந்தால் அந்த வேலை முடியும் போது நமக்கு தூக்கம் போய் வெகுநேரம் ஆகி இருக்கும். என்றாவது சில நாட்கள் கொஞ்ச நேரம் தவறி படுக்கலாம்....ஆனால் தினமும் நேரத்திற்கு தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும்...பகல் தூக்கம் அறவே கூடாது... தூங்க செல்லும் நேரம் அதிக பட்சமாக இரவு 1௦ மணி (அ) அதற்கு முன்னும் இருக்கலாமே ஒழிய அதற்கு பின் இருக்கவே கூடாது...

இதற்கு நடுவில் காலை அல்லது மாலை நேரங்களில் பசித்தால் பழச்சாறு அருந்தலாம்...பழங்களை பிழிந்து சாறு எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குடிப்பது நல்லதில்லை. கூடுமானவரை பழங்களின் தன்மை மாறாமல் முழு பலன் கிடைக்க அவற்றை கழுவி அப்படியே (அ) தோலுரித்து சாப்பிட்டால் மிக்க பலன் கிடைக்கும்....

இதோடு முளை கட்டிய தானியங்கள் (கருப்பு சுண்டல், பச்சை பயிறு, கொள்ளு வேக்கடலை, கோதுமை) கொஞ்சமாக எடுத்து கொள்ளலாம்...பல் இல்லாதவர்கள் முளை கட்டிய தானியங்களை ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம்..

நம் உணவு மற்றும் தூங்கும் முறையிலே தான் நம் உடல் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது......உடலின் தேவைகளையும், இயற்கை முறைகளையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப முறை இல்லாமல் மாற்றிக் கொள்வதே எல்லா வியாதிகளும் வர காரணம்...

கிரீன் டீ


இந்த டீ குடிப்பதால் என்ன பலன்?
கிரீன் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும். மற்ற டீ போல கொதிக்க வைக்கவோ.... பால் சேர்க்காவோ தேவையில்லை. தேவைக்கு தேனோ அல்லது பனங்கற்கண்டு சேர்த்தோ அருந்தலாம் ...
கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பை (அ) இலையை சில நிமிடங்கள்(மூன்று நிமிடங்கள்) வைத்து வடிகட்டி அருந்தலாம்...
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல்..... மார்பகம், கல்லீரல், நுரையீரல், தொண்டை வயிறு, குடல் மற்றும் ரத்தப்புற்று நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.... சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் கிரீன் டீ உபயோகிப்பதால் உலகளவில் மற்ற நாட்டினரை விட புற்றுநோய்க்கு ஆளாவது இவ்விரு நாட்டிலும் மிகவும் குறைவே.
இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் பற்களை பாதுகாப்பதோடு இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையாகவும் ஆரோக்கியமாவாகவும் வாழவைக்கிறது.....
தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையைச் சீராக்குவதுடன், மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.........
இரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சர், முகப்பரு, வறண்ட சருமம்(dryskin), தோலில் ஏற்படும் அலர்ஜிகள், மனஅழுத்தம், சர்க்கரை நோய், போன்ற வியாதிகளில் இருந்து நம்மை காக்கிறது...
எலும்புகளுக்கு உறுதியையும் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்கிறது.
கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.....
Photo: கிரீன் டீ 
*******
இந்த டீ குடிப்பதால் என்ன பலன்?
கிரீன் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும். மற்ற டீ போல கொதிக்க வைக்கவோ.... பால் சேர்க்காவோ  தேவையில்லை. தேவைக்கு தேனோ அல்லது பனங்கற்கண்டு சேர்த்தோ அருந்தலாம் ... 
கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பை (அ) இலையை சில நிமிடங்கள்(மூன்று நிமிடங்கள்) வைத்து வடிகட்டி அருந்தலாம்... 
    கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல்..... மார்பகம், கல்லீரல்,  நுரையீரல், தொண்டை வயிறு, குடல் மற்றும் ரத்தப்புற்று நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக  திகழ்கிறது.... சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் கிரீன் டீ உபயோகிப்பதால் உலகளவில் மற்ற நாட்டினரை விட புற்றுநோய்க்கு ஆளாவது இவ்விரு நாட்டிலும்  மிகவும் குறைவே.
இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் பற்களை  பாதுகாப்பதோடு இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையாகவும் ஆரோக்கியமாவாகவும்  வாழவைக்கிறது.....
தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையைச் சீராக்குவதுடன், மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது.........
இரத்த அழுத்தம், பக்கவாதம், அல்சர், முகப்பரு, வறண்ட சருமம்(dryskin), தோலில் ஏற்படும் அலர்ஜிகள், மனஅழுத்தம், சர்க்கரை நோய், போன்ற வியாதிகளில் இருந்து நம்மை காக்கிறது... 
எலும்புகளுக்கு உறுதியையும் , நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்கிறது.
கிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.....

தண்ணீர்!!!!

ஒருவரின் உடல் ஆரோக்கியதிற்கு குடிநீருக்கே முதற்பங்கு இருக்கிறது. 5௦% நோய்கள் உண்டாக காரணமே குறைந்த அளவு (தாகம் எடுத்தால் கூட குடிக்காமல்) தண்ணீர் குடிப்பதே ஆகும்.

எப்போதும் தண்ணீரை அமர்ந்தே குடிக்க வேண்டும்..நின்று குடித்தால் கணுக்கால் வலி உண்டாகும். இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் தண்ணீர் நேரே குடற்பாதையில் இழுக்கப்பட்டு தசைப்பிடிப்பு ஏற்படும்
தண்ணீர் எந்த கலப்படமும் இல்லாமல் இருந்தால் தான் மட்டுமே அது அனைத்து செல்களுக்கும் “ஆஸ்மோஸிஸ்” (Osmosis) என்ற முறையில் சென்றடையும்.

உணவு உண்பதற்கு முன்பும் , உண்ட பின்னும் ½ மணிநேரம் இடைவெளி விட்டு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணும் போதும் இடையில் தண்ணீர் குடிக்க கூடாது. அப்போது தான் உணவு சரியான முறையில் ஜீரணமாகும். ஏனெனில் தண்ணீர் ஜீரணத்திற்கு தேவையான அமிலங்களை நீர்த்து போக செய்து விடும் .

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கால் மேல் கால் ஏன் போட கூடாது?


பொதுவாக பெண்கள் அதுவும் திருமணமாகாத பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரவோ (அ) தூங்கவோ கூடாது .
இதனால் வெள்ளை படுதல் மற்றும் முறையில்லா மாதவிடாயும் உண்டாகும்.

ஆண்களுக்கு விதைப்பை (Testes) அழுத்தம் ஏற்பட்டு விந்தணுக்கள் உற்பத்தி தடைபடும்......