வியாழன், 19 நவம்பர், 2015

http://www.dinamalar.com/supplementary_detail.asp…
நான் எழுதுகின்ற உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான செய்திகள் அனைவரையும் சென்றடைய பாதை அமைத்துக்கொடுத்த தினமலர் நிறுவனத்தாருக்கும், ஆதரவளித்த உங்களுக்கும் நன்றிகள்.
தொடர்ந்து படித்து- படித்ததை செயல்படுத்தி ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள். 
காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, மலேரியா குணமாக.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஏழை-பணக்காரர், கிராமம்-நகரம், குடிசை-மாடி வீடு என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாவற்றையும் “வெள்ளம்” என்ற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தெருவில் நிறுத்தி இருக்கும் மாமழை, சாக்கடை-நல்லநீர் என்ற வித்தியாசமும் இல்லாமல் செய்திருக்கிறது.
அரசும், அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் , பொதுமக்களும் பாதிக்கப்பட்டோரை வெள்ளத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இப்போதைய நேரடி பாதிப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல வெள்ளம் வடிந்தபின் வரப்போகும் ஆரோக்கிய பிரச்சினைகளும்.
எங்கும் நிறைந்திருக்கும் சாக்கடை கலந்த நீர் ஆங்காங்கு தேங்கி கொசுக்களின் சொர்க்கமாய் மாறிவிடும். கொசுக்கள் மிகவும் ஆனந்தமாக மலேரியா முதல்- டெங்கு வரை நோய்களை பரப்பும்.
இந்த நேரத்தில் பொதுமக்கள் கூடுதல் விழிப்புடனும், அக்கறையுடனும் இருக்க வேண்டும். தேங்கி இருக்கும் நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தேங்காய் சிரட்டை முதல், விளையாட்டு பொம்மைகள், டயர்கள் என எங்கே சிறிதளவு நீர் தேங்கி இருந்தாலும், அதனை அலட்சியம் செய்யாமல் வெளியேற்ற வேண்டும்.
காய்ச்சல் வருவது போல தோன்றினால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் இருந்தால் நிலவேம்பு கஷாயம் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை என ஒரு நாளில் நான்கு முறையும், விட்டு விட்டு காய்ச்சல் இருந்தால் பப்பாளி இலை சாறு 2 டீ ஸ்பூன் மூன்று நாளைக்கு வெறும் வயிற்றில் காலை உட்கொள்ள, சாதாரண காய்ச்சல் முதல், உயிர் கொல்லும் மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்கள் கூட குணமாகும்.
கவனம் ஆரோக்கியமே முதல் மூலதனம்...
வாழ்க வளமுடன்.
வெண் புள்ளி (Leukoderma)
* * * * * * * * * * * * * * * * * * * * *
தன்னுடைய தாய் தன்னுடைய சாப்பாட்டு தட்டை கழுவி வீட்டிற்கு வெளியே வைத்ததை பார்த்த மகன் (குடும்பத்தில் மற்ற அனைவரின் சாப்பாட்டு தட்டுகளும் வீட்டிற்கு உள்ளே வைக்கப்படும்) மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்.
பெற்ற தாயே இந்த ஒரு மகனை மட்டும் வேறுபடுத்தி, ஒதுக்கி வைக்க காரணம் என்ன தெரியுமா?? லூக்கோடெர்மா என்று சொல்லக்கூடிய வெண்புள்ளி, வெண்குட்டம், வெண்படை எனவும், ஆங்கிலத்தில் "மெலனின் நிறமி குறைபாடு"
இதற்கு இது யாரிடமிருந்தும் யாருக்கும் தொற்றாது. பரம்பரை பாதிப்பும் கிடையாது. அதனால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அதைப் பற்றி இங்கு மக்களிடையே பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள் தான் அதிகம். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் உலக அளவில் 2 சதவிகித மக்களும், இந்தியாவில் 4 சதவிகித மக்களும் என தகவல்கள் கூறுகின்றன.
மனித மனங்களை பெரிய அளவில் தாக்கும் ஒரு சில வியாதிகளில் மிக முக்கியமானது வெண் புள்ளி (leukoderma). நித்ய கண்டம், பூரண ஆயுள் என்பார்கள், அதுபோல மரணபயமில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் ஒருவித மன அழுத்தத்தை இந்த வியாதி உருவாக்கி தினசரி மனத்தால் மரணத்தை சந்திக்க கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.
நமது உடலில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால் தான் வெண்புள்ளிகள் உருவாகிறது. இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, எதிர் வினையை ஏற்படுத்துவதால், நிறப்பொருள் அணுக்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும், நிறப்பொருள் அணுக்கள் தம்முடைய பணியைச் சரிவரச் செய்யாது.
இந்த நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தைராய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள், நீரிழிவு, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைவு, வைட்டமின் குறைபாடு ஆகியவைகளால் இவை உருவாகும்.
கதிரியக்க வலைக்குள் கட்டுப்பட்டு கிடக்கும் வாழ்க்கை முறையும், அசைவ உணவுகளுடன் பால் பொருள் உணவுகளை சேர்த்து சாப்பிடுவதும் மிக முக்கிய காரணங்கள். தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அதிகம் வருகிறது. அமீபியாஸ், குடல் நோய்கள், குடற் பூச்சிகள், இரத்தச்சோகை, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின் தாக்குதலாலும் இவை ஏற்படும். இந்தக் குறைபாடு எப்போதுவேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றலாம்.
பொதுவாகவே அசைவ சாப்பாடு உடலுக்கு அத்தனை நலம் பயப்பதில்லை என்றாலும். நம் வாழ்க்கை – உணவு முறை அசைவத்திற்கு நம்மை அடிமையாக்கியே வைத்திருக்கிறது.
ஆனால் அந்த அசைவ உணவுடன், சிக்கன்-மட்டன்-மீன் போன்ற உணவுகளை சாப்பிடும் போது பால்-தயிர் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் ஆபத்தின் அளவை குறைக்க முடியும். நம் முன்னோர்கள் நமக்கு பலவழிகளில், பலமுறை இவ்வுணவு முறைகளை அறிவுறுத்தி இருந்தாலும், நாம் அவர்களின் கூற்றுகளை புறக்கணித்ததின் விளைவே இந்நோய்.
படுப்பதற்கு முன் குழந்தைகள் பால் குடித்தால் நல்லது என்று யாரோ கிளப்பி விட்ட வதந்தியை பிடித்துக்கொண்ட நம்மூர் மக்கள், இரவில் வறுத்த-பொறித்த மீன்- இறைச்சிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு, சற்று நேரத்திற்குள்ளாகவே பாலையும் காய்ச்சி குடிக்க கொடுப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு பதிலாக வெண்புள்ளி நோயை விருந்து வைத்து அழைப்பது போலாகும். ஒருமுறை இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி விட்டால் அதை குணப்படுத்துவதற்கு எத்தனையோ செலவுகள் செய்து இரசாயண மருந்துகளை உட்கொண்டும் கூட, நோய் முற்றிலும் குணமாகாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுபவர்களை கண்கூடாக காண்கிறோம்.
இந்த நேரத்தில் இன்னொரு தகவலையும் பதிவு செய்தே ஆக வேண்டும். இன்றைய உலகின் பெரும்பாலான மருத்துவ கண்டுபிடிப்புகள் இராணுவ தேவைகளுக்கான ஆராய்ச்சியின் பலனே ஆகும். யுத்தகால ராணுவ உதவிக்காக ராணுவ-மருத்துவ ஆய்வு துறை கண்டுபிடித்து, பின்னாளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களே அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.
அந்த வகையில் இந்த வெண்புள்ளி நோயால், தினம் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக, மிக குறைந்த செலவில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், நோய் முற்றிலும் குணமாகக் கூடிய மருந்தை நம் நாட்டு "மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்" கண்டுபிடித்திருக்கிறது. பக்கவிளைவுகளே இல்லாமல் என்ற உடன் நீங்கள் நம் பாரம்பரிய மூலிகைகளை நினைத்தால்... உங்கள் புரிதலும்- தெளிவும் முற்றிலும் சரியானது.
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்து முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆங்கில மருந்தை நீண்ட நாள் சாப்பிட்டு வருபவர்களுக்கு அதில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், மூலிகை மருத்துவத்தில் ஆரோக்கியம் மட்டுமே உங்களிடம் மீட்டு அளிக்கப்படும். இலவச இணைப்பாக வேறு எந்த பக்க விளைவுகளையும் இணைப்பதில்லை.
உடலியக்கத்தைச் சீராகச் செயற்பட வைப்பது தான் இதற்கான சரியான சிகிச்சைமுறை. இந்த நோய்க்கான சிகிச்சையை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத மூலிகை - இயற்கை வைத்திய முறைகளை மட்டுமே பயன்படுத்தி, நிரந்தர குணமாக்கும் சேவையை மிக குறைந்த செலவில் வழங்குகிறது எங்களின் "பீனிக்ஸ் ஹெல்த் கேர்" நிறுவனம். 
“ பீனிக்ஸ் ஹெல்த் கேர்” "PHOENIXX HEALTH CARE"
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அக்குபஞ்சர் சிகிச்சை முறை மற்றும் பாரம்பரிய உணவு முறைகளால் மட்டுமே பக்கவிளைவுகளற்ற மருத்துவத்தை மக்களுக்கு கொடுத்து ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், தக்கவைக்கவும் முடியும் என்பதே என்னுடைய மாறாத நம்பிக்கை.
இந்த நம்பிக்கையின் அடுத்தகட்டமாக உடல்நலனில் பாதிப்படைந்தவர்களுக்கு நிரந்தர தீர்வளிக்கும் நோக்கத்துடனும் , மருந்தில்லா மருத்துவமுறைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் எண்ணத்துடனும், உணவே மருந்து என்பதின் அவசியத்தை வலியுறுத்தும் நல்லெண்ணத்தில் சென்னை – வடபழனி, நூறடி சாலையில் அமைந்துள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டல் எதிரில்
“ பீனிக்ஸ் ஹெல்த் கேர்”
என்ற பெயரில் ஒரு உடல்நல பாதுகாப்பு மையத்தை திறக்க இருக்கிறோம்.
இரத்த கொதிப்பு, சர்க்கரை, தலைவலி இது போன்ற பல நாள்பட்ட ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டவர்கள் தகுந்த ஆலோசனையும், அக்குபஞ்சர் சிகிச்சையும் பெற்று நிரந்தர குணம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
மருந்தில்லா மருத்துவம். நிரந்தர ஆரோக்கியம்.
அன்புடன்,
“நலம் வாழ” ஈஸ்வரி,
அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர்.
நாயுருவி இலை குழம்பு
---------------------------------------------
நாயுருவி இலை - ஒரு கைப்பிடி,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - பத்து பல்,
புளி - எலுமிச்சை அளவு,
குழம்பு மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
உப்பு, மஞ்சள் பொடி - தேவையான அளவு,
எண்ணெய் - தாளிக்க.
மண்சட்டியில் அரைடீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் நாயுருவி இலையை வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து, விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சப்பொடி சேர்த்து, மண்சட்டியில் எண்ணெய் விட்டு தாளித்து, பின் இந்த கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மிளகாய் தூள் வாசம் போனதும் இறக்கி விடலாம்.
குழம்பு கொதிக்கும் போதே வாசம் சாப்பிட தூண்டும். சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். உண்ட உணவு இரண்டு-மூன்று மணி நேரத்துக்குள் சீராக செரிமாணம் ஆகி இருப்பதை உணராலாம்.
சரியான செரிமாணம் இல்லாதவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பாருங்கள். மிகவும் எளிதான செய்முறை கொண்ட இம்மூலிகையின் பலன்களை ஏற்கனவே
பதிவில் கூறி இருக்கிறேன்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நாயுருவி (Achyranthes aspera)
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண் - சித்தர் கூற்று.
கிராமபுறங்களில் கொல்லைக்காடுகளிலும், நகர்ப்புறங்களில் சாலையோரங்களிலும் வெகு சாதாரணமாய் தென்படும் இந்த நாயுருவி (Achyranthes aspera) ஒரு வெகுசக்தி வாய்ந்த மருத்துவ மூலிகைகச் செடியாகும்.இது ஒரு குத்துச்செடி வகையை சார்ந்தது.
எல்லா இடங்களிலும் தானே வளரும் தன்மை கொண்ட நாயுருவிச் செடியில் அரிதான மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றது. எப்போதும் போல நல்லவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லைதானே.
நீள நீளமான குச்சிகளில் கீழ்நோக்கியபடி ஒட்டவைத்த நூற்றுகணக்கான அரிசிகள்தான் இதன் விதைகள். ஏதேனும் சிறு விலங்குகள் இந்த செடியை உரசியபடி ஓடும்போதோ, மனிதர்கள் இந்த செடியை உரசியபடி கடக்கும் போதோ இந்த விதைகள் அவற்றுடன் ஒட்டிக்கொண்டு விடும். அந்த விதை நன்கு காய்ந்த பின் உதிர்ந்தும் விடும். இந்த செடியின் விதைகள் பரவுவதற்காக இயற்கை அமைத்த வழிதான் இது.
இதில் செந்நாயுருவி, கருநாயுருவி, வெண்நாயுருவி என மூன்று வகைகள் இருக்கின்றன. இந்த மூன்று வகைகளுமே மருத்துவ குணம் சார்ந்தது என்றாலும் கருநாயுருவி ("கரு"நாயுருவி) தான் கிடைத்தற்கரியது. கருநாயுருவி கஷாயத்தை கர்ப்ப காலத்தில் மூன்று வேளை கொடுத்தால் சுகப்பிரசவம் ஆகும் என்கிறது சித்தர்களின் மூலிகை ஆராய்ச்சி முடிவுகள்.
சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம் என்று பல பெயர்களில் இந்த மூலிகை சித்தர்களின் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.
மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, பாறையில் துளையிட்டு வளரும் ஆற்றல் பெற்றது. இதனால் இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு.
இந்த செடியின் வேரை வாயினுள் சில மணி நேரங்கள் வைத்து இருந்தால் நா வன்மை பெருகுமாம். நாவுருவி என்ற இதன் உண்மையான பெயர் மருவி நாயுருவி ஆகி இருக்கலாம்..
நாயுருவியின் இலை முதல் வேர் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. மனிதனின் சிறுநீரக உறுப்புகளை சரிவர இயங்கச் செய்யும். நோய்களை நீக்கி உடலைத் தேற்றும். தேவையற்றச் சதைகளை நீக்கும். நரம்புகளை சரிவர இயங்கச் செய்யும். இதுவே இவற்றின் பொதுவான மருத்துவ குணங்கள் ஆகும்.
நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். (நாயுருவியுடன் கிராம்பு, வேம்பு, சுக்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஏல அரிசி, கருவேலப்பட்டை, இந்துப்பு போன்றவற்றைச் சேர்த்து பற்பொடியும் தயாரிக்கலாம்.)
நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கினால் கறைகள் இல்லாமல், பற்கள் பளிச்சென்ற வெண்மை நிறம் பெறும்.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி, பற்களில் உண்டாகும் கூச்சம், சொத்தை, ஈறுகளில் உண்டாகும் வலி, வீக்கம் என வாய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும், நீக்குவதுடன் பற்களை பளபளவென மின்னச் செய்யும்.
நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பற்களோடு சேர்ந்து முகம் அழகு பெறும். வசீகரம் கூடும். வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். மனசக்தி அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
முகம் பொலிவு பெற்று, பேச்சில் தெளிவு கூடும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் தன்னம்பிக்கை பெருகும். தன்னம்பிக்கை பெருக பெருக அது ஏற்படுத்தும் சக்தி அலைகள் மற்றவரை வசியம் செய்யும். அதனால் இதை ஒரு வசிய மூலிகை என்றும் கூறலாம்.
மேலும் நாயுருவி செடியின் இலை முதல் வேர் வரை மருத்துவ மகிமைகள் கொட்டிக் கிடக்கின்றன. இம் மூலிகையைக் கொண்டு நம் சித்தர்கள், முன்னோர்கள் அதீத பசி, மூலம், கண் நோய்கள், பல், ஈறு சம்பந்தப்பட்ட வியாதிகள், காதில் சீழ் வடிதல், இருமல், அனைத்து வகையான காய்ச்சல்கள், இருமல், பேதி , மலசிக்கல், மூலம், நீர்கட்டுபோன்ற வியாதிகளில் இருந்து எளிய முறையில் தீர்வும் கண்டுள்ளனர்.
சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், இரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்ற மனிதர்களை மிரட்டும் வியாதிகளில் இருந்தும் முழுவதுமாய் குணமாக்கும் ஆற்றல் மிக்கது இந்த நாயுருவி.
மாதவிடாய்க் கோளாறுகள் ,வெள்ளைப்படுதல், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், வெப்பக்கட்டிகள், தேமல், படை, சொறி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இம்மூலிகைப் பயன்படுகிறது. உடம்பில் நீர் கோர்த்தல், ஊதுகாமாலை, நீரிழிவு நோய், ஆறாத புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள், விஷக்கடி போன்றவையும் முற்றிலும் குணமடையும்.
மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு போன்ற மனம், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்தும் அதிசயத்தக்க வகையில் பூரண குணம் பெறலாம்.
இதன் விந்தையான குணத்தால் சித்தர்கள் இரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளனர். நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டு, பசியையும், உணவையும் தவிர்த்து, காட்டிலேயே மனிதர்கள் கண்ணில் படாமல் இருக்க அவர்கள் மேற்கொண்ட எளிய வழிகளில் இதுவும் ஒன்றாம்.
மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, உடல் இரும்பைப் போல் உறுதியாகும். யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு, முக வசீகரம் ஆகியன உண்டாகும்.
நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும்.
நாயுருவி இலையை வதக்கி மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து வைக்கும் குழம்பு மிகவும் அருமையான ருசியில் இருக்கும். யார் வைத்தாலும் அம்மாவின் கைமணம் கட்டாயம் இருக்கும். வாரம் ஒரு முறையாவது இதை உட்கொண்டு வந்தால், இம் மூலிகை தன்னுள்ளே கொண்டுள்ள மருத்துவ குணத்தால் உடல்நலனை பாதுக்காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
உட்கொண்டாலும் மருந்து, அரைத்து பூசிக்கொண்டாலும் மருந்து.
அதுமட்டுமல்ல காய்ந்த செடிகளை எரித்து அதன் புகையை சுவாசித்தாலும் அதுவும் மருந்து. எறிந்த சாம்பலை குழைத்து பூசினாலும் மருந்து.
இந்துக்களின் பூஜை முறைகளில் ஹோமம் வளர்க்கும் முறையில் ஆல், அரசு குச்சிகளுடன் நாயுருவியும் இருப்பதை நாம் கண்டிருப்போம். ஆம். இது ஒரு தேவ மூலிகை.
ஃபார் எக்ஸ்டெர்னல் யூஸ் ஒன்லி என்று எச்சரிக்கை தாங்கிவரும் இரசாயண மருந்துகளை தவிர்த்து நாயுருவி போன்ற இயற்கை கொடுத்த சீதனங்களை உபயோகிப்பதன் மூலம் பக்கவிளைவுகளை தவிர்த்தும், உடலுக்கு வலுவூட்டியும் ஆரோக்கியம் காக்கலாமே!!!
ஓரிரு தொட்டிகளிலோ, காம்பவுண்ட் /வேலி ஓரத்திலோ ஓரிரு செடிகள் வளர்த்தால் போதுமானது. உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து கூண்டு அமைத்து, உரம் போட்டு எல்லாம் வளர்க்க வேண்டிய கட்டாயமில்லை.
மக்கள் நலனிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கும் இந்த அற்புத மூலிகைக்கு கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், எப்போதாவது கொஞ்சம் இயற்கை எருவும் போனால் போகிறதென்று கொடுங்கள்.
இனி வேறொரு அரிதான மூலிகையோடு சந்திக்கறேன்.
மூலிகைகள்- சிறு தேடல்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
சித்தர்கள் இயற்கையில் விளைந்த மூலிகைகள் மூலம் மனித இனத்தை நோயில்லாமல் பாதுகாக்கவும், மனிதர்களைத் தாக்கும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தவும், பல அரிய நூல்கள் மூலம் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
சிறு வயதில் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் மூலிகைகளை கண்டும், உண்டும் இருக்கலாம். இப்போது மூலிகைகளின் பெயர்களை கேட்கத்தான் முடிகிறது. பார்ப்பது, உண்பது எல்லாம் அரிதாகி விட்டது. நம்மில் பலர் அதை கண்ணால் கூட கண்டதில்லை.
சித்தர்கள், முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்திச் சென்ற பல அதிசய மருத்துவ மூலிகைகளின் பலன்களை நம்மில் உணர்ந்தவர்கள் எத்தனை பேர்???
குழந்தைப் பருவத்திலிருந்தே இனம் புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் இன்று மனித இனம் சிக்கித் தவிப்பது மறுக்க முடியாத உண்மை. நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்ததைப் போல் நாமும் வாழ்கிறோமா என்ற கேள்வி நம்முள் வராமல் இல்லை.
இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம். நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை, அதன் அருமை, பெருமை புரியாமல் தவிர்த்து விட்டு, இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது, மூலிகைகள் எதுவுமே நம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இல்லை.
இதற்கு தீர்வு தான் என்ன?
இனி வரும் காலங்களில் நம் வீடுகளில் பத்து மூலிகை செடிகளையாவது வளர்த்து, நோயில்லா உலகைப் படைப்போம்.