பெரும்பாலானோரின் காலை மற்றும் இரவு உணவில் தவறாமல் இடம் பிடித்துவிட்ட ஒரு விஷம் தான் மைதா.
நூடுல்ஸ், பரோட்டா, பாஸ்தா, பர்கர் முதல் பேக்கரி ஐட்டங்கள் வரை எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு பொருள். விளம்பரங்களில் வைட்டமின்கள் உள்ளது, மினரல்கள் உள்ளது என்றெல்லாம் சொல்லப்படும் உணவுகளில் எல்லாம் அவர்கள் சொல்வது போல வைட்டமின்களும் மினரல்களும் இருக்கிறதோ இல்லையோ மைதா இருக்கிறது.
இந்த மைதாவை நாம் ஏன் வெள்ளை விஷம் என்று சொல்கிறோம்??
இந்தியாவில் தான் அதிகமாக மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; மைதா மாவில் சத்துப் பொருட்கள் கிடையாது. மஞ்சள் நிறத்தில் வெளி வரும் மைதாவை பளிச்சென்று வெள்ளை நிறம் வருவதற்கு போடப்படும் இரசாயனம் என்வென்று தெரிந்தால் பதறித்தான் போவோம். மைதாவில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் முறையே சோடியம் மெட்டா பை சல்பேட்(sodium meta bi sulphate), பென்சாயிக்(benzoic), சிட்ரிக் அமிலம்(citric acid), அல்லோக்சான் (Alloxen) (அ) குளோரின் டை ஆக்ஸைடுடின் என சேர்க்கப்படும் இரசாயன பொருட்கள் அனைத்துமே மனித வாழ்க்கையை அழிக்க வந்தவைகள் என்றாலும், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் மோசமான விளைவுகளை சந்திக்க வைக்கும்.கோதுமையை நன்கு தீட்டி அரைக்கப்படும் மாவே மைதா. மாவு அரைக்க கோதுமையை தீட்டும்போதே, 76 சதவீத வைட்டமின்களும், தாதுப் பொருட்களும், 97 சதவீதம் நார் சத்தும் போவதால் உணவு எளிதில் செரிமானம் ஆகாது.
மைதா மாவை மிருதுவாக்க சேர்க்கப்படும் அல்லோக்சான் (Alloxen) (அ) குளோரின் டை ஆக்ஸைடுடின் எனும் வேதிப்பொருள், வேதியியல் ஆய்வின்படி கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்து விடுகிறது. கணையம் செயலிழந்து சர்க்கரை நோய் உண்டாக்குகிறது. பென்சாயில் பெராக்சைடு (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருள் தலைமுடியை கருப்பாக்க ஹேர் டையில் சேர்க்கப்படுவதுடன் துணிகள் உற்பத்தி செய்யும் ஆலைகளில் துணி நிறம் மாற்ற உபயோகப்படுத்தப்படுகிறது. இது பிரிராடிகல் எனப்படும் புற்றுநோய் தோற்றுவிக்கும் காரணியாகவும் செயல்படுகிறது. இந்த பவுடர் கொஞ்சம் எடுத்து நீரில் கலந்தால் தீப்பொறிகள் தோன்றும். நம் தோலை பாதிக்கும் தன்மை கொண்டது. இத்தனை மோசமான இரசாயனங்கள் தான் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் மைதா மாவில் சேர்க்கப்படுகிறது. கேரளாவில் பெருகி வருகின்ற இதயநோய் மற்றும் கேன்சருக்கு அவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் மைதாவில் உள்ள அலாக்சான் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகராக உள்ளது.
பொதுவாக பேக்கரியே தீங்கு விளைவிக்க கூடிய இரசாயனங்களின் கூடம் தான் . பேக்கரி தொழில் செய்பவர்களை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லச்சொன்னால் அவர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்... ஆனால் வியாபாரம் என்று வரும்போது நாடாவது, மக்களாவது. நலன் என்பதை விட பணம் என்ற ஒன்றின் பின்னால் நாடே செல்லும் போது அவர்கள் மட்டும் எம்மாத்திரம். 90% சதவீதம் பேக்கரியில் செய்யப்படும் உணவு வகைகள் அனைத்துமே மைதவால் தான் உருவாகின்றன.
பரோட்டா, ஃஃபிரைட் ரைஸ், சூப், நூடுல்ஸ், பர்கர், பீசா இன்னும் நம் வாய்க்குள் நுழையாத ஃபாஸ்ட்புட் அனைத்து உணவுப் பொருட்களிலும் மைதா தான் உபயோகிக்கிறார்கள். பேக்கரியில் தயாராகும் பிரட், பிஸ்கட், சமோசா, ஃபப்ஸ், அனைத்து வகை கேக்குகளும் மைதாவால் ஆனது தான்.
வெறும் மைதா, தண்ணியை மட்டும் சேர்த்து செய்தால் அந்த உணவுப்பொருளில் சுவை கிடைக்காது. அதனால் ஏற்கெனவே விஷமான மைதாவுடன் மேலும் மேலும் விஷம் சேர்க்கப்படுகிறது.
தயாரிக்கும் உணவுக்கு ஏற்ப, பலவகையான கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. சுவையூட்ட சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் முறையே பெயிண்ட் உற்பத்திக்கு தேவையான பெட்ரோலியம் பை ப்ராடுக்ட்ஸ், மினரல் ஆயில்(mineral oil), சுவைகூட்டிகள், அஜினோமோட்டோ, பதப்படுத்திகள்(preservativ
இப்படி பட்ட பல வேதிப்பொருட்களை சேர்த்தால் தான் சுவையே கிடைக்கும். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு கூடும். சர்க்கரை நோய், இதய நோய் வரும். இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், இன்சுலினை உற்பத்தி செய்து சீராக வெளியிடும் பீட்டா செல்லை சேதப்படுத்தும். மேலும் கணையத்தை பாதிக்கும். பல முக்கியமான வேலைகளை செய்யும் கணையம் பாதிக்கப்பட்டால் அவர்களை நீரிழிவு நோய் தாக்கும். உடல் எடை அளவில்லாமல் கூட்டும். மைதா உணவை உட்கொள்ள உட்கொள்ள இடுப்பின் சுற்றளவு அதிகரிக்கும்...
சர்க்கரை நோயாளிகளை கோமா நிலைக்கு கொண்டுசெல்லும் ஆற்றல் பெற்றது இந்த மைதா! இதய நோய்கள், சிறுநீரக கல், குருட்டுத்தன்மை, மூட்டு ஊனம்(limb amputation) என மிக மோசமான வியாதிகளின் சொந்தக்காரர் தான் நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து விட்ட மைதா.
கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்டு கோதுமை மாவை விட கோதுமையை நாமே வாங்கி அரைப்பது தான் சிறந்தது. . உணவில் கேழ்வரகு, கம்பு, திணை, சாமை, வரகு, குதிரைவாலி, எள், சிகப்பு அரிசி, பெருங்காயம், கசகசா போன்ற பொருட்கள் எல்லாம் உடலை வலுவாக்கியது. வாழ்வும் தந்தது. உணவு பழக்க வழக்கம் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் பெருகிவரும் நீரழிவு மற்றும் இதய நோய்க்கு காரணங்கள் பற்றி ஆய்வுகள் இப்படி உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும் நமது வாழ்க்கைக்கு எதிரியாக மாறுவதை உறுதிப்படுத்துகின்றன.
மேலும் இன்றைய சமுதாயத்தை அழித்து கொண்டும் வருகிறது மைதா. ஆரோக்கியமான நம் பாரம்பரிய உணவு வகைகளை உட்கொண்டு விஷத்தன்மை வாய்ந்த பரோட்டாவை புறம் தள்ளுவோம். தொன்று தொட்டு தமிழக மக்களின் உணவு பழக்கம் உணவே மருந்து என்ற நிலை மாறி வெளிநாட்டு உணவு முறையால் உணவே எமன் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றோம். நம்முள் நமக்கே தெரியாமல் விஷத்தை கலக்கும் மைதா உணவை அறவே தவிர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக